Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 15

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
544
அத்தியாயம் 15

கிருஷ்ணா, தன் அறையின் ஒருக்களித்திருந்த கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய, அங்கு ராதா வேக வேகமாக துணிகளை தன் பையில் அடுக்கி கொண்டிருந்தாள்.

"என்ன ராதா இது"

"நான் இந்த வீட்டைவிட்டே போறேன் சார் " என்றவளின் கம்மிய குரலில் இருந்த

'சார் ' என்ற அழைப்பு , சற்றுமுன் தணிந்திருந்த அவன் கோபத்தை மீண்டும் துளிர்க்க செய்ய,

அவன் அழைக்கச் சொன்னது போல் ஒரு முறை கூட அவனை 'அத்தான்' என்று அவள் அழைத்ததில்லை என்பது அப்போதுதான் அவன் நினைவுக்கு வர,

" நீ வீட்டை விட்டு போறத பத்தி அப்புறம் பார்த்துக்கலாம், அதுக்கு முன்னாடி எனக்கு சில கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சாகணும் ...."

"கேளுங்க சார் " என்றாள் மெல்லிய குரலில்.

அவள் பேச்சு கோபத்தை கூட்டியதால் ,
அவள் முகத்தை பாராமல் முதுகு காட்டி நின்றபடி,

" நீ ஏன் சித்தார்த்தோட பிஹேவியரை பத்தி முன்னாடியே என்கிட்ட சொல்லல…” என்றான் கட்டுக்கடங்காத கோபத்துடன்.

" நான் மிஞ்சி போனா ஒன் மந்த் தான் இந்த வீட்ல இருப்பேன்... அதுக்குள்ள என்னால உங்க குடும்பத்துல பிரச்சனை வர வேண்டான்னு நினைச்சேன் ..." என்றாள் தலைகுனிந்தபடி .

" உன் மொபைல் நம்பர் சித்தார்த்துக்கு எப்படி தெரிஞ்சது ...
நீ முதல் ரெண்டு எஸ்எம்எஸ்ஐ மட்டும் படிச்சிருக்கே... மத்ததை ஏன் படிக்காம என்கிட்டயும் காட்டாம வச்சிருந்த ..." என கேள்விகளை அவன் அடுக்க

" நீங்க மேமை ஆபரேஷனுக்காக ஹாஸ்பிடல்ல சேர்த்தீங்க இல்ல.... அன்னிக்கு எனக்கு உடம்பு சரி இல்லாததால லேட்டா லஞ்ச் சாப்பிட்டுகிட்டு இருக்கும் போது ,டேபிள் மேலே இருந்த என் மொபைலை எடுத்து சித்தார்த் என்னவோ செஞ்சான்..... அப்பதான் என் மொபைல்ல இருந்து அவன் மொபைல்க்கு எஸ்எம்எஸ் அனுப்பி இருந்திருக்கணும்...

அவனோட நம்பரையும் என் போன்ல அப்பதான் சேவ் பண்ணி வச்சிருக்கணும்னு அப்புறம்தான் தெரிஞ்சது...

சித்தார்தோட எண்ணத்தை முதல் இரண்டு எஸ்எம்எஸ்லயே தெரிஞ்சுகிட்டேன்...

அவன் அனுப்பின மத்த எஸ்எம்எஸ்ஸ டெலிட் பண்ணனும்னா அதை ஓபன் பண்ணனும் ...

அப்படி செஞ்சா
அவன் அனுப்பின எஸ்எம்எஸ்ஸ படிக்க வேண்டியதாயிடும்... அது மனசுக்கு தேவையில்லாத கஷ்டத்தை கொடுக்கும் ... அதனாலதான் அதை ஓபன் பண்ணாம வச்சிருந்தேன் ...
படிச்ச அந்த ரெண்டு எஸ்எம்எஸ்யுமே டெலிட் பண்ணனும்னு நெனச்சேன், ஏதோ நினைப்புல மறந்தே போயிட்டேன் ..."

" நீ அந்த எஸ்எம்எஸ்ஐ டெலீட் பண்ணாம இருந்தது ஒரு வகைல நல்லதுதான்... இல்லன்னா சித்தார்த் மொத்த பழியையும் தூக்கி உன் மேல போட்டிருப்பான்…” என சற்று ஆறுதலாக கூறியவனின் குரலில் உடனே ஒரு வித கடுமை பரவ

" சரி, எதுக்காக விஷால் இங்க வந்தான்" என அடுத்த கேள்விக்கு தாவினான்.

