- Joined
- Jul 21, 2025
- Messages
- 550
- Thread Author
- #1
அத்தியாயம் 16A
கிருஷ்ணா , ராம் இருவரும் காலை பத்து மணியளவில் ராஜேஸ்வரியை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வர, ராதா அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றாள்.
வீட்டில் உள்ள அனைவரும் அவரை நலம் விசாரிப்பதற்காக குழும, பர்வதமும் தியாகராஜனும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு, கடமைக்காக ராஜேஸ்வரியின் அறையில் இருந்தனர்.
நல விசாரிப்புகள் முடிந்த நிலையில், அவசர வேலை காரணமாக ராம், ராஜேஸ்வரியிடம் விடைபெற்று கிளம்ப, அவரின் கண்கள் சித்தார்த்தை தேடின.
"சித்தார்த் எங்க" என்றவரின் கேள்விக்கு ,பதிலேதும் கூறாமல் அனைவரும் அமைதி காக்க,
வேறுவழியில்லாமல்,
"எஸ்டேட்ல ஏதோ தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சினையாம் ... போன் வந்தது, அவசரமா கிளம்பி நேத்து நைட்டே போயிட்டான் ..."
என கிருஷ்ணா பொய்யுரைக்க,
" நாங்களும் இன்னிக்கு ராத்திரி ரயில்ல குன்னூருக்கு கிளம்பலாம்னு இருக்கோம்..." என பர்வதம் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு கூறிய நிலையிலிருந்தே வீட்டில் ஏதோ பிரச்சனை நிகழ்ந்துள்ளது என அவர் அனுமானித்ததோடு கிருஷ்ணாவின் முகத்தில் காணப்பட்ட தெளிவும்,ராதாவின் முகத்தில் படர்ந்திருந்த வெட்கமும் அவருக்கு வேறு சில விஷயங்களையும் சொல்லாமல் சொல்லின.
பர்வதம் , தியாகராஜன் வந்த கடமை முடிந்து விட்டது என தங்கள் அறைக்கு திரும்ப, மகி சமையலறைக்கும், முருகன் , வேலு தோட்ட வேலை செய்வதற்காக வெளியே செல்ல, காலை உணவான கஞ்சியை ராஜேஸ்வரிக்கு கொடுத்துவிட்டு, அப்பொழுது எடுத்துக்கொள்ளக்கூடிய மருந்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி ராதா எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போது ஏதோ தன்னை துளைப்பது போன்ற உள் உணர்வு எழுந்தது.
திரும்பிப் பார்த்தால் அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவளது கண்ணன், இரு புருவங்களை ஒன்றன்பின் ஒன்றாக உயர்த்தி புன்னகை பூக்க, அவள் நாணத்துடன் தலை குனிந்து கொண்டதை ராஜேஸ்வரி கவனிக்காதது போல் கவனித்தார்.
சற்று நேரத்திற்கெல்லாம் அவன் கைபேசி ஒலிக்க, எடுத்து ஏதோ மராத்தியில் பேசியவன், ஐந்து நிமிட பேச்சுக்குப் பிறகு கைபேசியை அணைத்து விட்டு தன் தாயிடம்
" அம்மா, இன்னிக்கு ஈவினிங் ரிட்டையர்டு கர்னல் சஞ்சீவ் ஜெயின்,அவரோட 25ஆவது வெட்டிங் ஆனிவர்சரியை கிராண்டா செலிபரேட் பண்ண போறாராம் .. என்னையும் கூப்பிட்டு இருக்காரும்மா ...” என மைந்தன் தொக்கி நிறுத்த,மகனின் மனவோட்டத்தை அறிந்த தாய் புன்னகைத்தவாறே,
" நீயும் ராதாவும் போயிட்டு வாங்க ப்பா.." என கூற, அதைக் கேட்டு சற்று தயங்கிய ராதா,
" இப்பதான் நீங்க ஹாஸ்பிடல்ல இருந்து வந்திருக்கீங்க.. நாளைக்கு நான் ஆஃபீஸ் போயிடுவேன்.. அதனால இன்னிக்கு முழுசும் உங்களோட இருக்கலாம்னு நினைக்கிறேன் ..."
என்றவளின் வாய்மொழி பெற்ற தாயாக இருந்த போதிலும் ராஜேஸ்வரியின் மீது சிறு பொறாமை உணர்வை தூண்ட,
என்னை தவிர இந்த சேவை சிகாமணிக்கு எல்லோர் மீதும் பாசம் உண்டு….. என மனதோடு அவளை செல்லமாக கடிந்து கொண்டான்.
