- Joined
- Jul 21, 2025
- Messages
- 544
- Thread Author
- #1
அத்தியாயம் 13
ஒரு முறை சூடு பட்டதிலிருந்து ராதா, மகி, கிருஷ்ணா இவர்களில் ஒருவராவது வீட்டில் இருந்தால் மட்டுமே கீழ் தளத்திற்கு சென்று வந்தாள்.
கிருஷ்ணா முழு நேரம் மருத்துவமனையில் இருந்தாலும், அவ்வப்போது உடை மாற்ற, தேநீர் அருந்த, இரவு உணவு உண்ண என காரணங்களை ஏற்படுத்திக் கொண்டு வீட்டிற்கு வந்து அவளை பார்த்துவிட்டு தான் சென்றான் .
அவன் வரவு அவளுக்கு பாதுகாப்பு கொடுத்தாலும், உள் தாழ்ப்பாள் போட்டுக் கொள்வதை மட்டும் அவள் நிறுத்தவே இல்லை .
அவன் வரும் போது கதவை திறப்பாள், அவன் கிளம்பியதும் உள் தாழ்ப்பாள் போட்டு விடுவாள்.
இதற்கான காரணத்தை அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை என்றாலும்,அவளுடைய பாதுகாப்புக்காக செய்வதில் பிழை ஏதும் இல்லை என்றே கருதினான்.
ராஜேஸ்வரிக்கு காலை சுமார் பத்து மணி அளவில் நடக்கவிருக்கும் இருதய அறுவை சிகிச்சைக்கு மகி, முருகன், வேலு ,சண்முகம் குடும்பத்தினர், பர்வதம் குடும்பத்தினர் மற்றும் ராதாவுடன் கிருஷ்ணாவும் மருத்துவமனையில் குழுமியிருக்க, நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் பேசிக்கொண்டிருந்த ராஜேஸ்வரி,
தன் மகன் மற்றும் மருமகளிடம்
தனியாக பேச விரும்புவதாக கூற,
அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் ராதா , கிருஷ்ணாவை தவிர மற்ற அனைவரும் அறையை விட்டு வெளியேறினர்.
அவர் கிருஷ்ணாவின் கைகளைப் பற்றிக்கொண்டு,
" எனக்கு இந்த உலகத்துல உன்னை விட்டா வேற யாரும் இல்ல கிருஷ்ணா….அதே போல தான் இவளுக்கும் உன்னை விட்டா யாரும் இல்ல.. நினைவுல வச்சுக்கோ ...நான் பண்ணி வச்ச கல்யாணங்கிறதுக்காக இவகிட்ட பாராமுகமா இருந்திடாத...
எனக்கு சத்தியம் பண்ணி கொடு, எந்த காலத்துலயும் இவளை விட்டு பிரிய மாட்டேன்னு..."
என்றவரின் உணர்வுபூர்வமான பேச்சு, ஒருவித படபடப்பை இருவர் உள்ளத்திலும் விதைக்க,
இவளே , அவளோட அப்பா ஆபரேஷன்காக நீங்க பணம் கொடுத்ததால, உங்க பேச்சை மீற முடியாம,வேற வழி இல்லாம என்னை கல்யாணம் பண்ணிகிட்டு இருக்கா... பிடிக்காத கல்யாணங்கிறதால தான் நான் டிவோர்ஸ் கேட்டதும் உடனே சரின்னு சொல்லிட்டா ... நடந்த கல்யாணத்துல இவளுக்கு விருப்பம் இல்லனு தெரிஞ்சும், எப்படி இப்படி ஒரு சத்தியத்தை என்னால உங்களுக்கு பண்ணி கொடுக்க முடியும் மா ....என கிருஷ்ணா சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில்,
சுவாதியை மறக்க முடியாம கஷ்டப்படறா ரா.... இல்ல ரேஷ்மியை கல்யாணம் பண்ணனுங்கிற எண்ணத்துல இருக்கிறதால சத்தியம் செய்ய முடியாம தவிக்கிறாரா...
