- Joined
- Jul 21, 2025
- Messages
- 544
- Thread Author
- #1
அத்தியாயம் 14
பொழுது விடிந்ததிலிருந்து நேற்று இரவு என்ன நடந்திருக்கும்,
ராதா கிருஷ்ணாவிடம் கோவப்பட்டிருப்பாளா, இருவருக்குமிடையே சண்டை மூண்டிருக்குமா.....? என பர்வதம் தனக்குள்ளே கேள்வி கேட்டு கொண்டிருக்கும் போது , சித்தார்த் வர
" ஏண்டா உனக்கு ஏதாவது விவரம் தெரியுமா... ஒரு சத்தத்தையும் காணமே.. வழக்கம் போல கிருஷ்ணா ஜாகிங் போய்ட்டான்... இந்த ராதா பொண்ணு பூஜைக்காக பூ பறிச்சுக்கிட்டு இருக்கா... என்ன நடக்குதுன்னே புரியல... எனக்கு ஒரு வேலையும் ஓட மாட்டேங்குது ...தலையே வெடிச்சிடும் போல இருக்கு .."
" அம்மா, கிருஷ்ணா போல இவளும் அழுத்தக்காரி தான்...இன்னைக்கு சனிக்கிழமை தானே இரண்டு பேரும் வீட்ல தான் இருப்பாங்க ...பொறுமையா இரு ...ஏதாவது நூல் கிடைக்கும் .." என்றான் வன்மத்தோடு.
விடுபட்ட வேலைகளை பத்து நாட்களாக போராடி எண்பது சதவீதம் முடித்து விட்டதால் அந்த சனிக்கிழமை எங்கும் செல்லாமல் ஓய்வெடுக்க எண்ணினாள் ராதா.
ஜாகிங் முடிந்து வீடு திரும்பியவன் முதலில் தேடியது ராதாவை தான்.
அடர் ஊதா நிற காட்டன் பட்டுப்புடவையில்,பாராயணம் முடிந்து, கையில் பிரசாததட்டுடன் வந்தவளை வைத்தக் கண் வாங்காமல் அவன் ரசித்துப் பார்க்க,
அவள் வழக்கம் போல் அந்த வீட்டில் உள்ள அனைவரிடமும் பிரசாத தட்டை காண்பித்த வண்ணம் வர, அவனை கண்டதும், தட்டை நீட்ட அவளே விபூதி வைக்கட்டும் என்ற எதிர்பார்ப்பை முகத்தில் காட்டிய படி நின்றவனின் எண்ணத்தை அறியாதவள் போல், விபூதி தட்டை இரண்டாவது முறையாக உயர்த்தி காட்ட, வேறுவழியில்லாமல்,
"நீயே வச்சு வடு " என்றான் கிருஷ்ணா.
"நீங்களே வச்சுக்கோங்க " என்றாள் கண்ணில் அன்னியத்தை தேக்கி.
கண்களில் குறும்பு மின்ன,
"என் கை ஒன்னும் சும்மா இல்ல அதுக்கு வேற வேலை இருக்கு..." என்று கூறியபடி அருகிலிருந்த சிறு பூந்தொட்டியை ,தன் இரு கைகளில் தூக்கி பிடித்துக் கொண்டு,அவளை நோக்கி அவன் தலைகுனிய, வேறு வழியில்லாமல் அவளே எம்பி அவன் நெற்றியில் விபூதி குங்குமத்தை வைத்துவிட, அவளைப் பார்த்து ஒற்றைக் கண் சிமிட்டி வெண்பற்கள் தெரிய சிரித்து வைத்தான் அந்த கோகுல கண்ணன்.
இவர் சிரிக்கும் பொழுது உலகை மறந்து சிரிக்கிறாரோ இல்லையோ,ஆனா இவர் சிரிப்புல நான் உலகை மறக்கிறேன் என்றெண்ணியவாறே அவள் சமையலறைக்குள் நுழைய,
நேற்று இரவு நடந்த கூத்திற்கு இருவரும் இந்நேரம் குழாயடி சண்டையல்லவா போட்டிருக்க வேண்டும் அதை விடுத்து, காதல் காட்சி ஓடிக்கொண்டிருக்கிறதே என கருவினான் சித்தார்த்.
