- Joined
- Jul 21, 2025
- Messages
- 544
- Thread Author
- #1
அத்தியாயம் 21B
மருத்துவ அறிக்கையை பார்த்த மருத்துவர், அவள் உடல் பலவீனமாக இருப்பதால் ஓய்வு தேவை எனவும், உணவில் காய்கறிகள் ,பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியதோடு கிருஷ்ணாவிடம் கண்களால் தான் கூறிய அறிவுரைகளை தொடருமாறு சைகை செய்ய, பதிலுக்கு அவனும் அப்படியே என்பது போல் அவனது இரு கண்களையும் மூடி திறந்து ஆமோதித்தான்.
இருவரும் வீட்டை அடையும் பொழுது ,இரவு மணி ஏழை கடந்திருந்தது.
சின்னம்மை இரவு சமையலை முடித்துவிட்டு தன்னுடைய வீட்டிற்கு கிளம்ப தயாராக வீட்டு வாயிலில் நின்று கொண்டிருக்க, ராதாவை கண்டதும், வீட்டிற்கு கிளம்புவதாக சைகை செய்துவிட்டு, கிருஷ்ணாவிடம் ஒரு வார்த்தை பேசாமல் கிளம்பிச் சென்று விட்டார்.
உணவு மேஜையின் மேல் இடியாப்பமும்,குருமாவும் சுட சுட தயார் நிலையில் இருக்க, தன்னவளை அமரச்செய்து பரிமாற ஆரம்பித்தான் கிருஷ்ணா.
அவன் பரிமாறியதும் அவன் முகத்தை கூட பார்க்காமல், வேகமாக உணவருந்த ஆரம்பித்தவள் , தட்டை காலி செய்தவுடன் தான் அவனை நிமிர்ந்தே பார்த்தாள்.
ஆனால் அவனோ கன்னத்தில் கை வைத்தபடி ,அவளையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்க,
அப்போதுதான் அவனை சாப்பிட சொல்லவில்லையே என்ற எண்ணம் உதிக்க, ஒருவித நாணத்துடன்
" ஐ அம் சாரி … நீங்களும் சாப்பிடுங்க.." என புன்னகைத்துக்கொண்டே தலை குனிந்தவளின்
புன்னகையை, அவன் ரசிக்க முயன்றாலும் ஏதோ ஒன்று அவன் மனதை அழுத்தியது .
நிறை மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இவளுக்கு எவ்வளவு பசித்திருக்கும்.
அதுவும் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே, வயிற்றில் இருந்த அனைத்தையும் வாந்தி எடுத்தவளாயிற்றே....
கிட்டத்தட்ட 2 மணி நேரம் எப்படித்தான் பசியைப் பொறுத்துக் கொண்டாளோ..
எனக்குப் பசிக்கிறது என்று ஒரே ஒரு வார்த்தை கூறி இருந்தால் மருத்துவமனை உணவகத்திலேயே ஏதாவது வாங்கிக் கொடுத்திருப்பேனே.. எப்பொழுது தான் அவளது கூட்டினை விட்டு வெளியே வர போகின்றாளோ...
நான் செய்த பிசகு இப்பொழுது என்னவளையும் என் குழந்தையுமே பாதிக்கிறதே ...
இதுவே மகி அக்காவோ அல்லது அம்மாவோ இங்கு இருந்திருந்தால் , அவள் வாந்தி எடுத்த அடுத்த நொடியே அவளுக்கு பசிக்கும் என்றறிந்து, ஏதாவது சாப்பிடக் கொடுத்திருப்பார்கள் ... இதற்குத்தான் அனுபவம் வேண்டும் என்பதோ ....என தனக்குத்தானே உரையாற்றிக் கொண்டவன்
அவளது தட்டில் மேலும் இரண்டு இடியாப்பத்தை வைத்து சாப்பிடச் சொல்ல, மறுப்பேதும் கூறாமல் சாப்பிட்டு முடித்தாள்.