அன்னிக்கு ரேஷ்மிகிட்ட சொன்ன மாதிரி என்னை இவரோட மனைவியா நினைச்சிருந்தா, இந்நேரம் எதையும் யோசிக்காம சத்தியம் செய்து இருக்கணுமே ... இவர் மனசுல என்ன தான் இருக்கு... ஒண்ணுமே புரியலையே.... என ராதாவும் தன் மனப்போக்கில் சிந்தித்து கொண்டிருக்க,
" சத்தியம் பண்ணு கிருஷ்ணா... ஏன் தயங்கிற ..." என்றவரின் கரங்களில் வேறு வழி இல்லாமல், ராதாவை பார்த்துக்கொண்டே தன் கரங்களை அழுத்தி அவன் 'சத்தியம்' என்றதும்,
"ராதா, உனக்கு தெரியும் கிருஷ்ணாவுக்கு கூட பொறந்தவங்க யாரும் இல்லன்னு... எனக்கு அப்புறம் அவன் தனிமரமா நிற்க கூடாதுன்னு தான் இந்த கல்யாணத்தையே செஞ்சு வச்சேன் ...நீ அவனோட என்னிக்கும் இணைபிரியாம இருக்கணும் சரியா .." என்றவரின் கைகளைப் பற்றிக்கொண்டு
" நீங்க நூறு வயசு வரைக்கும் நிறைஞ்ச ஆரோக்கியத்தோட, நிம்மதியா வாழத்தான் போறீங்க ... கவலைப்படாதீங்க அத்தை.. நான் பார்த்துக்கிறேன்….." என பொதுவாக ஆறுதல் கூறி நிலைமையை சமாளித்தாள்.
ராஜேஸ்வரிக்கு இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தநிலையில் , அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட, அன்று முழுவதும் மருத்துவமனையிலேயே கிருஷ்ணாவுடன் தங்கியிருந்து அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள்.
ஓரிரு நாட்களுக்குப் பிறகு ராஜேஸ்வரி நன்கு தேறிய நிலையில் ராதாவை அழைத்து
" ராதா, ஏற்கனவே நீ இல்லாம ஆபீஸ்ல வேலை பாதில நிக்குது .. இப்ப இரண்டு புது ப்ராஜெக்ட்ஸ் வேற கிடைச்சிருக்குது ... நானும் இல்லாம, நீயும் இல்லாம இனிமே ஹெலனால தனியா சமாளிக்க முடியாது.. அதனால நாளையிலிருந்து நீ ஆபீசுக்கு போயி என்னோட ஒரு சில வேலையும் நீயே செய்து முடிச்சிடு ...கிருஷ்ணா என்னை பார்த்துகட்டும் ..." என முடித்தார்.
அவர் கூறியதை விட அலுவலகத்தில் இரண்டு மடங்கு வேலை பளு அவளுக்காக காத்துக் கொண்டிருந்தது.
தினமும் காலை எட்டு மணிக்கே அலுவலகம் சென்றாலும் ,இரவு 10 மணிக்கு முன் வீடு திரும்ப முடியாதபடி வேலை பளு கழுத்தை நெரிக்க, மிகுந்த களைப்புடன் வீடு வருபவள் மகி கொடுப்பதை உண்டு விட்டு நன்கு உறங்கி போனாள்.
பெரும்பாலான நாட்களில் கிருஷ்ணா வீடு திரும்பும் போது அவள் நல்ல உறக்கத்தில் இருப்பாள். அதே போல் அவள் அலுவலகம் கிளம்பும் முன்பாக அவன் ராஜேஸ்வரியை காண மருத்துவமனைக்கு சென்று விடுவான் .
சனி , ஞாயிற்றுக்கிழமைகளில் கூட அலுவலகம் சென்று ,விடுபட்ட அலுவலக வேலைகளை முடிக்கலானாள்.
இவ்வாறாகவே அவர்களின் நித்திய சந்திப்புக்கள் இருக்க ஆரம்பித்தன.