தியாகராஜன் வந்ததிலிருந்து, தினமும் இரண்டு வெவ்வேறு வகையான இனிப்புகள் மற்றும் காரவகை தின்பண்டங்கள் தயாரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் மகி இருப்பதால், இன்றொரு நாலாவது, அவளுக்கு தன்னாலான உதவிகளை செய்யலாம் என்றெண்ணி ராதா காலை உணவை தயார் செய்ய,
கிருஷ்ணாவும் சித்தார்த்தும் உணவு மேஜையில், எதிரெதிரே அமர்ந்தவாறு, காலை உணவிற்காக காத்திருக்க, ராதா இருவரின் தட்டிலும் தோசையை வைத்து தக்காளி சட்னி , புதினா சட்னியை பரிமாறினாள்.
சித்தார்த்தின் கைகள் தட்டிலுள்ள தோசையை பற்றி கொண்டிருந்தாலும், அவனுடைய கண்கள் அணுவணுவாக அவளையே மேய்ந்து கொண்டிருந்தன.
அவள் வேலையின் காரணமாக முந்தானையை இடுப்பில் அள்ளி சொருகியிருக்க , அந்த இடைவெளியில் தெரிந்த தந்த நிறத்திலேயே அவன் கண்கள் நிலைத்திருந்தன.
கிருஷ்ணா எதேச்சையாக ராதாவின் உச்சி வகுட்டில் இருந்த சிந்தூர் ,நெற்றியிலிருந்த குங்குமத்தை பார்த்துக் கொண்டே வர, அவள் எப்போதும் கழுத்தில் அணிந்திருக்கும், மெல்லிய கம்பி போன்ற தங்கச்சங்கிலியை காணாமல் வெறும் புது மஞ்சத் தாலியுடன் இருந்ததோடு, கைகளில் கண்ணாடி வளையல்கள் மட்டும் இருந்ததை கண்டு யோசித்தவனின் கண்கள், தன்னிச்சையாக மகி மற்றும் பர்வதத்தை ஆராய அவர்கள் கழுத்தில் தடிமனான தங்கச் சங்கிலி, கைகளில் தங்க வளையல்களையும் அணிந்திருக்க,
ஏன் இவ எதுவுமே போட்டுக்காம இருக்கா.... என்றெண்ணியபடியே எதேச்சையாக சித்தார்த்தை பார்க்க, அவனோ அவளை வேறுவிதமாக பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்தவன்
" ராதா, நீயும் உட்கார்ந்து சாப்பிடு ....மகி அக்கா பரிமாறட்டும்.." என்றான் சித்தார்த்தை முறைத்து கொண்டே.
அவள் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க, சித்தார்த் மெதுவாக அவளை பார்த்தவாறே சாப்பிட
" சித்தார்த், நீ பூனாக்கு வந்து பத்து நாளுக்கு மேல ஆகல....எப்ப குன்னூருக்கு போறதா உத்தேசம் .....நீ இங்க இருந்தா அங்க உன் வேலையை யார் பார்ப்பா..." என எரிச்சலுடன் கிருஷ்ணா கேட்க,
உடனே பர்வதம்,
" இவன் ஒன்னும் அங்க பஞ்சம் பிழைக்கல தம்பி... இவன் கிட்டயே 500 பேருக்கு மேல கைகட்டி வேலை பாக்கறாங்க...இவன் யாருக்கும் பதில் சொல்லி, மாச சம்பளம் வாங்க வேண்டிய அவசியமில்ல..."
என மறைமுகமாக கிருஷ்ணாவை குத்தி காட்டி பேசும் போது, அவன் கைப்பேசி சிணுங்க, அதனை கையில் எடுத்தவன்
" சாப்பிட்டது போதும், போய் ரெஸ்ட் எடு ..." என ராதாவை விரட்டாத குறையாக அனுப்பிவிட்டு, ராஜேஸ்வரியை பார்க்க மருத்துவமனைக்கு சென்று விட்டான் .
இப்போது ராதாவுக்கு கிருஷ்ணாவின் மீது முன்பு போல் கோபமில்ல என்றாலும், ஒருவிதமான ஆற்றாமை கலந்த வருத்தம் இருக்கவே செய்தது.