அவளை அவன் நன்கு அறிவான் ..
ஒரே ஒரு தோசையை அரைமணிநேரம் சாப்பிடுபவள், இன்று ஐந்தே நிமிடத்தில், நான்கு இடியாப்பத்தை சாப்பிட்டு முடித்ததை வைத்தே, அவளது பசியை உணர்ந்து உருகிப் போனான் .
இனிமேல் எங்கு சென்றாலும் முதலில் அவளை சாப்பிட வைக்க வேண்டும் என்பதை மனதில் குறித்துக் கொண்டு சாப்பிட்டு முடித்தவளை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு, தனக்குத் தானே பரிமாறிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தவனுக்கு மனைவியின், அதுவும் கர்ப்பிணியின் சம்பாத்தியத்தில் சமைத்த அந்த உணவானது ,அந்த ஆண்மகனின் தொண்டைக்குள் இறங்க மறுக்க, ஏதோ நினைத்தபடி உணவை உண்ணாமல், உட்கார்ந்திருந்தவனைப் எதேச்சையாக பார்த்தவள் வருந்தியபடி
" நாளைக்கு சின்னம்மை கிட்ட சொல்லி உங்களுக்காக நான்- வெஜ் தயார் பண்ண சொல்றேன் ...." என்றாள் வெள்ளந்தியாக.
இவள் என்னுடைய செய்கையையும் பார்வையையும் என்றுதான் சரியாக புரிந்து கொள்ளப் போகின்றாளோ என உள்ளுக்குள்ளேயே நொந்தபடி
" எனக்கு நான்வெஜ் எதுவும் வேணாம், நீ என்ன சாப்பிடறயோ, அதையே நான் சாப்ட்டுகிறேன் ..." என்றவன், இம்முறை உணவில் கவனம் செலுத்தி வேகமாக உண்டு முடித்தான்.
எப்பொழுதுமே என்னை பற்றியே யோசிக்கிறாளே, இவள் எப்பொழுது தன்னை பற்றி யோசிப்பாள் … என்றெண்ணியபடி ஸ்வெட்டர் பின்னி கொண்டிருந்தவளின் முகத்தை ஆர்வமாகப் உற்று நோக்கினான்.
வகுட்டில் காலையில் வைத்து லேசாக கலைந்த குங்குமம், படர்ந்த சந்தன நிற நெற்றியில் மெரூன் நிற சிறிய பொட்டு, குடை போல் விரிந்த இமை, கூர்மையான நாசியில் ஒற்றை வெள்ளைக்கல் மூக்குத்தி, ரோஜா பூவின் இளம் சிவப்பு நிறத்தை ஒத்த அதரம் என அவளை உள்ளுக்குள்ளேயே ரசித்துக் கொண்டிருந்தவனை வழக்கம் போல் அவன் மனையாட்டி, வேறு மாதிரியாக புரிந்துக்கொண்டு
" சாப்பிட்டு முடிச்சாச்சா, இருங்க நான் வந்து ,டேபுல கிளீன் பண்றேன்.. "
" நீ ரெஸ்ட் எடுத்துக்கோ நான் பாத்துக்குறேன் ... " என்றவன் ஐந்தே நிமிடத்தில் அனைத்து வேலைகளையும் முடித்து படுக்கையறைக்குள் நுழைந்தான்.
இருவரும் பேசிக் கொள்ளாமல், வீட்டில் மயான அமைதி நிலவினாலும் , இருவரின் மனதிலும் அதீத காதலும் நிம்மதியும் கொட்டிக் கிடந்தன.