இந்நிலையில் ஒருநாள் ராஜேஸ்வரி கிருஷ்ணாவை அழைத்து, வருமானவரி சம்பந்தப்பட்ட வேலையை வேண்டுமென்றே சொல்லி
" நீ இதை ராதா கிட்ட வீட்ல சொன்னாலும் சரி, இல்ல ஆபீஸ்க்கு போய் சொன்னாலும் சரி .... அவளே வேலைய முடிச்சிடு வா...." என்றதும் அவனுக்குமே அவளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்ததால்
" நானே ஆபிஸ்க்கு போய் ராதாவை பார்த்து இந்த வேலையை முடிச்சிடறேம்மா ..." என்றவன் வேகவேகமாக அவர்களது நிறுவனத்திற்கு புறப்பட்டான் .
பொதுவாக ஒருவர் எவ்வித அரசுப் பணியில் இருந்தாலும், அவர்களுக்கு வேறு வகையான வருமானங்கள் அல்லது கணக்கில் வராத சொத்துக்கள் என அவர்கள் பெயரில் ஏதும் இருக்கக் கூடாது என்பது அரசாங்க உத்தரவு.
இதன்படியே தொழில் துறை பங்குகள் , அலுவலக பங்குகள் என எதுவும் கிருஷ்ணாவின் பெயரில் இல்லை.
அனைத்து சொத்துக்களுக்கும் ஏகபோக உரிமையாளராக ராஜேஸ்வரி மட்டுமே.
ஆதலால் நிறுவனத்திலும் கிருஷ்ணாவிற்கு ராஜேஸ்வரியின் மகன் என்ற உறவை தவிர வேறு எந்த உரிமையும் இல்லை.
மதிய உணவு இடைவேளையின் போது அவளை சந்திக்கலாம் என்றெண்ணி அவன் வர, அவளோ எப்பொழுதும் போல் விஷால் குழுவுடன் உணவருந்த கம்பெனி கேன்டீனுக்கு சென்றிருந்தாள்.
கிருஷ்ணாவை கண்டதும் ஹெலன் நட்புடன் வரவேற்று, ராஜேஸ்வரியின் அறையில் அவன் அமர்வதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு,
" ராதா இப்பதான் லஞ்சுக்கு போனா... இன்னும் ஹாஃப் அன் ஹவர்ல வந்துடுவா... " என தகவல் கூற,
உடனே அவன் அங்கிருந்த ராஜேஸ்வரியின் கணினியை ,அவர் சொன்ன கடவுச்சொல்லை (password)பயன்படுத்தி திறந்து அலுவலக பணியாளர்களுக்கான சம்பள கோப்பில் ராதாவின் சம்பள விவரத்தை பார்க்க ஆரம்பித்தான்.
அவள் கம்பெனியிலிருந்து வட்டி இல்லாமல் தனி கடன் பெற்று ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை திருப்பி செலுத்தி வருவதை தெள்ளத் தெளிவாக காட்டியது கணினி.
ஏனோ அவற்றை அறிந்த பின்னர் அவன் மனதில் சிறு நிம்மதி உதயமாவதை அவனால் செவ்வனே உணரமுடிந்தது.
அவன் நினைத்தது போல் அவள் தன்மான சிங்கம் தான். இனாமாக பணம் எதையும் பெறாமல், கடனாகப் பெற்று திருப்பி செலுத்தி வருவது , பணத்துக்காக அவனை மணக்கவில்லை என்பதை தெளிவாக பறைசாற்ற, உடனே மனதில் ஏற்பட்ட உற்சாகத்தினால் அவளை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் தலைதூக்க, நேற்றிரவு அவள் உறங்கும்போது பார்த்தது தான்.
இன்று எந்த நிறத்தில் புடவை அணிந்திருப்பாளோ என்றெண்ணி அவளைக் காணத் துடித்த மனதுடன் பால்கனியிலிருந்து கேண்டீனை பார்த்தவனுக்கு ஆச்சரியத்தை விட அதிர்ச்சியே மிஞ்சியது.
ராஜேஸ்வரியின் அறையின் பால்கனியிலிருந்து பார்த்தால் கீழ்தளத்தில் உள்ள அலுவலக கேண்டீன் முழுவதும் தெரியும்.