இவர் ஒவ்வொரு முறையும் சித்தார்த்திடமிருந்து என்னை காப்பதற்கு பெயர் கரிசனமா? காதலா?...எனத் தன்னையே கேட்டுக் கொண்டாள் அந்தப் பேதை.
அன்று அமாவாசை என்பதால் மதிய உணவும் சைவம்.
மகிக்கு வார இறுதியில் மட்டுமே நேரம் கிடைக்கும் என்பதால், முருகனின் ஆஸ்துமா பிரச்சனைக்காக அவளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, தானே அன்றைய மதிய உணவை தயார் செய்து கொண்டிருந்தாள் ராதா.
மகி முருகனுடன் மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றது தெரியாமல்,
" மகியக்கா .... "என்றழைத்தவாறே மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்தவன் சமையலறைக்குள் நுழைய, அங்கு புடவையை அள்ளி சொருகிக் கொண்டு வியர்த்து விறுவிறுக்க சமைத்துக் கொண்டிருந்தவள்
கிருஷ்ணாவின் குரல் கேட்டு திரும்ப, அவள் முகத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருந்த வியர்வைத் துளிகள்,பூக்களின் மேலிருக்கும் பனித்துளிகளை நினைவூட்ட உடனே சுவரின் மீது சாய்த்துக்கொண்டு மார்பின் குறுக்கே கைகளை கட்டியபடி அவளை உச்சி முதல் பாதம் வரை சுவாரஸ்யமாய் அளந்தவனை , ஒருவித நாணத்துடன் பார்த்தவள் என்ன என்பது போல் விழிகளால் வினவ
" தலை வலிக்குது சாய் வேணும்..... " என்றான் புன்னகைத்தவாறே.
அவள் பதிலேதும் கூறாமல் அவனுக்கு முதுகு காட்டியபடி தேநீர் தயார் செய்ய ,
அதனிடையே மிக்ஸியிலிருந்த ஜாடியை அகற்ற அவள் எத்தனிக்கும் போது , அது அவள் கைகளில் வராமல் ஆட்டம் காட்ட, அதனைப் பார்த்துக் கொண்டிருந்தவன் புன்னகைத்தபடி அவளை பின்புறமாக நெருங்கி, அவளது இரு கைகளின் மேல் தன்னிருகைகளையும் வைத்து குனிந்து கொடுத்த சிறு அழுத்தத்தில், மிக்ஸி ஜாடி இலகுவாக வெளியே வர, அவளை
பின்புறமாக அணைத்தவாறு நின்றிருந்ததால் அவள் கூந்தலில் சூடியிருந்த மலர்கள், அவனுள் ஒரு வித மயக்கத்தை விதைக்க,
அவன் மூச்சுக்காற்று அவள் கழுத்துப்பகுதியில் படிந்து ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்தி , அவள் மேனியில் உஷ்ணத்தை கூட்ட, மோன நிலையில் தன்னை மறந்தவன் பஞ்சு போன்ற மென்மையான அவளது முதுகு பகுதியில் இதழ் தடம் பதிக்க முயலும் போது சிவபூஜையில் கரடியாய் பர்வதம் சமையலறையை எட்டிப் பார்க்க, எதேச்சையாக அதை கண்டவன், வெடுக்கென கைகளை விலக்கிக்கொண்டு வெளியேற முயல, பர்வதம் எட்டிப்பார்த்ததை அறியாத ராதா
"டீ ரெடி..." என்றாள்.
" இப்ப தலை வலி இல்ல ..... இட்ஸ் கான்...." என்றபடி இடத்தை காலி செய்தவனின் செய்கையை எண்ணி உள்ளுக்குள்ளே மகிழ்ந்தும் குழம்பியும் போனாள் .
அவனுடைய அருகாமை அவளுக்கு பிடித்திருக்க , ஏதோ ஒன்று அவனை தன்னுடன் ஒன்ற விடாமல் தடுக்கிறதே(பர்வதம் எட்டிப்பார்த்தது தெரியாமல்) என்றெண்ணியவாறு சமையலில் மூழ்கி போனாள்.
பர்வதம் தான் கண்ட காட்சியை எண்ணி மனதில் காந்த, தன்னுடைய திட்டம் ஏதும் பலிக்காமல் இருப்பதை நினைத்து புழுங்கியவள், சமையல் அறைக்குள் நுழைந்தால் ராதாவிற்கு உதவி செய்ய வேண்டிவரும் என்றெண்ணி உள்ளே நுழையாமல் கூடத்திற்குச் சென்றாள்.
