Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 20

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
550
அத்தியாயம் 20

கடந்த ஆறு மாதங்களில் அவ்வப்போது கேரளாவிலிருந்து ராஜேஸ்வரியை தொடர்பு கொண்டு அலுவலக பணிகளை குறித்து கலந்தாலோசிப்பது மற்றும் அவரின் உடல்நலம் குறித்து விசாரிப்பது என அலுவலக ஊழியராக மட்டுமில்லாமல் மருமகளாகவும் தனக்கான பணியினை செவ்வனே செய்து முடித்திருந்தாள் ராதா.

இதற்கிடையில் பலமுறை ராஜேஸ்வரி, அவளை பூனாவிற்கு அழைக்க,
தன் தங்கையிடம் கூறிய காரணங்களை சற்றே மாற்றி,

"மேம், இப்பதான் ஆபீஸ் செட்டப் பண்ணி, டீம் ஃபார்ம் ஆகி, ப்ராஜெக்ட் வேலை தீவிரமா நடந்துக்கிட்டு இருக்கு.. இந்த டைம்ல நான் லீவு எடுத்துக்கிட்டு பூனாவுக்கு வந்தா, வேலை கெட்டு போயிடும் மேம்...தீபாவளி டைம்ல நிச்சயமா ஒரு வாரத்துக்கு மேல லீவு இருக்கும் அப்ப வரேன் ..." என்றவளின் கூற்றும், அலுவலகம் தற்போது இருக்கும் நிலைமைக்கு பொருந்தி வர, வேறு வழியில்லாமல் ராஜேஸ்வரியும் ஒப்புக் கொண்டார்.

ஒவ்வொரு முறையும் அவருடன் தொலைபேசியில் உரையாடும் போது தன் கண்ணனை பற்றிய தகவலுக்காக அவள் மனம் ஏங்கும்.

தன் கண்ணனை பற்றி விசாரித்து, அவர் மீதான தன் விருப்பத்தை மறைமுகமாக தெரிவிக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் ரேஷ்மியுடனான அவர் திருமணத்திற்கு ராஜேஸ்வரி சம்மதிக்காமல் போகலாம், என்பதால் தன்னவனை பற்றி எதுவுமே விசாரிக்காமல் அக்கறை இல்லாததுபோல் நடந்துக் கொண்டாள் ராதா.

கடந்த ஆறு மாத காலத்தில்

இரண்டு முறை மட்டுமே கிருஷ்ணா ராஜேஸ்வரியை தொடர்பு கொண்டு பேசி இருந்தான்.

அவன் சென்று இரண்டு மாதமான நிலையில் முதன்முறையாக அவரை தொடர்பு கொண்டு பேசும் பொழுது, எடுத்த எடுப்பில் ராதாவை பற்றி கேட்க வெட்கப்பட்டுக்கொண்டு , முதலில் தன் தாயின் உடல்நிலை மற்றும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்ததை பற்றி விரிவாகக் கூறியவன், போர் மூளும் அபாயம் இருப்பதால் அனைவருக்கும் பயிற்சி கொடுக்கும் பணியில் பனிபடர்ந்த காடுகள் மற்றும் மலைகளில் இருப்பதால் தொடர்பு கொள்ள முடியாமல் போனதாக தெரிவித்தான்.

கடைசியாக தன் மனையாளை பற்றி கேட்க நினைத்து பேச்சை தொடங்க எத்தனிக்கும் பொழுது, சமிக்ஞைகள்(signal) காரணமாக அவனுடைய தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட
அதன் பிறகு ராஜேஸ்வரி பலமுறை முயன்றும், அவரால் அவனை தொடர்பு கொள்ள முடியாமல் போயிற்று.

மீண்டும் இரண்டு மாதங்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக அவன் ராஜேஸ்வரியை தொடர்பு கொள்ளும் போது, மகாராஷ்டிராவில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால், ஆங்காங்கே தொலைபேசி துண்டிப்புகள் மற்றும் மின் துண்டிப்புகள் ஏற்பட்டதால் அவரால் அவன் அழைப்பை ஏற்க முடிந்தாலும், வழித்தடம் சரியில்லாத காரணத்தால் பேச முடியாமல் போயிற்று.