அங்கிருந்த உணவு மேஜைகளில், இரண்டாவது வரிசையிலிருந்த பெரிய உணவு மேஜையின் வலது புறத்தில் ராதா , ஷாகிரா அமர்ந்திருக்க, இடது புறத்தில் விஷாலுடன் அந்த டீமை சேர்ந்த வேறு இரு ஆண்கள் அமர்ந்திருக்க, ஆகாய நீலத்தில் சிறுகரும் பூக்கள் போட்ட புடவையில் பளிச்சென்று மிளிர்ந்தாள் அவனவள் .
விஷால் ஏதோ கூற, அதற்கு அவள் தன்னை மறந்து குலுங்கி சிரிக்க, அங்கிருந்த அனைவரின் கண்களும் அவள் கன்னக்குழியையே பார்ப்பது போன்ற பிரம்மை கிருஷ்ணாவுக்கு ஏற்பட்டது.
அவனிடம் அளந்து பேசுபவள், இங்கு கன்னம் குழி விழ நகைப்பதை பார்த்து எரிச்சலடைந்தான் .
புது தாலி , அவள் நிறத்தை ஒத்த மெல்லிய தங்க சங்கிலி கழுத்தில் மின்ன, நெற்றி வகிட்டில் சிந்தூர்,காதில் சிறு ஜிமிக்கி சகிதமாய் ஜொலித்தவள்,
இம்முறை ஏதோ கூற அனைவரும் அதற்கு சிரிக்க, இப்பொழுது அவன் பார்வை அந்த குழுவிலேயே கம்பீரமாக இருந்த விஷாலை ஆழ்ந்து நோக்க,
ஒரு வேளை இவனை நேசிக்கின்றாளோ... ஆதலால்தான் என்னுடனான விவாகரத்திற்கு சம்மதம் தெரிவித்தாளோ? என்ற சந்தேகம் முதன்முறையாய் முளைத்து அவன் மூளையை குழப்பியது.
உண்டு முடித்ததும் விஷால் பேசிக்கொண்டே மத்தியில் நடக்க, அவனுடைய இருபுறத்திலும் ஷாகிரா ,ராதா நடந்து வருவதைப் பார்த்தவனுக்கு முதன்முறையாக சுவாதிக்கும் ராதாவுக்கும் இடையேயான தன் மன உணர்வை உணர ஆரம்பித்தான்.
சுவாதி சக வீரர்களுடன் பேசிக்கொண்டு வரும் போது தோன்றாத கோபமும் எரிச்சலும், ராதா விஷாலுடன் பேசிக்கொண்டு வரும் போது ஏற்படுவதை எண்ணி தவித்தான்.
ராதா தனக்கே சொந்தமானவள் என்று அவனுடைய ஆழ்மனம் நம்புவதை உணர ஆரம்பித்தவனுக்கு உடனே அவளை தன்னுடையவளக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் எழ,
திகைத்தவன்
இதற்கு மேல் இங்கிருந்தால் அலுவலகம் என்றும் பாராமல் அவளிடம் தவறாக நடந்து கொண்டுவிடுவோம் என்றஞ்சி
ஹெலனிடம் தனக்கு முக்கியமான வேலை இருப்பதால் வீட்டிலேயே ராதாவை சந்திப்பதாக கூறிவிட்டு படி வழியாக கீழிறங்கி காரை எடுத்துக்கொண்டு கம்பெனியை விட்டு வெளியேறினான்.
அவன் கிளம்பிப் போய் சரியாக ஐந்து நிமிடத்திற்கெல்லாம் அவள் மின்தூக்கி வழியாக தளத்தை அடைந்து, மேஜைக்கு வர, கிருஷ்ணா அலுவலகம் வந்ததையும் , இவ்வளவு நேரம் அவளுக்காக காத்திருந்துவிட்டு, ஐந்து நிமிடத்திற்கு முன்பு வெளியே வேலை இருப்பதாகக் கூறி சென்றதையும் ஹெலன் தெரிவிக்க, செய்தியை கேட்டதும் உடம்பில் லேசாக மின்சாரம் ஊறுவது போன்ற உணர்வு ஏற்பட, மகிழ்ச்சியில் திளைத்து போனாள் ராதா.
கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக இருவரும் ஒரே அறையில் இருந்தும் பார்த்து பேசிக்கொள்ள முடியாத சூழ்நிலையால்,அவளும் அவனுக்காக ஏங்கித்தான் போயிருந்தாள்.
அவன் வீட்டிற்கு செல்லவில்லை என்பதனை தொலைபேசியின் மூலம் மகியை தொடர்பு கொண்டு உறுதி செய்தவள் , மருத்துவமனைக்கு செல்ல தயாரானாள்.
அங்கு சென்றால் ராஜேஸ்வரியை பார்ப்பதோடு தன்னவனையும் பார்க்கலாம், என அவள் மனம் துள்ளி குதிக்க ஆட்டோவை பிடித்து பயணமானவள் ,ஆட்டோ ஓட்டுனருக்கு பணம் கொடுத்து விட்டு திரும்பும் போது ,மருத்துவமனையின் வாயிலில் ரேஷ்மி கிருஷ்ணாவின் இடது கரத்தோடு தன் கரத்தை பிணைத்துகொண்டு , அவனுடைய தோளில் சாய்ந்தபடி நடந்து செல்வதை பார்த்தவளுக்கு நடக்க முடியாமல் கால்கள் நிலத்தில் வேரூன்றி போக, இந்த ஊரில் ஆணும் பெண்ணும் கைகோர்த்துக் திரிவது சகஜம் தான் என்றாலும்,
அன்று ரேஷ்மி இரண்டாவது திருமணத்தை பற்றி கேட்டபோது , என் மனைவியிடம் கலந்தாலோசித்துவிட்டு கூறுகிறேன் என்றாரே... இப்பொழுது அவளை அல்லவா அணைத்துக்கொண்டு மருத்துவமனையினுள் நுழைகிறார்..
கடவுளே இவர் மனதில் யார் தான் இருக்கிறார்கள், இறந்து போன சுவாதியா, இப்போது சுற்றி திரியும் ரேஷ்மியா, அல்லது நானா ...
என குமுறியபடி இதற்கு மேல் மருத்துவமனைக்குள் நுழைந்தால் , தன் மனமே தன்னை காட்டிக் கொடுத்து விடும் என்று அஞ்சினாள்.
என்றுமே அவன் அவளுடன் வாழ விரும்புவதாக நேரடியாக கூறியதில்லை, அவன் அவளிடம் கேட்டதெல்லாம் விவாகரத்து மட்டும்தான்.
இந்நிலையில் எந்த உரிமையின் பேரில் அவள் அவனிடமோ அல்லது ரேஷ்மியிடமோ கோபப்பட முடியும்.
எனவே வீட்டிற்கு சென்று விடுவது உத்தமம் என்றெண்ணி வீட்டிற்கு வந்தவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லாமல் உறக்கம் வராமல் தவிக்க
தான் அவனுக்காக ஏங்கும் ஏக்கம் நாளுக்கு நாள் பெருகுவதும் , ஒரு நாள் அது கோபமாக வெளிப்பட்டு விடுமோ எனவும் பயந்தே போனாள் .
அன்று முழுவதும் மகி வீட்டிலேயே இருந்ததால் அவள் தன் அறைக்கு உள் தாழ்ப்பாள் போடாமலிருக்க, அப்போது யாரோ கதவை திறந்துகொண்டு, அறையினுள் பிரவேசிப்பதை உணர்ந்தவள்,அந்தத் திண்மையான காலடிக்கு சொந்தகாரன் கிருஷ்ணா என்றறிந்து இந்தத் தருணத்தில், பேசினால் , எங்கு தான் மனம் வெடித்து அழுது விடுவோமோ என்ற எண்ணத்திலேயே தவிர்க்க முடிவு செய்ய, அவனுக்கு அவளிடம் பேசியே ஆக வேண்டும் என்ற எண்ணம் மேலெழுந்திருந்தது என்றாலும் அவள் நல்ல உறக்கத்தில் இருக்கிறாள் என்றெண்ணி நாகரிகம் கருதி அதை கைவிட்டு, உறக்கம் பிடிபடாமல் புரண்டு புரண்டு படுத்து கடைசியில் ஒருவாறு உறங்கிப் போனான்.