ராதா சமையலை முடிக்கும் தருவாயில், மகி முருகனுடன் வீடு திரும்ப,
அனைவரும் மதிய உணவிற்காக உணவு மேஜையில் காத்திருக்க, மகி ராதாவை அவர்களுடன் அமரச்செய்து உணவு பரிமாற ஆரம்பித்தாள்.
அனைவருக்கும் ராதாவின் கைப்பக்குவம் புதிய சுவையை அறிமுகப்படுத்த கிருஷ்ணாவும் சித்தார்த்தும் முதன்முறையாக சைவ உணவின் ருசியை ரசித்து உண்டனர்.
ம்ம்ம்ம் .... குட் ஃபுட்.... என கிருஷ்ணா மனதில் சிலாகித்து கொண்டிருக்கும் போதே,
"உன் கைக்கு மோதிரம் தான் போடணும் ராதா .... " என்றான் சித்தார்த் ராதாவின் முகத்தை ஆர்வத்துடன் நோக்கி.
அதன் உட்கருத்து அவளுக்கு அதிர்ச்சியை கொடுக்க , கிருஷ்ணாவின் கோபம் அவன் கண்ணில் மின்ன, உடனே மகி,
" தம்பி, சாப்பாடு நல்லா இருந்தா வளையல் போடணும்னு சொல்லுவாங்க... நீங்க என்ன புதுசா மோதிரம் போடணும்னு சொல்றீங்க ..."
" முதல்ல மோதிரம் அக்கா, அப்புறம் தான் வளையல் வரும் ..." என்றான்
ஒருவித கிறக்கத்தோடு ராதாவை பார்த்தவாறே இரட்டை அர்த்த வசனத்தில்.
கிருஷ்ணாவின் கோபம் இம்முறை கரையை கடக்க, அதை அவன் முஷ்டி முறுக்கிலும் , கண் சிவப்பிலிருந்தே படித்தவள், இதற்கு மேல் அங்கு இருந்தால் பிரச்சனை வளரும் என்றெண்ணி அரைகுறை உணவுடன் கைகளை கழுவிக் கொண்டு தன் அறை சென்றுவிட்டாள்.
பிறகு மருத்துவமனைக்கு சென்று ராஜேஸ்வரியை சந்தித்துவிட்டு திரும்பியவன் அறைக்குள் நுழையவும், புத்தகத்திலிருந்து குறிப்பு எழுதிக் கொண்டிருந்த ராதாவின் கைபேசி சிணுங்கவும் சரியாக இருக்க,
அதனை காதுக்கு கொடுத்தவள், கிருஷ்ணாவின் முகத்தைப் பார்க்காமல் தலைகுனிந்தபடி
" இதோ வந்துடறேன் ..."
என கூறிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.
சிறிது நேரம் கழித்தும், வராததால்,
எங்க போனா ... என்றெண்ணியபடி தன் அறையை விட்டு வெளியே வந்து மேலிருந்த படியே கீழ் தளத்தின் கூடத்தில் தேட, அவள் அங்கு இல்லாததால், அப்படியே பால்கனிக்கு சென்று வெளியே பார்த்தானுக்கு அவள்
வீட்டின் முன்புற தோட்டத்தின் இரும்பு கேட்டை ஒட்டியபடி இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த விஷாலுடன் பேசிக்கொண்டிருக்க, அதை கண்டு கணக்கு வழக்கு இல்லாமல் அவன் கோபம் தலைக்கேறி அவனை உக்கிரமாக்கியது.