இதற்கிடையில் ராதா கேரளாவிற்கு சென்றிருப்பதை மின்னஞ்சல் மூலமாக கிருஷ்ணாவிற்கு தெரிவிக்க எண்ணியவர் பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

கிருஷ்ணா, ராதாவை பற்றி ஒன்றுமே கேட்கவில்லை என்னும் நிலையில் எதற்காக அவளைப் பற்றிய தகவல்களை தானாக முன்வந்து அவனுக்கு அனுப்ப வேண்டும்.

ராதாவும் இன்றுவரை அவனை பற்றி ஒன்றுமே கேட்டதில்லை. இருவருமே அழுத்தக்காரர்கள். அவர்களுக்குள் ஏதோ சரி இல்லை என்றெண்ணியவர் அவர்களாகவே கேட்கும் பட்சத்தில் தெரிவிக்கலாம் என முடிவெடுத்திருந்தார் .

ராதா கேரளாவில் இருப்பதும் தெரியாது அவளது புதிய கைப்பேசி எண்ணும் தெரியாததால், பழைய எண்ணிற்கு பலமுறை முயன்று தோற்றுப் போயிருந்தான் கிருஷ்ணா.

வேலையின் இழுபறியால் கடந்த மாதம் தான் சென்னையிலிருந்து பூனா திரும்பிய ராமும் பலமுறை கிருஷ்ணாவை தொடர்பு கொள்ள முயன்று தொடர்பு கிடைக்காததை ராஜேஸ்வரியிடம் கூறி வருந்தினான்.



" மகி, இங்கிருந்து பர்வதம் ஊருக்கு போய் ஆறு மாசத்துக்கு மேல ஆகுது… அவளும் போன் பண்ண மாட்றா... நான் போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்குறா.... நம்ம எஸ்டேட் மேனேஜர் கிட்ட விசாரிச்சா, பர்வதமும் தியாகராஜனும் நல்லாத்தான் இருக்காங்கன்னு சொல்றாரு .... என் உடம்பு இருக்கிற நிலைமையில என்னால குன்னூருக்கு ட்ராவல் பண்ண முடியல ஆனா ஏன் பர்வதம் இப்படி இருக்கான்னு புரியவே இல்ல ..."

என புலம்பிக்கொண்டே பர்வதத்திற்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி.

அனைத்தும் அறிந்த மகி அவருக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் விழித்துக் கொண்டு நிற்க,

ராஜேஸ்வரியின் முதல் அழைப்பை துண்டித்த பர்வதம் இரண்டாவது அழைப்பை ஏற்று அவரின் நலம் விசாரிப்புக்கு ஈனஸ்வரத்தில் பதிலளித்தோடு சரி, பதிலுக்கு ராஜேஸ்வரியின் உடல்நலத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.

பர்வதம் கேட்டது இரண்டே கேள்விகள் தான்.

" கிருஷ்ணா திரும்பி வந்துட்டானா ...

“ராதா கிருஷ்ணாவோட கல்யாண விபரம் ராதாவோட அப்பாவுக்கு தெரிஞ்சிடுச்சா...”

" கிருஷ்ணா வர இன்னும் ரெண்டு மாசம் ஆகும் ... ராதாவோட அப்பாவுக்கு இப்ப தான் நல்லா உடம்பு தேறி இருக்கு .. அதனால அடுத்த மாசம் ராதாவோட கல்யாணத்தை பத்தி அவங்க அப்பாகிட்ட பேசலாம்னு இருக்கேன்..." என வெள்ளந்தியாக கூறிய ராஜேஸ்வரி

" இப்ப கேரளாவுல தான் ..."

என கூறி கொண்டிருக்கும் பொழுதே மகி பழக்கூடையை எடுத்து தரையில் வீச, அப்போது ஏற்பட்ட சத்தத்தினால் பேச்சை நிறுத்தி திரும்பியவர்

"என்னாச்சு மகி...." என தொலைபேசியை கைக்கொண்டு மூடாமலே கேட்க, மகி அவள் உதட்டின் மேல் செங்குத்தாக ஆள்காட்டி விரலை வைத்து, பேசாதீர்கள் என்பது போல் சைகை செய்ய,
அதனை அரைகுறையாக புரிந்து கொண்டவர் பர்வத்திடம் பிறகு அழைப்பதாகக் கூறி தொலைபேசியை தாங்கியில் பொருத்திவிட்டு, மகியை பார்த்தார்.