" கர்னல் ரொம்ப நல்ல மனுஷன் ... லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவரு ... அவரும் அவர் மனைவியும், விட்டுக்கொடுத்து வாழற அருமையான தம்பதிகள்.. "
என சிறியவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டே அர்த்தபுஷ்டியான வார்த்தைகளை பயன்படுத்திய ராஜேஸ்வரி,
"ராதா உனக்கும் ஒரு மாறுதலாக இருக்கும், நீ பூனாவுக்கு வந்ததுல இருந்து வீடு, ஆபீஸ தவிர வேற எங்கேயும் போனதில்ல, என்னைப் பார்த்துக்க மகி இருக்கா... நீ போய்ட்டு வா ... "என வாஞ்சையாக கூற,
கிருஷ்ணா அவளை எதிர்பார்க்காமல் தன் அறை நோக்கி செல்ல, இதனை எல்லாம் மறைந்திருந்து ஒட்டுக் கேட்டு கொண்டிருந்த பர்வதம், தியாகராஜனிடம் சென்று,
" இன்னிக்கு ராத்திரி ரயில்ல குன்னூர் போகாம , நாம நாளைக்கு ராத்திரி குன்னூருக்கு போயிக்கலாம்.."
"ஏன்"
"ராதா மகியோட , ஒவ்வொரு முறை போன்ல பேசும் போதும் , அதை ஒட்டு கேட்டுட்டு, அதுபடி திட்டம் போட்டு, ராதா வர்றதுக்கு முன்னாடியே ஹாஸ்பிடல்ல , வீட்டுலன்னு கிருஷ்ணா கூட ரேஷ்மி இருக்கிற மாதிரி நானும் சித்தார்த்தும் ஏற்பாடு செய்வோம் ...
போன தடவை ராதா ஆபீஸிலிருந்து வர்றதுக்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி தான் ரேஷ்மி இங்க வந்தா...
இருந்தாலும், கிருஷ்ணா கூட ஒரு மணி நேரமா அவன் ரூம்ல இருக்கான்னு நான் பொய் சொல்லும் போது வராத குழப்பம் , தானா விஷால் மூலம் வரும் போது ரொம்ப சந்தோஷமா இருந்தது.
ஆனா அதனோட பலனை அனுபவிச்சதென்னவோ சித்தார்த்து தான்....அதனால நாம பூனாவை விட்டு கிளம்பறதுக்கு முன்னாடி மறுபடியும் ஒரு ஆட்டம் ஆடி பாக்கலாம்னு நினைக்கிறேன்.... இந்த முறை நிச்சயமா நான் நெனைச்சது நடக்கும் ..."
என பர்வதம் சூளுரைக்க,
" இப்படி ரேஷ்மியும், கிருஷ்ணாவும் அடிக்கடி சந்திக்கிற மாதிரி ஏற்பாடு பண்றதால நமக்கு என்ன லாபம்...ரேஷ்மி எப்படி உங்க கூட்டணிகுள்ள வந்தா..." என்ற தியாகராஜனை கோபத்துடன் உற்று பார்த்தவர்
" நீங்க மிச்சர் சாப்பிட தான் லாயக்கி...உங்களுக்கு கொஞ்சம் கூட மூளையே கிடையாது ...சொல்றேன் கேட்டுகுங்க ...ரேஷ்மிக்கு கிருஷ்ணா வேணும்... அதுக்கு ராதா கிருஷ்ணாவை விட்டுப் போகணும் ... அது நடக்கணும்னா அவங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வரணும் ... ஆனா கிருஷ்ணாவுக்கு ராதாவை தான் பிடிக்கும் ...ரேஷ்மிய பிடிக்காது ...
சண்டை போட்டுட்டு ராதா அவனை விட்டு பிரிஞ்சு போயிட்டான்னா, அவன் நிச்சயமா ரேஷ்மின்னு இல்ல வேற யாரையுமே கல்யாணம் கட்டாம, நாம எதிர்பார்த்த மாதிரி மறுபடியும் தனிமரமா தான் நிற்பான் ... இதுல என்னோட நீண்ட நாள் திட்டமும் நிறைவேறும் .... அதோட எனக்கும் அந்த ராதாவை பிடிக்காது ... அதனால எதிரிக்கு எதிரி நண்பன்கிற முறைல தான் நாங்களும் ரேஷ்மியோட கூட்டணி அமைச்சோம்...