அவள் சற்று நேரம் விஷாலிடம் சிரித்து அளவளாவி விட்டு, அவனிடமிருந்து வெள்ளை நிற சிறு கவரை பெற்றுக் கொண்டு வருவதை கீழ்தளத்திலிருந்து மற்றொரு ஜோடி கண்கள் குரோதத்துடன் பார்த்துக் கொண்டிருக்க,
அவள் கார் போர்டிகோவை அடையும் முன்பே சித்தார்த் அவளை வழி மறித்து ஏதோ கேட்க, அதற்கு அவள் கோபத்துடன் பதில் கூற, மறுபடியும் அவன் தன் கைபேசியை காட்டி ஏதோ சொல்ல, என உரையாடல்களையும் தாண்டி ஒரு விதமான தர்க்கம் அவர்களுக்கிடையே நிகழ்வதை கிருஷ்ணாவால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
முன்பே ஒருமுறை சித்தார்த் இவளை அழைக்கும் போது முகத்தில் அடித்தாற்போல் கார் கதவினை மூடி விட்டு சென்றது, தற்போது இருவருக்கும் இடையே நடைபெற்றும் தர்க்கம் இவற்றையெல்லாம் வைத்துப்பார்த்தால் சமீபகாலமாகவே ஏதோ ஒரு பிரச்சனை இருவருக்கிடையே இருந்து வந்திருக்கிறது என்பதை அவன் அனுமானித்துக் கொண்டிருக்கும் போது,
சித்தார்த் ராதாவிடம் விடாமல் ஏதோ கூறிக் கொண்டே வர, ஒரு கட்டத்தில் அவள் அவன் கன்னத்தில் பளாரென்று ஓங்கி அறைய
அதனை சற்றும் எதிர்பார்க்காத கிருஷ்ணா துணுக்குற, அதே நேரத்தில் கீழ்தளத்தில் இதனை பதுங்கி பார்த்துக்கொண்டிருந்த பர்வதத்திற்கு வன்மம் தலைக்கேறியது.
உடனே அவள் "கிருஷ்ணா' கிருஷ்ணா " என்றழைத்தவாறே மேல்தளத்திற்கு ஓடி வர, அங்கே அவன் நின்றுகொண்டிருப்பதை கண்டதும்
" உன் பொண்டாட்டி செஞ்ச காரியத்தை பார்த்தியா கிருஷ்ணா....இந்த வீட்டுல அவளை தட்டி கேட்க ஆளே இல்லையா...."என பலத்த பீடிகை போட்டு அவனை கீழ் தளத்திற்கு அழைத்துச் வந்தாள்.
அவனைப் பார்த்ததும் சித்தார்த்தும் ராதாவும் அமைதியாக நிற்க, வேலைக்காரர்கள் மத்தியில் எதுவும் பேசவேண்டாம் என்றெண்ணியவன் , பர்வதத்தின் அறைக்கு வருமாறு இருவரையும் பார்த்து சைகை செய்தவாறே அறைக்குள் நுழைய, அனைவரும் அவனை பின் தொடர்ந்தனர்.
கிருஷ்ணாவிற்கு சித்தார்த்தின் பிரச்சனையை காட்டிலும், விஷாலை பற்றிய எண்ணமே மனத்துக்குள் குடைந்து கொண்டிருந்தது.
அறைக்குள் நுழைந்த முதல் ஓரிரு வினாடிகள் அனைவரும் அமைதி காக்க, முதலில் மௌனத்தைக் கலைத்தது சித்தார்த் தான்.
" அண்ணா, ராதா செஞ்ச காரியத்தை பார்த்தீங்களா... ஆபீஸ்ல இவ கூட வேலை செய்ற விஷாலோட, நம்ம வீட்டு வாசல்ல கொஞ்சி பேசிக்கிட்டு இருக்கா ...அது மட்டும் இல்ல அவன் இவளுக்கு கத்தையா பணம் கொடுத்ததை நான் பார்த்தேன்...
அவன் ஏன் உனக்கு பணம் கொடுக்கிறான்னு கேட்டதுக்கு ,
அது உனக்கு தேவையில்லாத விஷயம், உனக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லனு சொல்றா...
அதுக்கு நான் நீ என் அண்ணனுக்கு துரோகம் செய்யறியோன்னு தோணுது... இப்பவே இதை நான் அண்ணன் கிட்ட சொல்லப் போறேன்னு சொன்னதுக்கு என்னை அடிச்சிட்டாண்ணே ..." என்றான் நீலிக் கண்ணீர் வடிக்காத குறையாக.