ஆனால் அதற்குள் பர்வத்திற்கு குழப்பம் விளைவிக்க தேவையான இரண்டு பதில்களையும் தன்னையறியாமலேயே ராஜேஸ்வரி கூறியிருக்கிறார் என அவருக்குத் தெரியாது .

மகி மென்று முழுங்கி, திக்கி திணறி, அவர் மருத்துவமனையிலிருந்த காலகட்டத்தில் வீட்டில் நடந்த அனைத்து பிரச்சனைகளையும் ஒன்றுவிடாமல் கூற,
நடந்த அனைத்தையும் மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தவர்,

" இந்த சித்தார்த்துக்கு ஏன் இப்படி புத்தி போச்சு .... அவனை கிருஷ்ணா அடிச்சதுல தப்பே இல்ல ....ஓ.... அதனாலதான் இத்தனை நாளா பர்வதம் என் கூட பேசலையா... கிருஷ்ணா முரடன்னு தெரியும் அதுக்காக ராதா கிட்டயும் இப்படியா நடந்துக்கணும்….
அதனால தான் அவளும் கிருஷ்ணா மேல இருக்கிற கோவத்துல அவனை பத்தி எதுவுமே விசாரிக்கல போல... " என தன் மனதிலிருந்த பல கேள்விகளுக்கு மகியின் விளக்கத்தால் பதில் கிடைத்தது என்றெண்ணியவரிடம் அவர் உடல்நிலையை கருத்தில் கொண்டே இத்தனை நாட்களாக அனைத்து பிரச்சனைகளையும் மறைத்ததாக சொன்னவள்,

" கிருஷ்ணா வீட்டுல இல்லாத இந்த நேரத்தை சாதகமா பயன்படுத்திக்கிட்டு சித்தார்த் இங்க வருவான்னு நினைச்சு தான் ராதா கேரளாவுக்குப் போய் இருக்கணும் ..." எனக் கூற அதனை சரி என்றே ஆமோதித்தார் ராஜேஸ்வரி.

சற்று நேரத்திற்கெல்லாம் கோபால் நாயரிடமிருந்து அவரின் கைபேசிக்கு அழைப்பு வர, அழைப்பை எடுத்து பேசியவரிடம் உடல் நலத்தை விசாரித்த நாயர், நீண்ட நாட்களுக்குப் பிறகு ராதாவை கலந்தாலோசிக்கும் கூட்டத்தில் சந்தித்ததாக தெரிவித்தார்.

" ராதா திறமைசாலி, இந்த உடல் நிலையிலயும் பொறுமையா தெளிவா புள்ளி விவரத்தோட கம்பெனி பேங்கிங் டீடைல்ஸ் பத்தி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நின்னு பேசினாங்க ..."
என நாயர் புகழாரம் சூட்ட,

" இந்த உடல் நிலையிலயும் " என்ற வார்த்தை மட்டுமே ராஜேஸ்வரியின் காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.

ராதாவின் உடல்நிலைக்கு என்ன? வாரத்தில் மூன்று நாட்களாவது என்னை தொடர்புக் கொண்டு பேசுபவள், தன் உடல்நிலையை பற்றி ஒன்றுமே கூறவில்லையே ...

ராதாவின் உடல்நிலை குறித்து நாயரிடம் நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்ள அவரின் சுயகௌரவம் தடுக்க, எனவே அவரிடம் பேச்சு கொடுத்து அவள் உடல்நிலையை மறைமுகமாக தெரிந்துகொள்ள விரும்பி


"'நானும் அவளை ரெஸ்ட் எடுத்துக்க சொல்லி, நிறைய தடவை அட்வைஸ் பண்ணிட்டேன் ஆனா அவ தான் கேட்கறது இல்ல... " என அனைத்தும் தெரிந்தவர் போல் பொதுவான சொல்லாடல்களை பயன்படுத்தியவரிடம்