அதோட அந்த ரேஷ்மியும் ஒரு முட்டாள் ....
ராதா பொண்ணு கிருஷ்ணாவை விட்டு போய்ட்டா,
அவன் தன்னைக் கல்யாணம் பண்ணிப்பான் நம்பறா....
அவ அப்படி விவரம் இல்லாம இருக்கிறது தான் நமக்கு நல்லது....
அவங்க பிரிவால அவளுக்கு எந்த லாபமும் இருக்கப்போறதில்ல மொத்த லாபமும் நமக்குதான்...."
"நீ ராஜதந்திரி " என்று சிலாகித்தார் தியாகராஜன்.
கடிகாரம் மணி ஐந்தை தொட்டபோது ராஜேஸ்வரி ராதாவிடம்,
" நீ போய் டிரஸ் பண்ணிக்கிட்டு பங்ஷனுக்கு கிளம்பு .... கர்னல் பங்க்சுவாலிட்டிய கடைபிடிக்கிற ஆளு ..."எனக் கூறி அவளை அனுப்பி வைத்தார்.
கணினியில் வேலை செய்து கொண்டிருந்தவன், அவள் வருவதை அறிந்து திரும்பிப் பார்க்க, ஏதோ சிந்தனையில் அவள் குளியலறைக்குள் நுழைவதைக் கண்டு, மீண்டும் கணினியில் கவனம் செலுத்தினான்.
குளியலறையிலிருந்து அவள் வெளிப்பட்டதும்
"ராதா" என்றழைக்க,அவள் என்ன என்பது போல் அமைதியாய் அவன் முகத்தை பார்க்க,
முகம் கழுவி மாசு மருவற்று இருக்கும் அவளது முகம், பௌர்ணமி சந்திரனை அவனுக்கு நினைவுபடுத்த, கூற வந்ததை ஓரிரு நொடிகள் மறந்தே போனவன், பிறகு ஒருவாறு சமாளித்துக்கொண்டு,
" ராதா, இந்த பாக்ஸ்ல இருக்கிற நகைகளுக்கு மேட்ச்சா, புடவை கட்டி பங்ஷனுக்கு தயாராகு ..." என பெட்டியைத் திறந்து காட்ட, அதில் மாணிக்கம் மற்றும் மரகத கற்களாலான நெக்லஸ், காதணி , வளையல்கள் பளிச்சிட்டன.
" சார், இதெல்லாம் எனக்கு வேணாம், நான் என்னோடதையே போட்டுகிட்டு வரேன் .."என்றவளின் வாய்மொழி அவனுக்கு கோபம் ஏற்படுத்த
ஏற்கனவே அம்மணி தன்மான சிங்கம் ...சிங்கத்தை சீண்டிப் பார்க்கிற நேரம் இது இல்ல... இவளை வேற மாதிரி தான் கையாளணும்...
என்றெண்ணி அவள் அருகில் சென்றவன் அவள் எதிர்பாராத நேரத்தில் குனிந்து அவள் கன்னத்தில் ஆழ்ந்த முத்திரையைப் பதிக்க,
ஒரு வித சிலிர்ப்புடன் என்ன செய்வதென்று தெரியாமல் மலைத்து நின்றவளிடம்,
" இனி சார்ன்னு கூப்பிட்டா இதுதான் நடக்கும் சரியா... "என்றான் கண்களில் குறும்பு மின்ன.
பதில் ஏதும் கூறாமல் அவள் சாந்தமாக நிற்க
"தயாரா இரு " என்றவன் அறையின் வாயிலை நோக்கிச் சென்று ஒரு நொடி நின்று, திரும்பிப் பார்த்து
"மறுபடியும் சார்னு கூப்பிட்ட இல்ல.... "
கேள்வியிலுள்ள குறும்புத்தனத்தை உணர்ந்து சிரிப்பை அரும்பாடுபட்டு அடக்கியவள்
"இல்லையே நான் கூப்பிடவே இல்லையே ",
"நிச்சயமா இல்லை"
"இல்லவே இல்லை" என புன்முறுவலுடன் பதிலளிக்க,
"அப்ப சரி " என இரு புருவங்களையும் உயர்த்தி நகைப்புடன் கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.