ஏற்கனவே விஷாலை பற்றிய எண்ணத்தால் வெந்துகொண்டிருந்தவனுக்கு , எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் இந்த நிகழ்வும் இணைந்துகொள்ள, வேட்டை புலியின் உக்கிரத்துடன் ராதாவை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்து அவள் கண்களை உற்றுநோக்க, அதே நேரத்தில் அவள் மனதில்,
நான் விஷாலோட பேசினது தப்புன்னா ...நீங்க ரேஷ்மிய அணைச்சுகிட்டு ஊர் சுத்தினது, அவளோட உங்க பெட்ரூம்ல ஒரு மணி நேரம் தனியா இருந்ததெல்லாம் தப்பில்லையா ... என்னைக் கேள்வி கேட்க உங்களுக்கு தகுதியே இல்லை ...
என்றெண்ணியவள் , அதனை முகத்தில் பிரதிபலித்த படி ஒருவித நிமிர்வுடன் அவனை நேருக்கு நேராக பார்க்க
தப்பு பண்ணிட்டு முறைச்சா பார்க்கற... என கண்களால் சுட்டெரிப்பது போல் கோபத்தை கக்கியவன்,
" அவன் எதுக்காக இங்க வந்தான் ..." என்றான் அவளை நெருங்கி.
" அத நான் உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்ல .." என்றாள் காட்டமாக.
" நீ சொல்லித்தான் ஆகணும் ..." என்றான் பார்வையில் பிடிவாதத்தை தேக்கி .
" நான் எதுக்கு உங்களுக்கு பதில் சொல்லணும்... நீங்க யாரு எனக்கு ..."
என்றவளின் எடுத்தெறிந்த பேச்சு, அவனை மிருகத்தின் மறு உருவமாக்க,
அதற்கு மேல் தாளமாட்டாமல் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்ததோடு, அவளுடைய மென்மையான கழுத்தை பற்றி தலையை சுவரோடு சுவராக ஒட்டி, கழுத்தில் இருந்த தாலியை மற்றொரு கையினால் பற்றி அவளுடைய முகத்துக்கு நேராக தூக்கி பிடித்து ,
" இப்ப, உனக்கு நான் யாருன்னு தெரிஞ்சிருக்கும்... பதில் சொல்லு .." என அவன் கர்ஜித்து கொண்டிருப்பதை பார்த்து பர்வதம், தியாகராஜன் சித்தார்த் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியதோடு, அதனை கண்களால் பரிமாறிக் கொண்டனர்.
ராதாவின் முகம் ரத்தச் சிவப்பில் சிவந்திருக்க, கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் வடிந்து கொண்டிருந்த போதிலும்,பதில் கூறாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தவளை பார்த்த நொடியில் கிருஷ்ணாவின் மனம் கலங்க,அதனை உணர்ந்த பர்வதம்,பிரச்சனையை முடிக்க விடாமல் பதற்றத்தை அதிகரிக்க எண்ணி,
" ராதா விஷாலோட போவதும், வர்றதும், சிரிக்கிறதும் அவளோட தனிப்பட்ட சமாச்சாரம் .... ஆனா எதுக்காக என் மகனை அடிக்கணும்..." என்று வேண்டுமென்றே பிரச்சனையை முதலில் இருந்து நினைவு கூற,
ராதா , சித்தார்த்துக்கு இடையே, நடக்கும் பனிப்போரை பற்றி, ஏற்கனவே அவன் அறிந்திருந்தாலும் அதற்கான காரணம் தெரியாததால் அவள் பதிலுக்காக காத்திருந்தவன் அவள் முகம் நோக்கி
" சொல்லு ராதா பிரச்சனை என்ன .." என்றான் சற்று கோபம் தணிந்து.
" சித்தார்த், என்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தான் அதனாலதான் அடிச்சேன்.." என்றாள் தலைகுனிந்து கீழ் உதட்டை கடித்தபடி .
இதனைக் கேட்டதும் கிருஷ்ணாவுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், மேற்கொண்டு அவளது விளக்கத்திற்காக பொறுமை காக்க,
" அண்ணா, ராதா பொய் சொல்றா... நான் அழகா சிகப்பா இருக்கேன் ...
என்னை அவளுக்கு பிடிச்சிருக்கு .. என்னோட வாழ ஆசைப்படறான்னு
அவளே எனக்கு எஸ்எம்எஸ் அனுப்பி இருக்கா பாரு ...”