அவள் பதிலேதும் கூறாமல் அமைதி காக்க, அவளிடம் இருந்து பதில் வரவில்லை என்றதும் திரும்பி, அவள் முகத்தை அவன் ஆழ்ந்து நோக்க

" என் தங்கச்சி தேர்டு இயர் மெடிசன் படிக்கிறா...அவ படிப்புக்காக கொஞ்சம் பணம் தேவைப்பட்டது ... என்னோட சேலரி அக்கவுண்ட் இருந்த பேங்க்ல, நகையை அடகு வச்சா வட்டி ரொம்ப அதிகம் ... அடமான தொகையும் குறைவா கொடுக்கிறாங்க .... அதனால விஷாலோட ஃப்ரெண்ட் வொர்க் பண்ற பேங்க்ல, நகையை அடகு வச்சா வட்டி குறைவு, அதோட அடமான தொகையும் அதிகங்கிறதால என் கழுத்து செயினையும், கை வளையலையும் விஷால் மூலமா அடகு வைக்க ஏற்பாடு செஞ்சேன்... நான் இன்னைக்கு ஆபீஸ் போகாததால அந்தப் பணத்தை கொடுக்கறதுக்கு அவர் வந்திருந்தாரு..."

என பணம் மற்றும் நகையை அடமானம் வைத்ததற்கான ரசீது அடங்கிய அந்த சிறிய வெள்ளை நிறக் கவரை அவனிடம் நீட்டினாள்.

அதில் விஷாலின் பெயரில் நகை அடமானம் வைத்ததற்கான ரசீது மற்றும் கத்தையாக பணம் இருந்ததை பார்த்தவன், தனக்கென்று உடமையாக்கப்பட்டவள் ,ஓர் அந்நிய ஆணிடம் பண உதவி பெற்றதை பொறுக்கமாட்டாமல்,

" உனக்கு பணம் தேவைன்னா என்கிட்ட கேட்டிருக்கலாமே ராதா..."என்றான் ஆற்றாமை கலந்து கோபத்துடன்.

அவள் அவன் மேல் ஒரு விரக்தியான பார்வையை வீசிவிட்டு ,

" நான் உங்க கம்பெனில இருந்து ஏற்கனவே இரண்டு லட்ச ரூபா, என் அப்பாவோட ஹார்ட் ஆபரேஷனுக்காக கடன் வாங்கியிருக்கேன் சார்....

அதுக்கு வட்டி இல்லனாலும், எவ்வரி மந்த் ஒரு குறிப்பிட்ட அமௌன்ட்ட திரும்ப கட்டிக்கிட்டு தான் வரேன் ...

கம்பெனி ரூல் படி கடன் வாங்கின தொகைல 50% திருப்பி கட்டி இருந்தா தான் மேற்கொண்டு கடன் வாங்க முடியும் ...நான் இன்னும் 50% கடனை திருப்பி கட்டல... அதனால எனக்கு மறுபடியும் லோன் கொடுக்க மாட்டாங்க ..." என மொழிந்தாள் உணர்ச்சியற்று .

இதைக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு கோபம் தலைக்கேறினாலும், அதனை காட்டிக்கொள்ளாமல்,

" கம்பெனி என் அம்மாவோட உழைப்பு,அது அவங்களோட சொத்து .... நீ ஏன் என் கிட்ட பணம் கேட்கல ....

நான் சம்பாதிக்கலயா, இல்ல என்கிட்ட தான் பணம் இல்லையா ..." என பொறுமையை காற்றில் பறக்க விடாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டு .

எந்த உறவை சொல்லி உங்கிட்ட பணம் கேட்பேன் ... உறவே இல்லைங்கிற நிலையில பணம் கேட்கிற உரிமை மட்டும் எங்கிருந்து வரும் ...
என்றவளின் மனம் மானசீகமாக அவனை சாட,

" ஒரு மாசத்துக்குள்ள இவ்ளோ பெரிய தொகையை என்னால உங்களுக்கு திருப்பி கொடுக்க முடியாது சார்.." என மனதில் நினைத்ததை மென்று முழுங்கி வேறு மாதிரியாக கூறி முடித்தாள்.