அடர் ரோஜா நிறத்தில் பாசிப்பச்சை பார்டர் போட்ட மைசூர் சில்க் புடவையை அணிந்து, தளர பின்னிய நீண்ட கூந்தலில் மல்லிகைப்பூ சரங்களை வைத்து தேவதை போல் தயாரானவளுக்கு மாணிக்க கற்களுக்கு இடையிடையே மரகதக் கற்கள் பதித்த ஜிமிக்கி, அழகுக்கு அழகு சேர்க்க, சிறு ஒப்பனையுடன் அலங்காரத்தை முடித்தவள்,நெற்றியில் சிந்தூர் வைப்பதற்கும் அவன் அறைக்கு வருவதற்கும் சரியாக இருந்தது.
அவளையே ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை அவள் கழுத்தில் நிலைக்க,
அதில் நெக்லஸ் அணியாமல் இருந்ததைப் பார்த்து
" ஏன் நெக்லஸ் போட்டுக்கல ராதா "
" என்னால கழுத்துல அந்த ஹூக்கை மாட்ட முடியல ..."
" வா நான் போட்டுவிடறேன்..."
என்றவன் ,நிலைக்கண்ணாடியின் முன்பாக நின்றுக்கொண்டிருந்தவளை பின்புறமாக நெருங்கி வந்து நெக்லஸை இருக்கைகளிலும் எடுத்து,அவள் சங்கு கழுத்தை சுற்றி வளைத்து ஊக்கை மாட்டியவன்,
குனிந்து பின்னங்கழுத்தில் மென்மையாக தன் உதடுகளை ஒற்றி எடுக்க, அவன் மீசையின் வருடல் , மூச்சுக்காற்றின் உஷ்ணம் அவள் உடலில் ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்த, மெல்ல அவளை தன்னை நோக்கித் திருப்பியவன் ஒற்றை விரலை அவள் மோவாயில் பதித்து தலையை உயர்த்தி அவள் இதழை சிறைப்பிடித்தான்.
அவளுடைய இதயத்துடிப்பு அவள் காதுகளில் ஒலிக்க , வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பது போன்ற உணர்வில் கட்டுண்டிருந்தாள் கிருஷ்ணாவின் கைபேசி ஒலிக்கும் வரை.
இருவரும் மெய் மறந்த நிலையில் , தன்னை சுதாரித்துக் கொண்டு கைப்பேசியை எடுத்துப் பேசி முடித்தவன்,
எதுவுமே நடவாதது போல்
"வா ராதா நேரமாச்சு .. "
என படிகளை நோக்கி விரைய, அவன் செயல்களை ரசித்தவாறே அவளும் பின்தொடர்ந்து காரில் ஏறி அமர, மென்மையான ஹிந்தி பாடல்களை சுழலவிட்டு அதனை ரசித்தபடி காரை செலுத்தினான்.
இசைக்கு மொழி கிடையாது .
அவளுக்கு ஹிந்தி 100% புரியவில்லை என்றாலும் மென்மையான பாடல்களைக் கேட்க பிடிக்கும் பாடப் பிடிக்கும் என்பதால் , அந்தக் காலகட்டத்தில் வெற்றி பெற்ற ஹிந்தி படங்களின் பாடல்களை ஓரளவு அறிந்தே வைத்திருந்தாள்.
அவள் மனதிற்கு நெருக்கமான பல பாடல்கள் அந்த இசைத் தட்டிலிருப்பது அவர்களுக்கிடையே இருக்கும் ஒத்த ரசனையை காட்ட, பல பாடல்களின் வரிகளில் மெய்மறந்தவன் அவளை காதலாக பார்ப்பதை ஓரக்கண்ணால் ரசித்தாள்.
பூனாவில் 'டெக்கன்' என்ற பகுதியில் பிரம்மாண்ட சாலையில் அமைந்திருந்த பெரிய பங்களாவின் முன் கார் நின்றது.
ஒளி விளக்குகள் மற்றும் இசைக் கச்சேரிகளால் களை கட்டியிருந்த அந்த பங்களாவின் முன்புற தோட்டத்தில் உறவினர்கள் , நண்பர்கள்
சூழ அளவளாவிக் கொண்டிருந்தனர் கர்னல் தம்பதியினர்.
கிருஷ்ணாவை கண்டதும் வரவேற்று ஆரத்தழுவிக்கொண்ட கர்னல் ராதாவை பார்த்ததும்,
" கிருஷ்ணா யூ ஆர் வெரி லக்கி ..உனக்கு எவ்ளோ பியூட்டிஃபுல் வைஃப்...என் நிலைமையை பாரு .. " என தன் மனைவி மித்ராவை சுட்டிக்காட்ட , அவரோ பொய்க் கோபத்தில் கர்னலை லேசாக மொத்த, அவரும் வலிப்பது போல் நடிக்க என அவர்களுக்கிடையேயான அன்னியோன்யத்தை அந்த நிகழ்வு படம் பிடித்துக் காட்டியது.