என்று தன் கைபேசியில் இருந்த குறுஞ்செய்தியை அவன் கிருஷ்ணாவிற்கு காட்ட,
குறுஞ்செய்தி மற்றும் சித்தார்த்தின் வார்த்தையில் துளிக்கூட நம்பிக்கை இல்லாமல்
"என்னது இது" என்றவனிடம் கைபேசியை வாங்கிப் பார்த்தவளுக்கு அதிர்ச்சியைவிட ஆச்சரியமே அதிகமாக இருக்க,
" இந்த எஸ்எம்எஸ்ஸ நான் அனுப்பவே இல்ல ... இது எப்படி என் மொபைல்ல இருந்து போச்சுன்னு எனக்கே தெரியாது... ஆனா சித்தார்த் அனுப்பின எஸ்எம்எஸ் எல்லாம் என்கிட்ட இருக்கு ..." என்றவள் தன் கைப்பேசியை உயிர்ப்பித்து ,அனைத்து குறுஞ்செய்திகளையும் காட்ட, முதல் இரண்டு குறுஞ்செய்திகளை தவிர மீதி அனைத்தும் படிக்க படாமலே நீல நிறத்தில் இருந்தது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத சித்தார்த்,
"அடி பாதகி, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, ஏன் என் எஸ்எம்எஸ்க்கு பதில் சொல்லலன்னு கேட்டதுக்கு, மொத்தத்தையும் டெலிட் பண்ணிட்டேன்னு சொன்னாளே...", என திருடனுக்கு தேள் கொட்டியது போல் சிக்கிக் கொண்டதை எண்ணி பயத்தில் உறைந்து கொண்டிருந்தவன், தன்
முதல் குறுஞ்செய்தியில் ராதாவை விரும்புவதாகவும், இரண்டாவது செய்தியில் அவளது அழகையும் வர்ணித்தும் எழுதி இருந்தான்.
ராதா படித்திருந்தது இவ்விரு குறுஞ்செய்திகளை மட்டுமே.
மற்ற குறுஞ்செய்திகளை ஒவ்வொன்றாக கிருஷ்ணா திறந்து படிக்க, அதில் சித்தார்த், தன்னுடைய செல்வ வளத்தைப் பற்றியும், ராதா பெயரளவில் மட்டும் மனைவியாக வாழ்ந்த கொண்டிருப்பதற்குக் காரணம் கிருஷ்ணாவின் ஆண்மையற்ற கையாலாகாத தனம் என்றும் , அவளை மறுமணம் செய்துக்கொள்ளும் தன் எண்ணத்தை பற்றியும் அடுத்தடுத்த குறுஞ்செய்தியில் அனுப்பியிருந்தான்.
மேலும் கிருஷ்ணா ராதா அனுப்பியதாக, சித்தார்த் காண்பித்த குறுஞ்செய்தியின் தேதியையும், சித்தார்த் ராதாவிற்கு அனுப்பியிருந்த குறுஞ்செய்திகளின் தேதிகளையும் ஒப்பிட்டு சரி பார்க்கையில், ராஜேஸ்வரியை மருத்துவமனையில் சேர்த்த தினத்திலிருந்து தான் இப்பிரச்சனை துவங்கியுள்ளது என தெரியவந்தது.
அன்றிலிருந்துதான் அவள் அறைக்கு உள் தாழ்ப்பாள் போட ஆரம்பித்தாள் என்பதனையும் பொருத்தி பார்த்தவனின் விழிகளில் அக்னி ஆறு ஓட, அதனைக் கண்டதும்
சித்தார்த்தை விட ஒரு படி மேலாக, உதறல் எடுத்தது பர்வதம் மற்றும் தியாகராஜனுக்கு தான்.
அவனின் நரசிம்ம அவதாரத்தை அனைவரும் ஒருங்கே பார்க்கப் போகும் பயத்தில் இருக்க, வெகு அமைதியாக
ராதாவின் கையில் அவளது கைபேசியை திணித்தவன்,
சித்தார்த்தின் கைபேசியை ஓங்கி தரையில் வீசியடித்து சுக்குநூறாக உடைத்ததோடு அவன் மேல்சட்டையை கொத்தாக பற்றி,பூமியிலிருந்து ஓர் அடிக்கு மேலாக அவனை தூக்கி கீழே வீசினான்.