" நிறை மாசத்தை நெருங்கிக்கிட்டு இருக்கிற கர்ப்பிணி பொண்ணு, பேங்கிங் அண்ட் ஷேர்ஸ் மீட்டிங்ல ஒரு மணி நேரம் கொடுத்த ஸ்பீச் ரொம்ப அருமையா இருந்தது..." என நாயர் பேசிக்கொண்டே போக, அவர் கூறிய செய்தி ராஜேஸ்வரியின் காதுகளில் தேனாகப் பாய, தன்னுடைய மகிழ்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஒருவாறு சமாளித்துக் நாயரின் அழைப்பை பேசி முடித்தார்.

நிறை மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் கர்ப்பிணிப்பெண் என்றால், ராதா கேரளாவிற்கு சென்று ஆறு மாதங்களாகிறது ....

கிருஷ்ணா ஸ்ரீநகர்க்கு சென்று கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆன நிலையில் அவளும் கேரளாவிற்கு புறப்பட்டு விட்டாள் ...

எனில் ராதா தன்னுடைய கர்ப்பத்தை உறுதி செய்த பின்னரே கேரளாவிற்கு செல்லும் முடிவை எடுத்திருக்கிறாள்...
அப்படியானால் அவள் ஏழு மாத கர்ப்பிணியா?....
ஏன் என்னிடம் கூட இந்த இன்பமான செய்தியை பகிரவில்லை .....என பல்வேறு கேள்விகள் அவர் மனதைத் துளைத்தெடுத்தன.

ராதா தாயாகப் போகிறாள் என்ற செய்தியை அறிந்த மகி மனம்
மகிழ்ந்ததோடு

அவள் கேரளாவிற்கு புறப்படும் முன்பான நாட்களில், அவளது செய்கைகளில் தனக்கு ஏற்பட்ட மாற்றங்களை சொன்னாள்.

இரவு உணவினை அறைக்கு எடுத்துச் சென்றது, அதிக சோர்வோடு காணப்பட்டது, சமையல் அறைக்குள் நுழையாமல் தவிர்த்தது என அனைத்தையும் வரிசை படுத்தியவள்

" ராதாவுக்கு இப்பவே போன் பண்ணி பூனாவுக்கு வர சொல்லுங்கம்மா ...."

" இல்ல மகி ... ராதா ஏதோ ஒரு பெரிய காரணத்துக்காக தான் இந்த விஷயத்தை என் கிட்ட இருந்தே மறைச்சிருக்கா, அது நாம நினைக்கிற மாதிரி சித்தார்த் சம்பந்தப்பட்டதா இல்ல, கணவன் மனைவிக்குள்ள இருக்கிற பிரச்சனையான்னு தெரியல ...
எதுக்கும் இன்னும் ஒரு மாசம் பொறுமையா இருப்போம் ...அப்புறம் ராதாவை இங்க கூப்பிடுறதா இல்ல நாம அங்க போறதான்னு யோசிக்கலாம் ..." என முடித்தார் ராஜேஸ்வரி.


இடம் : குன்னூர் எஸ்டேட்.

ராஜேஸ்வரியுடனான பர்வதத்தின் தொலைபேசி உரையாடல் பாதியில் முடிவடைந்ததை பார்த்த சித்தார்த்,

" ஏம்மா லைனை கட் பண்ண..."

" நான் கட் பண்ணல டா மகனே ...மகி அங்க எதையோ போட்டு உடைச்சிட்டா போல , அதனால அப்புறம் பேசறதா சொல்லி ராஜேஸ்வரி தான் லைனை கட் பண்ணிட்டா...."

" கிருஷ்ணா பூனாவுக்கு வந்துட்டானாமா.."

" இல்லடா ..இன்னும் வரலையாம் .."

"அப்ப இப்பவே நான் பூனாவுக்கு போய் ராதாவை பாக்க போறேன்.."