கர்னலின் நேரம் தவறாமையை அறிந்து அனைவரும் விழா தொடங்குவதற்கு முன்பே அவர் வீட்டு தோட்டத்தில் குழும, விழா நாயகனான கர்னல் பேசும் போது,
"என் பதவி எனக்கு ஒரு கண் என்றால் என் மனைவி மறுகண், அவர் என் வாழ்க்கைல வந்த பிறகு நான் அடைந்த உயரங்கள் பல " என வெகுவாக தன் மனைவி மித்ராவை பாராட்டிப் பேச, கர்னலின் மனைவி மித்ரா பேசிய போது
" நானும் என் கணவரும் ஒத்த வயதுடையவர்கள். இப்போது இருவரும் ஐம்பதாவது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். என்னுடைய நண்பர்கள் ,உறவினர்கள் என அனைவரும் என்னிடம் கேட்கும் ஒரே கேள்வி, நான் இவ்வளவு இளமையாக இருப்பதற்கு என்ன காரணம் என்று.
ஒரு பெண் திருமணத்திற்கு பிறகு ஆரோக்கியமாக, அழகாக ,அமைதியாக, சந்தோஷமாக இருக்கிறாள் என்றால், அவள் ஒரு ஆகசிறந்த மனிதரை மணந்திருக்கிறாள் என்று பொருள்,என்னுடைய திருமணத்திற்குப் பிறகு எனக்கு எல்லாமுமாக இருப்பவர் என்னுடைய கணவர் "என கண்களில் காதல் வழியச் கர்னல் சஞ்சீவிற்கு புகழாரம் சூட்டினார்.
விழாவிற்கு வருகை தந்தவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசிய கர்னல் , இரவு உணவு அனைவருக்கும் தயாராக இருப்பதாகவும், சைவ உணவு இடது வரிசையில், அசைவ உணவு வலது வரிசையில் பரிமாறப்படுவதாக தெரிவித்தவர்,மேலும் மது அருந்த விரும்புவோருக்குக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, என்று குறும்பு மின்ன கூறியதைக்கேட்டு பலத்த கரகோஷம் ஏற்பட்டது.
பொதுவாக இந்திய பாதுகாப்பு படையில் நடைபெறும் விழாக்களில், மது பரிமாறப்படுவது இயல்பு என்றாலும், ஒவ்வொருவரும் மூன்று பெக்கிற்கு மேல் அருந்தக் கூடாது என்பது விதி.
அதனை மேற்கோள் காட்டிய கர்னல் , இவ்விழாவில் மது அருந்துவதற்கு அம்மாதிரி யாதொரு தடையும் இல்லை என்பதை சந்தோஷமாக தெரிவிக்கும் போது விசில் சத்தம் விண்ணை பிளந்தது.
தென் மாநில கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்த ராதாவிற்கு, இங்கு நடைபெறும் அனைத்தும் வெகு புதுமையாக இருந்தது.
கர்னல் தம்பதியினரின் ஒரே மகனான ரோகித், தன்னுடைய பரிவாரத்துடன் சேர்ந்து இரவு நேரத்திற்கான இசை,நடன ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தான்.
ராதாவின் கண்களில் இருந்தே அவளைப் படித்த மித்ரா தன் அருகிலேயே அவளை அமரச் செய்து, அவளின் ஊர், படிப்பு ,நீண்ட கூந்தல் என அனைத்தைப் பற்றியும் அவளை பேச வைத்து கேட்க, அவள் மித்ரா உடன் அமர்ந்திருப்பதை பார்த்து நிம்மதி அடைந்தவனாக தன் நண்பர்கள் கூட்டத்தில் கலந்தான் கிருஷ்ணா.
கர்னலின் மகன் ரோஹித் கிருஷ்ணாவை விட ஆறு வயது சிறியவன் ,சிறுவயதிலிருந்தே கிருஷ்ணாவை "பையா" (அண்ணா) என்றே அழைத்து பழகியவன்.
அவனுக்கு கிருஷ்ணாவின் வருகை உற்சாகத்தை தர ,கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு தனது ஆண் பெண் பேதம் அற்ற பரிவாரத்துடன் நடனத்தில் இறங்கினான் .
விழாவிற்கு வந்திருந்த ரோஹித்தின் நட்பு வட்டத்திலிருந்த ஒரு சில பெண்களுடன் சேர்ந்து கிருஷ்ணா அற்புதமாக நடனமாட, இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராதாவிற்கு காதில் புகை வர ஆரம்பித்தது .