பர்வதம், தியாகராஜன் தடுத்தும்,கோபம் தணியாமல் சித்தார்த்தை அவன் நையப்புடைக்க, ஒரு கட்டத்தில் சித்தார்த் இறந்துவிடுவானோ, என்று அஞ்சியபடி பர்வதம் அவன் காலில் விழ எத்தனிக்கும் போது தான் சித்தார்த்தை விட்டொழித்தான்.
இந்திய பாதுகாப்பு படை வீரனின் நெஞ்சுரம் மற்றும் உடல் உறுதியை அன்று தான் முழுவதுமாக அறிந்துக் கொண்டான் சித்தார்த்.
இதனையடுத்து ராதா அறைக்கதவைத் திறந்து கொண்டு, கண்களை துடைத்தபடி கிருஷ்ணாவின் அறை நோக்கி நடைபோட
பர்வதம் மனதிற்குள்,
இவ்ளோ நேரம் சூரசம்ஹாரம் நடக்கும் போது கதவைத் திறக்காம இருந்துட்டு, இப்ப முடிஞ்சதும் கதவை திறந்துக்கிட்டு போறா பாரு ...
என புலம்பிக் கொண்டிருந்தவர், தியாகராஜன் உடன் குற்றுயிர் கொலை உயிராக தரையில் கிடந்த தங்கள் மகன் சித்தார்த்தை தூக்கி நிறுத்த எத்தனிக்கும் போது
அவர்கள் இருவரையும் சீற்றத்துடன் பார்த்து,
" நாளைக்கு காலைல இவனை நான் இங்க பார்க்கக்கூடாது .... அப்படி மீறி இருந்தான் இவன் உடம்புல உயிர் இருக்காது... நீங்க வேணும்னா இருக்கலாம் .." எனக் கூறி ,அறை கதவை அடித்துச் சாத்திவிட்டு ஒரு கையால் மீசையை நீவி விட்டபடி,
மறுகையால் வேட்டியின் நுனியை
காலை மடக்கி தூக்கி பிடித்துக்கொண்டு
வெளியேறியவனை மகி
"தம்பி ஒரு நிமிஷம்" என்றழைத்தாள்.
அவன் அமைதியாக மகியின் அருகில் சென்று நிற்க,
" தம்பி, நீங்க ரெண்டு பேரும் வாழற வாழ்க்கை இந்த வீட்ல எல்லாருக்குமே தெரியும் ப்பா..." என்றவள் கூறிய மாத்திரத்தில், அவள் எதனை குறிப்பிடுகிறாள் என்பதனை உணர்ந்தவன்,
" அம்மாவுக்கு தெரியுமாக்கா ..." என கேட்க, இவனிடத்தில் தெரியும் என்று கூறினால் அதுவே அவனை ராதாவின் விஷயத்தில் வேறு முடிவை எடுக்கத் தூண்டும் என்றெண்ணியவள்,
" இல்ல தம்பி, அம்மாதான் படுத்த படுக்கையா இருக்காங்களே அவங்களுக்கு எப்படி தெரியும் ..
நான் சொல்ல வந்த விஷயமே வேற ...
குடும்ப வாழ்க்கைல, பொண்டாட்டிய தள்ளி நிறுத்தி வச்சா, பார்க்கிறவங்களுக்கு அவங்க அவங்க வயசுக்கு ஏத்தா மாதிரியான சிந்தனைகள் வர தான் செய்யும்... நான் உன் அளவுக்கு படிக்காதவ...ஆனா என் அனுபவத்துல சொல்றேன் ராதா அற்புதமான பொண்ணு, உன் மனசுல இருக்கிற பல பிரச்சனைகள் தீரணும்னா, நீ அவளோட உன் வாழ்க்கையை தொடங்கி சந்தோஷமா குடும்பம் நடத்து...அப்புறம் ஒருத்தர ஒருத்தர் இயல்பாவே புரிஞ்சுக்கலாம்..."
என உடன்பிறவா சகோதரியாக மகி வழங்கிய அறிவுரையை மனதில் ஏற்றிக்கொண்டு, அவன் மனதில் எழும், பல கேள்விகளுக்கு விடை தெரியா நிலையில் அதனை அறிந்து கொள்ள தன் அறையை நோக்கி நடந்தான்.
கண்ணனைத் தேடி