அவள் பின்னி இருந்த நீல நிற ஸ்வெட்டர் மற்றும் வெள்ளை நிற லேசை பார்த்து,
தன்மான சிங்கத்திற்கு பையன் பொறக்கணும் ஆசை போல இருக்கு…
என எண்ணி மகிழ்ந்தவன், பயணக் களைப்பு மற்றும் வெவ்வேறு பிரச்சனைகளால் அலைக்கழிக்கப்பட்டு , உறங்குவதற்காக இருவர் படுக்கும் அந்த பெரிய கட்டிலில் ஒரு பக்கம் நீட்டி படுத்துவிட்டு மனையாளை தேட, அவளோ தரையில் படுப்பதற்காக பாய் விரித்து கொண்டிருந்தாள்.
அவளது செய்கை அவனுக்குக் கோபத்தை தூண்ட, அதை மறைத்தபடி
" ராதா தரைல படுத்தா, எழுந்துக்க கஷ்டமா இருக்கும் ... வா கட்டில்ல வந்து தூங்கு " என்றழைத்தவனிடம் பதிலேதும் கூறாமல் அவள் அமைதி காக்க, அவளது செய்கையின் மூலம் அவள் மனதை படித்தவன்,
" இந்த மாதிரியான சூழ்நிலைல மிருகங்க கூட தன் இணையை நெருங்காது ..." என ஆற்றாமை கலந்த கோபத்தில் தெரிவித்துவிட்டு
ஐயோ கடவுளே ... என்னை இவ்ளோ கீழ்த்தரமா நினைச்சிட்டாளே…
இவளை முதன் முதலாய் கண்ட போதே, புள்ளியாய் ஊடுருவியவள், மனம் முழுதும் வெள்ளியாய் வியாபித்திருக்கிறாள் என்ற பழங்கதையை பேசாமல் எப்படி என் மனதில் இருக்கும் காதலை புரியவைப்பேன் ....
என தவித்துக் கொண்டிருந்தவனின் கோபத்தை உணர்ந்தவள், உடனே கட்டிலின் மறுபுறத்தில் , அவனுக்கு முதுகு காட்டியபடி ஒருக்களித்து படுத்துக் கொள்ள, அவளை திருப்திபடுத்துவதற்காக அவர்களுக்கிடையில் தலையணைகளை கொண்டு சுவர் எழுப்பியவன், மறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டான்.
அவன் அருகிலிருக்கும் தைரியத்தில் கிட்டத்தட்ட ஆறு மாதத்திற்கு பிறகு நன்கு அயர்ந்து உறங்கினாள் ராதா.
வழக்கம் போல் அதிகாலையிலேயே எழுந்த கிருஷ்ணா, ஜாகிங்கிற்கு தயாராகிக் கொண்டிருக்கும் போது, நல்ல உறக்கத்திலும் தன் வயிற்றின் மீது கை வைத்தபடி திரும்பி படுத்தவளை ரசித்துப் பார்த்தவன்,
இவளே குழந்தை போல தான் இருக்கா ...இவளுக்கு குழந்தையா... என்றெண்ணிக் கொண்டிருக்கும் போதே, வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க,
வீட்டிற்குள் நுழைந்த சின்னம்மை, கதவை திறந்தவனின் கம்பீரத்தை பார்த்து, சிறு பயத்துடன் ஏதும் பேசாமல் அமைதியாக சமையலறைக்குச் சென்றார்.
சற்று நேரத்திற்கெல்லாம் கண்விழித்த ராதா, அவனை தேட, பிறகு ஜாகிங்கிற்கு சென்றிருக்க கூடும் என அனுமானித்தவளிடம்
" இன்னள ராத்ரி நீ நன்னாயி உறங்னியோ (நேற்றிரவு நன்றாக உறங்கினீர்களா) .."