" ஏற்கனவே நீ ராதா விஷயத்துல தலையிட்டதால தான் உன்னை புரட்டி எடுத்திருக்கான் அந்த கிருஷ்ணா ..இப்ப மறுபடியும் அவளை போய் பார்க்கணுமா ...." என பர்வதம் கடுகடுக்க,

" நிச்சயமா போய் பார்த்து தான் ஆகணும் ... இதான் சரியான நேரம் .... அவன் திரும்பி வர்றதுக்குள்ள அவ மனச களைச்சு அவளை தூக்கிக்கிட்டாவது வந்துடறேன் பாரு... " என சித்தார்த் சபதம் செய்ய,

" அடுத்தவன் பொண்டாட்டியை தூக்கிட்டு போனதால தான் மகாபாரதத்துல ராவணனே அழிஞ்சான்.."

"அய்யோ அம்மா அது மகாபாரதம் இல்ல, ராமாயணம் "என தலையில் அடித்துக்கொண்டான் மைந்தன்.

"ஏதோ ஒன்னு டா, உனக்கு எதுக்கு டா அவன் பொண்டாட்டி .."

" அம்மா, உனக்கு உன் லட்சியத்துல ஜெயிக்கணும்னு ஆசையே இல்லையா... கிருஷ்ணா திரும்பி வந்துட்டான்னா ராதா மனச மாத்தி, குடும்பம் நடத்தி குழந்தை குட்டியை பெத்துக்குவான்... அது நடக்கக் கூடாதுன்னா நான் ராதாவை தூக்கி ஆகணும் ...

இப்ப வரைக்கும் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழவே ஆரம்பிக்கல...
அவங்க வாழ்ந்த லட்சணத்தை தான் நாம கண்கூடாக பார்த்தோமே... அந்த கிருஷ்ணாவுக்கு தான் ராதா மேல ஆசையே ஒழிய அவளுக்கு அவன் மேலே துளிகூட விருப்பம் இல்லை ...
அதனாலதான் அன்னிக்கு, நீங்க யாரு எனக்கு, உங்களுக்கு நான் ஏன் பதில் சொல்லணும்னு அவன் மூஞ்சில அடிச்ச மாதிரி கேட்டா...

அதோட கிருஷ்ணா எப்படி கேட்டும் கடைசி வரைக்கும் விஷால் எதுக்காக வந்தான்னு அவ சொல்லவே இல்லை ...

என்னை அடிச்சு விரட்டிட்டு ராதா கூட நிம்மதியா வாழலாம்னு நினைச்சான்...ஆனா மறுநாளே போர்முனைக்கு போக வேண்டியதாயிடுச்சு ... " என சித்தார்த் வாதாட

"இல்லடா தம்பி, அந்த ராதா பொண்ணுக்கு கிருஷ்ணா மேல விருப்பம் இருக்கு டா இதை நானே பல முறை கண் கூட பார்த்திருக்கேன் .. "
என பர்வதம் எதிர் வாதம் புரிய,

" நீ என்னத்தை பார்த்தயோ... எனக்கு உன் வார்த்தை மேல எல்லாம் நம்பிக்கையே கிடையாது ..அவளுக்கு ஏதோ பணத்தேவை இருக்கு அது மட்டும் நல்லா தெரியுது, அதனாலதான் அந்த விஷால் கிட்ட சிரிச்சு பேசி பணம் வாங்கிக்கிட்டு இருந்தா... அந்த கிருஷ்ணா பேர்ல ஒரு சொத்தும் கிடையாது… அவன் வேலைய விடாத வரைக்கும் மாச சம்பளகாரன் தான்... நான் அப்படி இல்லை, குன்னூர் எஸ்டேட்ல பாதி என் பேர்ல தான் இருக்கு ... அதனால
ஒன்னு அவளுக்கு பணத்தை காட்டியோ, இல்ல மிரட்டியோ எப்படியாவது குன்னூர் எஸ்டேட்டுக்கு அவளை கூட்டிகிட்டு போயிடணும்..."
என தன் மனப்போக்கில் அவன் பேச,

" மகனே, அவளை கல்யாணம் பண்ணிக்க போறியா .."

" ச்சே ச்சே... அவ என்னை அடிச்சிருக்கா, அந்த கிருஷ்ணா கிட்ட காட்டிக்கொடுத்திருக்கா ... அவளைப் போய் கல்யாணம் பண்ணுவேனா.... அவளை கூட்டிட்டு போய் ஜாலியா சுத்திட்டு, சந்தோஷமா வாழ போறேன்... அவ என் கூட தான் இருக்காங்கிற விஷயத்தை கடைசி வரைக்கும் அந்த கிருஷ்ணாவுக்கு தெரியாம பாத்துக்க போறேன்....