எதுக்கெடுத்தாலும் வீட்டை விட்டுப் போறதுலயே குறியா இருக்கா .... என எரிச்சல் அடைந்தவனின் மனம் சமாதானம் அடையாமல், அவன் செய்த பிசகை சுட்டிக்காட்ட, வேறு வழி இல்லாமல் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ள

" நீ ஏன் விஷால வீட்டுக்குள்ள கூப்பிட்டு பேசல ...அப்படி செஞ்சிருந்தா இவ்ளோ பெரிய பிரச்சனையே வந்திருக்காதே...." என தன் செயலை நியாயம் ஆக்குவது போல் அவன் கேள்வி எழுப்ப,

" விஷாலை வீட்டுக்குள்ள கூப்பிட்டு பேசியிருந்தா, அவர் நான் நகையை அடமானம் வச்சு பணம் வாங்கினத எல்லார் முன்னாடியும் தெளிவா சொல்லி இருப்பாரு....
ஏற்கனவே பர்வதம் அத்தை என்னோட ஃபைனான்ஷியல் ஸ்டேட்டஸ எல்லார் முன்னாடியும் சொல்லிகாட்டி தர குறைவா நடத்துறாங்க… இப்ப நான் நகையை அடமானம் வச்சு பணம் வாங்கினது தெரிஞ்சதுன்னா இன்னும் அவமான படுத்துவாங்க .... அதனாலதான் விஷால வீட்டுக்குள்ள கூப்பிடல ..." என்றாள் கம்மிய குரலில்.

அதனைக் கேட்டவனுக்கு பர்வதத்தின் மீதான கோபம் பன்மடங்கு அதிகரிக்க, ஆனால் அவன் மனமோ அவனையே குற்றவாளி எனக் கூறியது.

அவன் செய்த பிசகு தான் பல பிரச்சனைகளுக்கு வழிவகுத்துள்ளது என அறிவுறுத்தியது.

'கொண்டவன் தூற்றினால் கூரையும் தூற்றும்' என்ற பழமொழி போல் , நீ ராதாவை நடத்தியவிதம், கொடுத்த இடம் தான், மற்றவர்கள் அவளை இஷ்டம் போல் பந்தாட காரணமாக இருந்தது என அவன் மனம் மானசீகமாக இடிந்துரைக்க,

பாவம்.... சின்ன பெண் தனியாளாக தங்கையை படிக்க வைத்து, தந்தையின் உயிரைக் காப்பாற்றி,எந்நிலையிலும் தன்மானம் குறையாமல் வாழ நினைத்தவளை நானும் சித்தார்த்தும் அவரவர் வழிகளில் துன்பப்படுத்தி இருக்கிறோம் என வருந்த தொடங்கியவனுக்கு இவ்வளவு கேள்விகள் கேட்ட பின்பும் மேலும் ஒரு கேள்வி உறுத்திக் கொண்டே இருக்க

" கம்பெனி ஓனரோட மருமகள், எதுக்காக தங்க நகையை அடமானம் வச்சு பணம் வாங்கனும்னு விஷால் உன்கிட்ட கேட்கவே இல்லையா ... ?" என்ற கேள்வியை அவள் முகத்தை பார்த்த படி ஆர்வமாக அவன் கேட்க

" விஷால் அப்படி எதுவும் என்கிட்ட கேட்கல ... நான் தான் என் தங்கையோட படிப்பு செலவு, என் அப்பாவோட ஆபரேஷன் செலவெல்லாம் என்னோட சுமை .... அதை நான் தான் சுமக்கணும்னு நானே அவர் கிட்ட சொல்லிட்டேன்...." என்றவளின் பதிலில் அவள் விஷாலை விட்டுக்கொடுக்காமல் பேசுவதாக தப்பர்த்தம் செய்து கொண்டவன்,
பொருளாதாரத்தில் உயர் நிலையில் இருக்கும் ஒரு வீட்டின் மருமகள், தன்னுடைய பொருளாதார நெருக்கடியை தானே சமாளித்து கொள்கிறாள் என்றால் கணவனின் அன்பும், அந்த வீட்டின் ஆதரவும் இல்லை என்றுதானே அர்த்தம்.

இதனை விஷால் இவளிடம் நேரடியாக கேட்கவில்லை என்றாலும், அவனுடைய மனம் அதனை உறுதி செய்திருக்கும்.