"ஆம், நல்லா தூங்கினேன் "
" நீங்கலுடைய பர்த்தாவின்றே வரவு நின்னல் சந்தோஷ்வானேன்னு ஞான் கருதுன்னு" (உன்னுடைய கணவரின் வரவால் , நீ மிகவும் சந்தோஷமாக இருக்கிறாய் என நினைக்கிறேன்) என்று வெட்கப்பட்டுக்கொண்டே கூறிய சின்னம்மையை பார்த்து ஆம் என்பது போல் புன்னகைத்தவள் அவர் தன் பணியை முடித்து விட்டு சென்றதும் ,
குளித்து முடித்து அலுவலகத்திற்கு தயாராகி கொண்டிருக்கும் வேளையில்,தனது ஜாகிங்கை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவன், அவளை பார்த்து துணுக்குற்று
" நீ ஆபீஸ்க்கு போய்த்தான் ஆகணுமா...டாக்டர் சொன்ன மாதிரி ரெஸ்ட் எடுத்துக்கற ஐடியா இல்லையா.."
அவள் பதில் கூறாமல் அமைதி காக்க
" வீட்டுக்கு ஏதாவது பணம் அனுப்பணும்னா அனுப்பிடலாம் ராதா "
" இல்ல ...வேணாம் ... இன்னும் ரெண்டு மாசம், ஆபீஸ்க்கு போனேனா, என்னோட லோனை கம்ப்ளீட்டா அடைச்சிடுவேன்...அப்புறம் மெட்டர்னிட்டி லீவ் சிக்ஸ் மன்ஸ் இருக்கு ..." என்றவளை சுட்டெரித்து விடுவது போல பார்த்தவனின் பார்வை தீட்சண்யத்தை தாளமுடியாமல் தலை குனிந்து கொண்டாள்.
இவ கிட்ட எப்படி புரியவைப்பேன் ....என யோசித்தவனுக்கு, அவள் கூறிய பதிலில் மறைந்திருந்த பொருளை உணரும் போது மனம் உருகி தான் போனான்.
பிரசவத்தின் போது தனக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் கடனாளியாகவே சாக நேரிடும் என்பதால்,கடனை திருப்பி செலுத்தும் காலத்தை சரியாக திட்டமிட்டிருக்கிறாள், என நினைக்கும் போது , அவளது தன்மானத்தையும் நேர்மையையும் கண்டு, அவளை அணைத்துக் கொள்வதா அல்லது அடிப்பதா என புரியாமல் தவித்தவன், இவளிடம் பேசி பிரயோஜனமில்லை இவளை வேறு வழியாக தான் கையாள வேண்டும் என முடிவு கட்டினான்.
அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசாமல் , அவளை நேருக்கு நேர் பார்க்காமல், அவளுக்கான அனைத்து உதவிகளையும் கர்ம சிரத்தையோடு செய்தான் .
வேண்டாம் என்றால் கோபப்படுவான் என்பதால் அனைத்து உதவிகளையும் மறுப்பேதும் கூறாமல் ஏற்றுக் கொண்டாள் .
அவனது மௌனம் அவளை அசைத்துப் பார்க்க,
"இன்னிக்கு ஒரு மீட்டிங் இருக்கு .... அதை முடிச்சுட்டா வீட்டுக்கு சீக்கிரமே திரும்பிடலாம் .." என மெல்லிய குரலில் தெரிவித்தவளிடம்
" அப்ப நானும் ஆபீசுக்கு வருவேன் .." என்றவனைப் பார்ப்பதற்கு
அம்மா நானும் வருவேன்.. என அடம் பிடிக்கும் குழந்தை தான் அவள் நினைவிற்கு வர, புன்னகையை மறைத்தபடி காரின் பின்புறத்தில் அவள் அமர, முன்புறத்தில் ஓட்டுனருக்கு அருகில் அமர்ந்துகொண்டான் கிருஷ்ணா.
புதிய அலுவலகம் என்பதால், அவள் கிருஷ்ணாவை அனைவருக்கும் அறிமுகப்படுத்த, அவள் கணவர் என்பதை விட, கம்பெனியின் நிர்வாக இயக்குனர் ராஜேஸ்வரியின் மகன், அதோடு இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் என்றதும் சிறப்பு மரியாதைகள் கிடைக்கப்பெற்றன.