" இதையெல்லாம் பார்க்கத்தான், என்னை சிங்காரிச்சு கூட்டிகிட்டு வந்தாரா.... எந்த முகூர்த்தத்துல அத்தை ' கிருஷ்ணா'ன்னு பேர் வச்சாங்களோ, எப்பவும் கோபியர் சூழ் கண்ணனாவே இருக்காரே ...என குமுறிக் கொண்டிருக்க,
ரோஹித் கிருஷ்ணாவுடன் மது அருந்தும் இடத்தில் மது அருந்திக் கொண்டிருக்கும் போது, எதார்த்தமாக பார்ப்பது போல் அவனை சந்தித்தாள் ரேஷ்மி.
அவளை பார்த்ததும், "ச்சீ " என்ற முக பாவனையுடன் அவன் முகம் திருப்பிக்கொள்ள, அவனுடைய இவ்வெளிப்படையான வெறுப்பிற்கான காரணம், இருவர் மனதிலும் படக்காட்சியாக விரிந்தது.
(இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தவை)
ராதா வருவதற்கு பத்து நிமிடத்திற்கு முன்பு தான் கிருஷ்ணாவின் அறைக்குள் ரேஷ்மி நுழைந்தாள்.
எப்பொழுதுமே அவன் அறைக்கு ராதாவைத் தவிர வேறு யாரும் வராததோடு, அவனோடு பேச நினைப்பவர்கள் கூட உள் தொலைபேசியின் வழியாகவே அவனை தொடர்பு கொள்வார்கள் என்பதால் அவன் அறைக்கதவு எப்பொழுதுமே திறந்தேயிருக்கும்.
அவ்வாறு இருந்த அறைக்குள் நுழைந்தவள் , அவன் குளியலறையில் இருப்பதை அறிந்து கொண்டு, குளித்துவிட்டு அணிவதற்காக எடுத்து வைத்திருந்த அவன் மேல் சட்டையின் காலரில் தன் உதட்டுச் சாயத்தை பூசியதோடு மட்டுமல்லாமல், அவனுடைய படுக்கை விரிப்புக்களை கசக்கினாள்.
(எப்பொழுதுமே அவன் உறக்கம் விழித்ததும் போர்வை, தலையணை மற்றும் படுக்கை விரிப்புகளை சரி செய்த பின்னரே பிற வேலைகளில் ஈடுபடுவான். இது மிலிட்டரி ட்ரெய்னிங்கில் அவன் பழகியது)
ரேஷ்மியை சற்றும் எதிர்பார்க்காதவன் இடுப்பில் துண்டுடன் வெளிப்பட, அவனை அவ்வாறு பார்த்தவள் தாவி வந்து அணைத்துக்கொள்ள, ஓரிரு நொடிக்குள் ரேஷ்மியின் கண்களிலிருந்து பொறி பறக்கும் அளவிற்கு, ஓங்கி ஒரு அறை விட்டவன் "கெட் அவுட் " என்று கத்த, அதற்கு மேல் அங்கு தாமதித்தால் அறைக்குள் நடந்ததை ராதா அறிய நேரும் என்றெண்ணியபடி ,வெட்கத்தால் முகத்தை மறைப்பது போன்று மறைத்துக்கொண்டு ஓரக்கண்ணில் ராதா கீழ்தளத்தில் இருப்பதை மேலிருந்தவாறே பார்த்தபடி படியிறங்கி வெளியேறினாள் ரேஷ்மி.
அந்த சம்பவத்திற்கு பிறகு, அவளை இப்பொழுது தான் சந்திக்கிறான் கிருஷ்ணா.
" கிருஷ்ணா, உங்க கூட ரெண்டு நிமிஷம் தனியா பேசணும்.... ப்ளீஸ் .."
என கெஞ்சிக்கேட்பது போல் அவள் நடிக்க , விறைப்பாக நின்றவன்
"என்ன" என்பது போல் பார்க்க,
" என் அப்பாக்கு ஏற்பட்ட கடன் பிரச்சினையால துணிக்கடையை வித்துட்டோம்... அதனால ஏற்பட்ட மன அழுத்தத்தால அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு ... ஒரு வழியா உடல் தேறி மூணு நாளைக்கு முன்னாடி தான் ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கே வந்தாரு...இதை சொல்லத்தான் அன்னிக்கு உங்க வீட்டுக்கு வந்திருந்தேன் ..ஏனோ உங்களை பார்த்ததும், ரொம்ப ஆறுதலா இருந்தது அதனால தான் அப்படி நடந்துகிட்டேன்.. நீங்க என்னை தப்பா நினைக்காதீங்க .."