என்னுடனான விவாகரத்திற்கு இவள் உடனே சம்மதம் சொன்னதற்கு விஷாலோ அல்லது வேறு எந்த சூழ்நிலை காரணமாக இருந்தாலும் இனி இவளே என்னை விரும்பாவிட்டாலும் இவள் தான் என் மனைவி.

நான் எந்த நிலையிலும் இவளை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கபோவதில்லை...

என்ற நிலைப்பாட்டினை அவன் மனம் எடுத்த நேரம், அவன் மனதில் இதுநாள் வரை போர்த்தியிருந்த கண்ணாடி திரை விலகியது போன்ற உணர்வை பெற்றான் .

இத்தனை நாள் தன்னை அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்றை கீழே இறக்கி வைத்தது போன்ற உணர்வை தன்னுள்ளே ரசித்துக்கொண்டிருந்தவன், மனதில் நினைத்ததை அமல்படுத்த எண்ணி திரும்பி பார்த்த போது அவன் மனையாள் அங்கு இல்லை.

'ராதா' என்றழைத்தபடியே அறை முழுவதும் தேடும் பொழுது தான், அவளுடைய துணி பை மற்றும் பெட்டியும் அங்கில்லை என்பதை உணர்ந்தவன் ,உடனே சற்று முன் அவள் தெரிவித்ததுபோல் வீட்டை விட்டு கிளம்பி போயிருக்க வேண்டும் என உறுதிப்படுத்திய வேளையில்,
அவள், வீட்டு வாசலைக் கடந்து தெருமுனையில் ஆட்டோ நிறுத்தும் இடத்தை நோக்கி வேகமாக நடை போட்டுக் கொண்டிருந்தாள்.

மணி இரவு பத்தை தொட்டுக் கொண்டிருக்க, உடலை வாட்டும் குளிரில் முந்தானையை இழுத்துப் போர்த்தியபடி அவள் வேக நடை இட,

இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருசக்கர வாகனமும், காரும் பறந்து கொண்டிருக்க, எங்கோ நாய் குறைக்கும் சத்தம் என சூழ்நிலை அவள் மனதில் பயத்தை விதைத்தாலும், அவள் யாரை நம்பினாலோ அவனே அவளை சந்தேகப்பட்டதும், தன்னை மருமகளாக இல்லாமல் மகளாக நடத்திய ராஜேஸ்வரியும் அந்த வீட்டில் இல்லாத நிலையில் இனிமேல் அந்த வீட்டில் இருக்க மனமில்லாமல், வைராக்கியத்தை மட்டும் உடும்பு பிடியாக பிடித்துக் கொண்டு கையில் பணம் இருக்கிறது ஏதாவது மகளிர் விடுதியில் தங்கிக் கொள்ளலாம் என்ற அசட்டு தைரியத்துடன் ஆட்டோக்கள் நின்றிருந்த இடத்தை வந்தடைந்தவளின்,
அழுது வீங்கிய முகமும், கிருஷ்ணா அடித்ததால் அவன் கை விரல்கள் தடம் பதிந்த சிவந்த கன்னமும், அந்த நிலையிலும் அப்பழுக்கில்லாத குழந்தைத்தனமான முகமும், அவள் கூறாமலே அவளைப் பற்றிக் கூற இதனை அங்கிருந்த ஆட்டோ காரர்களின் கழுகு பார்வைகள் படித்தன.

அவள் பேசிய
மழலையான ஹிந்தியை வைத்து அவள் அம் மாநிலத்தைச் சார்ந்தவள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதும்,

அதிலொருவன் அவளை தான் அழைத்துக் செல்வதாக கூற, மற்றொருவன் தன்னை நோக்கித் தான் அவள் முதலில் வந்ததாக கூற, இருவருக்குமிடையே வாக்குவாதம் மராத்தியில் நடந்தாலும், அவர்களின் எண்ணத்தை அவர்களின் செயல்களில் இருந்தே படித்தவள், இனிமேல்
அங்கிருந்தால் தனக்கு ஆபத்து என்று உணர்ந்து, ஓட முயற்சிக்கும் பொழுது,

ஒருவன் அவள் தோள் பையை பற்றி தன்னை நோக்கி இழுக்க, அவளும் தன் பங்கிற்கு பையை விடாமல் இழுத்து பிடிக்க, பையின் கைப்பிடி தோளிலிருந்து வழுக்கி அவள் முழங்கையின் இடுக்கில் மாட்டிக்கொள்ள, மற்றொருவன் அவளுடைய வலது கையைப் பற்றி இழுக்க, அவளுடைய உலகம் இருண்டு போவதை உணர்ந்து தன் சக்திகள் அனைத்தும் வடிந்த நிலையில், கடவுளே என்னை காப்பாற்று என்ற அவளது கடைசி மூச்சில், அவளது வல கையைப் பற்றிக் கொண்டிருந்தவன் கையை விட்டுவிட்டு தலை தெறிக்க ஓட, காரணம் புரியாமல் திரும்பி பார்த்த போது , அவள் பையை பற்றிக் கொண்டிருந்தவனை நையப் புடைத்து கொண்டிருந்தான் கிருஷ்ணா .