அவனை அவள் அறையிலேயே அமர ஏற்பாடு செய்துவிட்டு ,அடுத்த அறையின் கண்ணாடி கதவினை திறந்து கொண்டு ஆலோசனைக் கூட்டத்திற்காக சென்றாள் .
கிட்டத்தட்ட 10 பேர் கொண்ட குழுவில், ஒருவர் பின் ஒருவராக பேச,
கண்ணாடி கதவு என்பதால் அவனால் பார்க்க முடிந்ததே தவிர ,அவர்கள் பேச்சை கேட்க முடியவில்லை.
ராதாவை தவிர மேலும் 2 பெண்கள் கொண்ட அக்குழுவின் , செயல்பாடுகளை பொறுமையாக கேட்டறிந்து கொண்டவள், இறுதியாக பதினைந்து நிமிடம் உரையாற்றினாள்.
அவளது பேச்சைக் கேட்க முடியவில்லை என்றாலும், அவளது உடல் மொழி , நேர்கொண்ட பார்வை, ஆளுமைத்திறன் என அனைத்தையும் ஒருங்கே கண்டு மெய்மறந்து ரசித்தவன்,
என் கண்ணம்மா என் கிட்ட மட்டும் தான் வாயை திறக்க மாட்டா போல... மத்தவங்க எல்லாருக்கும் லயன்னஸ்... என மனதிற்குள் மெச்சிக் கொண்டான்.
கூட்டம் முடிந்ததும் அவள் அவனுடன் வீட்டிற்கு புறப்பட,
ஆர் .ஆர் சிஸ்டம்ஸ் அந்தப் பெரிய கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்ததால், இருவரும் மின்தூக்கிக்காக காத்திருக்க,
காலியாக மேலே வந்த மின்தூக்கியில் இருவரும் உள்ளே நுழைந்ததும் அவன் அவள் அருகில் நிற்காமல் எதிர் திசையில் சென்று நின்று கொள்ள,
மின்தூக்கி நாலாவது தளத்தில் நின்ற போது, ஏழெட்டு பேர் உள்ளே நுழைந்ததும், நிற்க இடமில்லாமல், அனைவரும் லேசாக ஒருவரை ஒருவர் உரசிய வண்ணம் நின்ற போதும், சர்வ ஜாக்கிரதையாக அவள் மேல் படாமல் , விலகி நின்றதைக் கண்டு மனம் கலங்கி போனாள் ராதா.
காவலனாகவும் சேவகனாகவும் இருப்பவன்,காதலனாக இல்லையே என மனம் வருந்தியவள்,பூனாவில் இருந்த போதெல்லாம் கலகலப்பாக இருந்தவன், இங்கு பாராமுகமாக இருக்கின்றானே என சொல்லொண்ணா துயரம் அடைந்தாள்.
அப்பொழுது மின்தூக்கியில் இருந்த ஒருவர், கிருஷ்ணாவின் ஆஜானுபாகுவான தோற்றம் மற்றும் சிகையை பார்த்து சந்தேகத்துடன்,
“ நீங்க சாப்ட்வேரா…” என தொக்கி நிறுத்த,
அவன் புன்னகைத்தபடி, ராதாவை காட்டி, “இவங்கதான் சாஃப்ட்வேர்.. நான் ஹார்டுவேர்…” என்றவன் தன்னை பற்றி கூற அவனை ஓரக்கண்ணால், பார்த்து ரசித்துக் கொண்டே நின்றாள் தன்னை மறந்து.