என கண்களில் நீர்வழியாத குறையாக வசனம் பேசிக் கொண்டிருந்தவளுடன் கிருஷ்ணா நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராதா,
ரேஷ்மி இங்க வர்றது தெரிஞ்சுதான் என்னை இங்க கூட்டிட்டு வந்தாரா.... அப்ப ஏன் வீட்டுல அந்த மாதிரி நடந்துகிட்டாரு .... இவர் மனசுல என்ன தான் இருக்கு... புரிஞ்சுக்கவே முடியலையே கடவுளே ... என அவள் குழம்பிக் கொண்டிருக்கும் போது,
" சாரி ரேஷ்மி நானும் அன்னிக்கு அவ்ளோ கோபப்பட்டு இருக்கக்கூடாது ..."
" நம்ம கல்யாணம் மட்டும் நடந்திருந்தா, இப்ப நான் உங்களோட வைஃப்பா இருந்திருப்பேன் ...எல்லாம் விதி ..." என மனம் கலங்குவது போல் பாசாங்கு செய்தபடி அவன் கைகளை பற்றியவளிடம்,
" அதை பத்தி இனிமே பேச வேண்டாம் ...ராதாவும் வந்திருக்கா... வா, அவளை மீட் பண்ணலாம்..." என அவன் அழைக்க,
" கர்னலோட வைஃப் எப்பவுமே எங்ககிட்ட தான் துணி வாங்குவாங்க ...
அவங்க தான் இந்த பங்ஷனுக்கு என்னை இன்வைட் பண்ணினதே...
இப்ப எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு, அதை முடிச்சிட்டு கர்னலோட
வைஃப்ப மீட் பண்ணும் போது, ராதாவையும் மீட் பண்றேன்.." என நாசுக்காக பொய் கூறி அவன் அழைப்பினை தட்டிக் கழித்தாள் ரேஷ்மி.
பிறகு ரோகித், கிருஷ்ணாவை ராதாவுடன் நடனமாட அழைக்க, மது போதையா , மங்கை போதையா எனப் பிரித்தறிய முடியாத உல்லாசத்துடன் இருந்தவன் ராதாவின் கரம் பற்றி அழைக்க , அவள் வெட்கப்படுவதைப் பார்த்து மித்ரா,
" நீங்க ரெண்டு பேரும் தான் இங்க நியுலி மேரீட்.... சோ, நீங்க ரெண்டு பேரும் டான்ஸ் பண்ணியே ஆகணும்... " என அன்புக் கட்டளையிட,ரோகித் அவருடன் இணைந்து ஒரே குரலில்
" பாபி (அண்ணி) நீங்க பையாவோட டான்ஸ் பண்ணியே ஆகணும்...
அதுக்காகவே சூப்பர் சாங் ப்ளே பண்ண போறேன் ... " என வேண்ட ,வேறு வழி இல்லாமல் அவள் தன்னவனின் முகத்தை பார்க்க, அவன் கண்களில் எதைக் கண்டாலோ, உடனே அவள் தன் கரத்தோடு அவன் கரத்தை இணைக்க,அப்போது பாடல் தொடங்கவும் சரியாக இருந்தது.
வெற்றி பெற்ற திரைப்படத்திலிருந்து பாடல் இசைக்க ஆரம்பிக்க, அதற்கேற்ற தாள நயத்துடன், பொருத்தமான அங்க அசைவுகளோடு எந்தவித முன் பயிற்சியும் இன்றி இருவரும் தங்களை மறந்து அற்புதமாக நடனமாடினர்.
விழா என்பதையே மறந்து இருவர் மட்டுமே சஞ்சரிக்கும் உலகம் என்றெண்ணி ஆன்மாவுடன் கலந்த அற்புத நடனமாக இருந்தது அது. பாடல் முடிந்து எழுந்த பலத்த கரவொலியே, இருவரையும் நிஜ உலகிற்கு அழைத்து வர, மித்ரா ராதாவை அணைத்துக்கொள்ள ரோகித் கிருஷ்ணாவை அணைத்துக்கொண்டு தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.