அவனை கண்டதும் ஏற்பட்ட நிம்மதி மற்றும் போராடிய களைப்பும் சேர்ந்து சக்திகள் அனைத்தும் வடிந்த நிலையில் அவள் சரிந்து விழ , அடித்துக் கொண்டிருந்தவனை அப்படியே விட்டுவிட்டு ஓடிவந்து அவளை தாங்கிப் பிடித்தான் கிருஷ்ணா.

அவள் உடம்பு பயத்தால் நடுங்க, அவள் இதயத்துடிப்பின் ஒலியை உணர்ந்தவன், அளவுக்கதிகமான குளிரால் அவள் கால்கள் உணர்வற்று சரிவதை கண்டு அவளை கையிலேந்தி, காரின் பின் கதவை திறந்து, அங்கு நீட்டி படுக்க வைத்துவிட்டு, காரை ஓட்ட தொடங்கியவன் ஐந்து நிமிடத்தில் வீடு வந்து சேர்ந்தான்.

மணி பதினொன்றைக் கடந்திருந்ததால் வீட்டு உறுப்பினர்கள் நல்ல உறக்கத்தில் இருக்க , அவளை கையில் ஏந்திக்கொண்டு தன் அறைக்கு தூக்கி சென்று தன் படுக்கையில் கிடத்தி, அவளது கை கால்கள் உணர்வற்ற ஜில்லென்று இருப்பதை உணர்ந்து, நீலகிரி தைலத்தை சூடு பறக்கத் தேய்த்ததோடு, அவள் கையில் ஏற்பட்ட சிராய்ப்பில் ரத்தம் வடிவதை துடைத்து அதன் மேல் பாக்டீரியா எதிர்ப்புள்ள களிம்பை தடவி பிளாஸ்திரியை ஒட்டியவன் அவளை தன் கை வளையத்திற்குள் வைத்தபடி நெருங்கிப் படுத்துக் கொண்டான்.

இரவு ஒளியில் நிலா போன்ற அவளது குழந்தைத்தனமான முகம் காந்தமாக அவனை இழுக்க, அப்பொழுது அவன் கை விரல் தடம் பதிந்த அவளது கன்னத்தைப் தொட்டு பார்த்து, அவள் அடைந்த வலியை நினைத்து கண்கலங்கியவன்,

எனக்கு மட்டும் உன்னை அடிக்கணும்னு ஆசையா, நீ பேசின வார்த்தையை பொறுத்துக்க முடியல கண்ணம்மா ... உன்னை அடிச்சிட்டு அதை விட அதிகமான வலியை, நான் அனுபவிச்சுகிட்டு இருக்கேன் என கலங்கினான்.

உறக்கம் என்பதனைத் தாண்டி ஒரு வித மயக்க நிலையில் சயனித்திருந்தவளின், சரிந்த முந்தானை, பளிச்சிட்ட அங்கங்கள்,இளந்தளிர் போன்ற மிருதுவான சருமம் , பஞ்சு போன்ற வாளிப்பான இடை மற்றும் அவளுக்கே உரிதான வாசம் என அனைத்தும் அவனை உறங்கவிடாமல் பாடாய் படுத்த, உடன் முத்தமிடும் ஆசையும் எழ, உறக்கம் கலைக்காமல் அவள் கன்னத்தில் லேசாக தன் இதழை ஒற்றி எடுத்தவனுக்கு

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி..... என்ற மகாகவியை படிக்கவில்லை என்றாலும்
அந்த உணர்வு மேலோங்கி இருக்க,

அவன் அன்னியர்களிடம் சண்டையிட்டு போராடியதை விட, அவளது நெருக்கத்தால் ஏற்பட்ட நெருப்பில் மெழுகாய் உருகும் மனதுடன் போராடியதே மிக அதிகமாகிப் போக
அது அவனது ஆண்மைக்கு விடப்பட்ட பெரும் சவாலாகவே கருதியவன், ஒருவழியாக போராடி நித்ராதேவியின் அருளால் கண்ணயர்ந்து போனான்.