அவள் வீட்டை அடைந்ததும்,
தினமும் வரேன்னு சொன்னானே... இன்னும் காணலையே ... என சித்தார்த்தை பற்றி நினைத்து பயந்தபடி சுற்றும் முற்றும் பார்த்தவளின் மனவோட்டத்தை அறிந்த கிருஷ்ணா
" எதைப் பத்தியும் கவலைப் படாம நிம்மதியா போய் தூங்கு ராதா..." எனக் கூற,
அவ்வாறு கூறியவனின் முகத்தை பார்த்தால் ஏதோ புரிவது போன்ற உணர்வு எழுந்தாலும், முழுவதும் விளங்காமல் குழப்பத்துடனேயே கட்டிலில் சென்று படுத்தாள் ராதா.
வழக்கம் போல் அவர்களுக்கிடையில் தலையணையை வைத்து சுவர் எழுப்பியவனின் செய்கை அவள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்த, அதே நேரத்தில் அவன் மனதில் புயலே அடித்துக்கொண்டிருந்தது.
பெரிய ஈபில் டவர் இது ... நானெல்லாம் கண்டம் விட்டு கண்டம் பறந்து நடுவானத்துல வானரத்துக்கு போட்டியா குட்டிக்கரணம் போட்டவன் ..... இந்த டவர் பெரிய பாதுகாப்புன்னு அம்மணிக்கு நினைப்போ....
இந்த ஈபில் டவரை வேண்டாம்னு என்னைக்கு தான் சொல்ல போறாளோ...
ஆறு மாசமா இவ மீதான காதலை தூக்கி சுமந்தேனே ... இது எல்லாத்தையும் இவகிட்ட எப்ப சொல்லி புரிய வைப்பேன்.... எப்படி சொல்லி புரிய வைப்பேன் .... கடவுளே ....
என மனதில் புழுங்கியபடி உறங்கிப் போனான்.
அதிகாலை வேளையில், ஏதோ "கருக்,கருக்" என்ற சத்தம் கேட்டு எழுந்தவன், கூடத்திற்கு சென்று பார்க்க, அங்கு ராதா, நாற்காலியில் அமர்ந்தபடி, கொய்யாப் பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
உடனே கடிகாரத்தைப் பார்த்தவனுக்கு அது அதிகாலை நான்கு மணியை காட்ட,
நேற்றிரவே இவள் சரியாக உணவு உண்ணவில்லை என்பதை உணர்ந்தவன், படுக்கையறையில் இருந்த ஆப்பிள் பழங்களை துண்டுகளாக நறுக்கி, தட்டிலிட்டு அவள் அருகில் கொண்டு வைக்க,
அவன் வருகையை எதிர்பார்க்காதவள்,
" உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு தான் இங்க உட்கார்ந்து கிட்டு இருக்கேன் ..."
" ஏதோ 'கிளஹரி' சாப்பிடற சத்தம் கேட்டது வந்து பார்த்தா நீ சாப்பிட்டுக்கிட்டு இருக்க..." என்றவனை புரியாமல் பார்த்தவள்,
" கிளஹரின்னா.." என தொக்கி நிறுத்த, சற்று நேரம் யோசித்தவன், பிறகு ஆங்கிலத்தில் (Squrriel) 'ஸ்குறில்' என புன்னகையுடன் மொழிபெயர்த்தான்.
" ஓ அணிலா..."
" ம்ம்ம் ..." என ஒருவித கூச்சத்துடன் ஆமோதித்தவன் , பிறகு தன் கடமை முடிந்துவிட்டது போல், குளியலறைக்குச் சென்று ஜாகிங்கிற்கு தயாராக, ஒரு விதமான வெறுமை மீண்டும் சூழ்வதை அவளால் உணரமுடிந்தது.
தனக்கான இனிமையான நாட்கள் வரவிருப்பதை உணராமல் இவர் மீண்டும் என்னிடம் எப்போது இணக்கமாக பேசுவாரு ... என்ற ஏக்கத்துடன் அவனையே நினைத்து துன்பத்தில் உழன்றுக்கொண்டிருந்தாள் ராதா .
கண்ணனைத் தேடி ....