அவன் திரும்பி வந்ததும், ராதா எங்க போனா என்ன ஆனான்னு தெரியாம அவளை தேடி தேடி அலைஞ்சு கடைசில அவனுக்குப் பைத்தியமே பிடிக்கணும் ..

அப்படி நான் நெனச்சது நடந்ததும், என்னை கை நீட்டி அடிச்ச அந்த ராதாவை நல்ல விலைக்கு துபாய் ஷேக் கிட்ட வித்துடுவேன் ... இதான் இவங்க ரெண்டு பேருக்கும் நான் கொடுக்கப் போற தண்டனை...

அப்புறம் நம்ம குன்னூர் எஸ்டேட்டுக்கு மொத்தத்துக்கும் நான் தான் ராஜா..."

என உலகத்தில் உள்ள அத்தனை குரோதங்களும் வக்கிரங்களும் கண்களில் தெரிய , அந்த நிகழ்வை மனதில் ஓட்டிப் பார்த்து ரசித்தான்.

"ஏற்கனவே கிருஷ்ணா உன்னை புரட்டி எடுத்ததால தான், உள் காயம் ஏற்பட்டு, எலும்பு உடைஞ்சு, மாவு கட்டு கட்டி கடந்த 5 மாசமா நடக்க முடியாம, முதுகு வலி, கை வலி , கால் வலின்னு படுத்த படுக்கையா படுக்கையில இருந்த, இப்ப மறுபடியும் அந்த ராதா கிட்ட வம்பு இழுத்து வாங்கி கட்டிக்கணுமா... இப்பதான் உன் உடம்பு கொஞ்சம் கொஞ்சமா தேறி வருது ஞாபகம் வச்சுக்கோ ..." என பர்வதம் அறிவுறுத்த

" படுக்கையிலிருந்த இந்த அஞ்சு மாசத்துல ஒவ்வொரு நாளும் , அவன் அடிச்ச அடியை நினைச்சு எப்படி மனசுக்குள்ள குமுறினே தெரியுமா ...
அவனைப் பழி வாங்கியே தீரணும். என்னைத் தடுக்காதம்மா... " என சினிமா வசனம் பேசி முடித்தான் மைந்தன்.


சித்தார்த் பூனா வந்து இரு தினங்கள் ஆன பின்பும் அவனால் ராதாவை பார்க்க முடியவில்லை.

ராஜேஸ்வரியை சந்தித்தால் அவன் பூனா வந்திருப்பது தெரிந்துவிடும் என்ற காரணத்தினால் , அவர் அலுவலகம் மற்றும் அவரின் வீட்டருகே பதுங்கிக் கொண்டு, ராதாவின் நடமாட்டத்தை கண்காணிக்க எண்ணியவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ராதாவின் உறவினன் எனக் கூறிக்கொண்டு, அவளை பற்றி விசாரித்ததில் , அவள் பதவி உயர்வு பெற்று வேறு இடத்திற்கு மாற்றலாகி விட்டாள் என்ற செய்தி கிட்ட, விஷால் அவன் உடன் பணியாற்றும் ஷாஹிராவை மணந்துகொண்டு அதே நிறுவனத்தில் பணியாற்றுவதையும் கண்கூடாகக் கண்டான்.

ராதாவைப் பற்றி தெரிந்துக்கொள்ள, வேறு வழியில்லாமல் ராஜேஸ்வரியை சந்திக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டான் சித்தார்த்.

ராஜேஸ்வரியின் கார் வீட்டில் நுழைவதை பதுங்கியிருந்து பார்த்துவிட்டு, சற்று நேரத்திற்குப் பிறகு அவர் இல்லத்தில் நுழைந்தவனை சற்றும் எதிர்பார்க்காத மகி சிரமப்பட்டு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு வரவேற்க, கடுமையான முகத்தோடு ,மகியிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் ராஜேஸ்வரியின் அறைக்குள் நுழைந்தான்.