காலை ஏழு மணி அளவில் அவளுக்கு உறக்கம் கலைய, படுக்கையை விட்டு எழ முயற்சிக்கும் போது தான் தன்னை வலிமையான கரங்கள் சுற்றிவளைத்திருப்பதை உணர்ந்து நேற்று இரவு நடந்த சம்பவம் நினைவுக்கு வந்து பதறி விலகி
பிறகு சுயம் உணரும் போது கிருஷ்ணாவின் படுக்கையில் அவனுடன் இருப்பதை அறிந்து, மேலும் தன் ஆடைகள் அலங்கோலமாய் இருப்பதையும் பார்த்து தடுமாறிப்போய்

நேத்து ராத்திரி என்ன நடந்திருக்கும் ..
நான் எப்படி இவரோட படுக்கைல அதுவும் இவ்ளோ நெருக்கமா ...

என ஏகப்பட்ட கேள்விகளுடன் எழ முயற்சித்தவள், தன் முந்தானை முழுவதும் அவனிடம் சிக்கிக் கொண்டிருப்பதை பார்த்து என்ன நடந்திருக்கும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட தொடங்கினாள்.

அவள் அசைவில் கண்விழித்தவன், அவள் உடல்நலத்தை பற்றி விசாரிக்க எண்ணி எழுந்தமரும் போது தான் , அவள் பேந்தப் பேந்த விழித்துக்கொண்டிருப்பதை பார்த்து, பொங்கி எழுந்த சிரிப்பை அடக்கியபடி, அவள் மனவோட்டத்தை அறிந்தவனாக, அவளை மேலும் குழப்ப எண்ணி காதலாக பார்த்து, இரு கண்களையும் ஒன்றாக சிமிட்டி சிரிக்க, இதுதான் தருணம் என தன் முந்தானையை உருவி கொண்டு குளியலறைக்குள் ஓடி மறைந்தவளின் செய்கை மேலும் சிரிப்பை மூட்ட
"ஆஹாஹா" என வாய் விட்டே சிரித்தான்.

குளியலறை கண்ணாடி முன் நின்றிருந்தவளுக்கு, எப்படி யோசித்தாலும் நேற்று இரவு சம்பவத்தில் கிருஷ்ணாவை பார்த்ததற்கு பிறகு நடந்த எந்த நிகழ்வும் அவள் நினைவில் இல்லை .

கையை தூக்கி பல் துலக்கும் பிரஷ்யை எடுக்க முற்படும் போது முழங்கையில் வலி ஏற்பட ,அப்போதுதான் அங்கிருந்த பிளாஸ்திரியை கவனித்தாள் .

மேலும் உள்ளங்கையில் வீசிய நீலகிரி தைலத்தின் வாசனையை முகர்ந்து பார்த்தபடி

" இவ்ளோ நடந்திருக்கு ஒண்ணுமே நினைவில்லையே ..."
எனத் தன்னையே நொந்து கொண்டவள்
கண்விழித்த போது தனது ஆடை அலங்கோலமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் கிருஷ்ணாவின் வலிமையான கரங்கள் தன்னை சுற்றி வளைத்திருந்ததை மனதில் பட காட்சியாக ஓட்டி பார்த்தவளுக்கு ஏதாவது எல்லை மீறல் நிகழ்ந்திருக்குமோ என்ற ஐயம் எழ அதனை தெளிவுபடுத்திக்கொள்ளும் வழி தெரியாமல் தவித்துப் போனாள்.

அவன் மேல் அவள் வைத்திருக்கும் காதலானது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கடந்த ஒன்று என்பதை உணர்ந்தவளாதலால் முதன்முதலாக தன்னை மறந்து அவனுடைய அணைப்பில் இருந்ததை ஒருவித இன்ப கனவாக நெஞ்சினில்
சுமக்க
பிரிவு மிக அருகிலேயே இருக்கிறது என்பதை உணராமலேயே அவள் மனம் முழுவதும் அவள் மணாளனை பற்றிய எண்ணங்களே நிரம்பி வழிந்தன.

கண்ணனைத் தேடி
 
Back
Top