ஜோடி பொருத்தம் பிரமாதம் என விழாவிற்கு வந்த அனைவரும் பாராட்ட, இரவு உணவை இருவரும் இணைந்து உண்ணும் போது , ரேஷ்மி விழாவிற்கு வந்து போனதையே மறந்து ஏதோ கனவுலகில் சஞ்சரிப்பது போன்ற மனநிலையில் கிருஷ்ணா இருக்க, ராதா மட்டும் கண்களால் ரேஷ்மியை தேடித்தேடி களைத்தாள்.
ரேஷ்மி ஏன் விழாவின் நாயகர்களான கர்னல் மற்றும் அவரது மனைவி அல்லது ரோஹித்தை கூட சந்திக்கவில்லை.
ஒருவேளை கிருஷ்ணாவை காணத்தான் இங்கு வந்தாளோ.... என மனதில் கேள்விகளுடன் உணவில் மனம் லயிக்காமல் ஒருவாறு இரவு உணவை இருவரும் முடித்தபோது,
மித்ரா ராதாவை அழைத்து,
" உங்க மேரேஜ் ரிசப்ஷனனுக்கு நாங்க ஊர்ல இல்லாததால வர முடியல… அதனால இப்ப உங்க ரெண்டு பேருக்கும் கிப்ட் வாங்கிட்டு வர ரோகித்தை கடைக்கு அனுப்பி இருக்கேன், இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவான்..." எனக் கூறயவரிடம்,
" ஆல்ரெடி மணி 9 ஆயிடுச்சு மேம் ..நாங்க இந்த வீக் எண்ட்ல , உங்க வீட்டுக்கே வந்து கிப்ட்ட வாங்கிக்கிறோம்... அம்மா வேற காத்து கிட்டு இருப்பாங்க... வீட்டுக்கு போகணும் ..." என கிருஷ்ணா கூறியதை கேட்ட
கர்னல் புன்னகைத்தவாறே,
" புது மாப்பிள்ளையோட அவசரம் தெரியாம பேசாத மித்ரா ... ஒரு காலத்துல நானும் புது மாப்பிள்ளையா இருந்தவன் தானே... "
என்றதும் கிருஷ்ணா உட்பட குழுமியிருந்த அனைவரும் சிரிக்க,
" கிருஷ்ணா எப்பவுமே இப்படித்தான் சொல்லுவான் ... ஆனா ஒரு முறை கூட எங்க வீட்டுக்கு வந்ததில்லை ... நாங்களும் நாளைக்கே டேராடூனுக்கு போறோம்...அடுத்த மாச கடைசில தான் வருவோம் ... இன்னைக்கு கூட கிருஷ்ணா இந்த பங்ஷனுக்கு வருவான்னு எனக்கு நம்பிக்கையே இல்லை.. அப்படி இருந்திருந்தா முன்னாடியே நான் உங்களுக்கு கிப்ட் வாங்கி வச்சி இருந்திருப்பேன்....ராதா, நீ இவனை கூட்டிகிட்டு நெக்ஸ்ட் மந்த் எண்டிங்ல கண்டிப்பா என் வீட்டுக்கு வர்றேன்னு ப்ராமிஸ் பண்ணு, அப்புறம் உங்க ரெண்டு பேரையும் நான் ரிலீஸ் பண்றேன் .."
என ராதாவை நோக்கி தன் உள்ளங்கையை காண்பித்த படியே மித்ரா இருக்க, பதிலேதும் கூறாமல் தலைகுனிந்த வண்ணம் நின்றிருப்பவளை பார்த்தவனுக்கு முதலில் ஏதும் புரியவில்லை என்றாலும், பிறகு அவள் மனவோட்டத்தை அறிந்தவனாக, நிலைமையை சமாளிக்க எண்ணி,
" நான் லீவுலதான் இருக்கேன் மேம்... நிச்சயமா ராதாவை கூட்டிக்கிட்டு நெக்ஸ்ட் மந்த் எண்டிங்ல உங்க வீட்டுக்கு வரேன்...இது ப்ராமிஸ் ..." என மித்ராவின் கரத்தை பற்றி வாக்குறுதி கொடுத்தான் கிருஷ்ணா.
விதி வலியது என அறியாமல், அவள் அடுத்த மாதம் வீட்டை விட்டுப் போவது உறுதி என தெரியாமல், வாக்குறுதிகளை வாரி வழங்கியவன் தன்னவளை அழைத்துக்கொண்டு காரில் ஏற, அங்கு மயான அமைதி நிலவ, விழாவிற்கு வரும் போது இருந்த சந்தோஷம் இப்பொழுது இருவரிடத்திலும் வடிந்திருந்தது.
கண்ணனைத் தேடி ......