முன்பு போல் இயல்பாய், ராஜேஸ்வரியால் அவனை வரவேற்க முடியவில்லை.

அவனுடைய வேஷம் கலைந்த நிலையில் அவனாலும் இயல்பாக அவருடன் பேச முடியவில்லை.

அவன் நினைத்து வந்த காரியம் நிறைவேற வேண்டுமென்றால் ராஜேஸ்வரியின் உதவி தேவை , ஆதலால் வேறு வழியில்லாமல் சிரமப்பட்டு சிரிப்பை போர்த்திக்கொண்டு அவரின் உடல் நலம் விசாரிக்க, பதிலுக்கு அவரும் அவனுடைய பூனா பயணத்தை பற்றி விசாரிக்க, பூனாவிற்கு அருகில் இருக்கும் 'மகாபலேஷ்வர்' என்ற இடத்தில் ஸ்ட்ராபெர்ரி எஸ்டேட்டை விலை பேச வந்ததாக கூறினான்.

அனைவருக்கும் தெரியும் அவன் கூறியது பொய்யென்று.

வேண்டாவெறுப்பாக கிருஷ்ணாவை பற்றி விசாரித்தவன் அவன் வருவதற்கு இரண்டு மாதத்திற்கு மேலாகும் என்ற பதிலை கேட்டு அகமகிழ்ந்து போய், சிறு குற்ற உணர்வு கூட இல்லாமல், ராஜேஸ்வரியை நேருக்கு நேராய் பார்த்து

"ராதா எங்க பெரியம்மா " என்றவனை சுட்டெரித்து விடுவது போல் பார்த்தவர்,

பிறகு சுதாரித்து

"ராதா கோலாப்பூர் மகாலட்சுமி கோவிலுக்கு போயிருக்கா " என ஈனஸ்வரத்தில் பதிலளிக்க,

"எப்ப வருவா " என விடாமல் அவன் கேட்க

கிருஷ்ணா இவனை பொரட்டி எடுத்ததுல தப்பே இல்ல, எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்டயே என் மருமகளை பத்தி விசாரிப்பான் ... என குமுறியவர் சித்தார்த்தின் மேல் எழுந்த கொலைவெறியை மறைத்தபடி,


"அவ வர்றதுக்கு ரெண்டு மாசம் ஆகும் ...அங்க ஒரு வேலை விஷயமா போயிருக்கா ..." என்றவரின் பதிலில் திருப்தியடையாதவன், பதிலேதும் கூறாமல், அன்றிரவு அங்கு தங்கிவிட்டு மறுநாள் காலை குன்னூருக்கு செல்வதாக கூறி விருந்தினர்க்கான அறையில் சென்று தங்கினான் .

ராதாவின் பயணத்தை குறித்து ராஜேஸ்வரி கூறியது முற்றிலும் பொய் என்று சித்தார்த்துக்கு தோன்ற, ராதா இருக்கும் இடத்தை எப்படி தெரிந்துகொள்வது என உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தவன், ஆலோசனை பெறுவதற்காக பர்வதத்தை தொடர்புகொண்டு, ராஜேஸ்வரி கூறியதை அனைத்தும் கூறினான்.

சற்றுநேரம் மறுமுனையில் யோசித்த பர்வதம்,


"ராதா போயிருக்கிறது கோலாப்பூர் இல்ல கேரளாவா இருக்கும் ... ஏன்னா அன்னைக்கு ராஜேஸ்வரி கேரளாவை பத்தி ஏதோ சொல்ல ஆரம்பிக்கும்போது மகி அவளை பேசவிடாம எதையோ போட்டு உடைச்சி தடுத்துட்டா.... " என தன் குயுக்தி புத்தியை பர்வதம் சரியாகப் பயன்படுத்த

பர்வதத்தின் பதிலில் முழுமையாக திருப்தி அடையாத சித்தார்த், கேரளாவில்

" ஆர்.ஆர் சிஸ்டம்ஸ் " இருக்குமிடத்தை அறிந்துகொண்டு, அங்கு சென்று பார்க்கலாம் என திட்டம் தீட்டினான்.


கண்ணனைத் தேடி....
 
Back
Top