கிருஷ்ணா ஜாக்கிங் முடித்துவிட்டு மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பதை அறியாமல்,அவன் வழக்கம் போல் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டான் என்றெண்ணியவளுக்கு காலையில் எழுந்ததிலிருந்து விரக்தியான சூழ்நிலை நிலவ , ஏனோ அன்று அலுவலகம் செல்ல மனமில்லை என்றாலும் வேலை பளு காரணமாக காலை உணவு அருந்திவிட்டு அலுவலகம் செல்ல தயாரானாள்.
அலுவலக பரபரப்பில் இருப்பவளிடம் தற்போது எதுவும் பேச வேண்டாம் மாலையில் பேசிக் கொள்ளலாம் என மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்தபடி முடிவெடுத்தவனுக்கு , கீழே முருகன் காரை கிளப்பும் சத்தம் கேட்க அவளை பார்ப்பதற்காக மேலிருந்து எட்டிப் பார்த்த சமயத்தில் கீழ்தளத்தில்
"ராதா நில்லு, போகாத" என கத்தியவாறே சித்தார்த், அவள் பின்னே ஓடி வருவதை கண்டான்.
அவள் ஒரு நிமிடம் கூட நில்லாமல் சித்தார்த்தின் முகத்தில் அடித்தாற் போல் காரில் அமர்ந்து கதவினை வேகமாக மூடியதோடு காரை உடனே கிளப்புமாறு முருகனை பணித்ததையும் பார்த்தவனுக்கு
என்ன பிரச்சனையா இருக்கும்... ஏன் சித்தார்த் மேல இவ்ளோ கோவப்படறா.... என தனக்குள் கேட்டவாறே அன்றைய அலுவலில் மூழ்கிப் போனான்.
அலுவலகம் வந்தவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலுவலக பணியிலும், மூழ்க முடியாமல் தத்தளிக்க,எப்படியோ சிரமப்பட்டு அன்றைய அலுவல்களை முடிக்கும் பொழுது இரவு மணி எட்டையை தொட்டிருந்தது.
உடனே மகியை தொலைபேசியில் தொடர்புகொண்டு,
" நான் ஆபீஸ் வேலையை ஓரளவுக்கு முடிச்சுட்டேன் அக்கா ....இன்னிக்கு அத்தைக்கு நான் டின்னர் எடுத்துக்கிட்டு ஹாஸ்பிடல் போகட்டுமா..."
" வேணாம் ராதா .. இந்த வாரம் முழுசும் உனக்கு ஆபீஸ்ல வேலை அதிகமா இருந்தது...இன்னைக்கு நீ ரெஸ்ட் எடுத்துக்கோ... நாளைக்கு சனிக்கிழமை
ஆபீஸ் லீவுதானே ...
நாளைக்கு போலாம் ....
இப்ப நான் போய் அம்மாக்கு சாப்பாடு கொடுத்துட்டு வந்துடறேன்.. மேஜை மேல டின்னர் எடுத்து வச்சிருக்கேன், மறக்காம சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடு ..."
என கண்டிப்புடன் கூடிய பாசத்தில் மகி கூற 'சரி' என்றாள் .
ஓன்பது மணி அளவில் வீடு திரும்பியவளுக்கு வீட்டு வாயிலில் இருந்த புதிய காரை எங்கோ பார்த்தது போல் தோன்ற, அருகில் சென்று பார்த்ததில் அது ரேஷ்மியின் கார் என தெரிய வந்தது.
பொதுவாக கிருஷ்ணாவிற்கு இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்ல தான் பிடிக்கும்.
யாரையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் தான் காரை எடுப்பான். அவனுடைய இரு சக்கர வாகனமும் அந்த காரின் அருகிலேயே நிற்க, மகி எப்போதும் பயன்படுத்தும், வெள்ளை நிற கார் ஷெட்டில் இல்லாததால், மகியும் முருகனும் வீட்டில் இல்லை என அறிந்து கொண்டு உள்ளே நுழைந்தவளை சித்தார்த்துடன் நின்றுக்கொண்டிருந்த பர்வதம் திருட்டு முழியுடன் வரவேற்றார்.
" ஏம்மா ராதா, எப்பவும் பத்து மணிக்கு மேல தான் வீட்டுக்கு வருவ....இன்னிக்கு என்ன இவ்ளோ சீக்கிரம் ..." என மாடியில் இருக்கும் கிருஷ்ணாவின் அறையை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே கேட்டவரை பார்த்து ராதாவிற்கு பற்றிக்கொண்டு வர, அவள் தன் தோள் பையை எடுத்துக்கொண்டு கிருஷ்ணாவின் அறைக்குச் செல்ல படியில் கால் வைக்கும் பொழுது,
" ரேஷ்மி, கிருஷ்ணா ரூமுக்கு போய் ஒரு மணி நேரம் ஆச்சு...நீ போய் அவங்க ரெண்டு பேரையும் நைட்டு டின்னருக்கு கூட்டிகிட்டு வா ... இன்டர்காம்ல கூப்பிட்டு பார்த்துட்டேன் அவங்க போனையே எடுக்கல ..."
என ஒன்றுமே தெரியாதது போல் பர்வதம் பற்ற வைக்க,
உடனே ராதாவிற்கு சற்று நேரம் யோசிக்க வேண்டும் போலிருந்தது.
படியில் ஏறாமல் சமையலறைக்குச் சென்று ஏதோ தேட,
"என்ன வேணும் ராதா" என்றார் பர்வதம் நமட்டுச் சிரிப்புடன்.
" பால் சாப்பிடணும் ..." என்றாள் அவர் முகத்தை பாராமல்.
" நான் ஹெல்ப் பண்ணட்டுமா .."
" வேணாம் நானே பாத்துக்கிறேன்... நீங்க போய் ரெஸ்ட் எடுங்க ..."
என வெடுக்கென்று கூறி,பர்வதத்தை அந்த இடத்திலிருந்து விரட்டாத குறையாக அனுப்பி வைத்தவளுக்கு , உலைக்களம் போல் கொதித்துக் கொண்டிருந்த அவள் மனம் அனைத்தையும் பிரித்துப்போட்டு பேச ஆரம்பித்தது.
ராதா... நீதான் கிருஷ்ணாவை மானசீகமாக விரும்பினாய், விரும்புகிறாய்,அவனுடைய மனைவியாகவே வாழ்ந்து கொண்டும் இருக்கிறாய்...
ஆனால் கிருஷ்ணா திருமணமான அன்றே தன்னுடைய முடிவை தெளிவாகக் கூறி விட்டான். மேலும் அவன் சில நேரங்களில் உன்னிடம் நன்றாக பேசினாலும் பல நேரங்களில், அவன் மனதில் ஏதோ ஒரு தடுமாற்றம் இருப்பதை உன்னால் நன்றாக அறிய முடிகிறது.
அவன் உன்னிடம் எந்தவிதமான திருமண பந்தத்தையும் ஏற்படுத்திக்கொண்டு ரேஷ்மியுடன் சுற்றவில்லை.
உன்னை மருத்துவரிடம் அழைத்துச் சென்றது கூட மனிதநேயமாக இருக்கலாம் அதற்கு காதலென்ற பெயர் சூட்ட தேவையில்லை. அவன் உனக்கு எவ்விதத்திலும் துரோகம் இழைக்கவில்லை, ஆதலால் உன்னுடைய உணர்வுகளை உனக்குள்ளேயே புதைத்து கொண்டு, நீ விரும்பிய கிருஷ்ணாவை அவன் மனம் போல் வாழவிடு ... எனக் கூற,
அவள் வெகு சிரமப்பட்டு தன் மன உணர்வை அடக்கிக்கொண்டு, பால் கோப்பையை, உணவு மேஜைக்கு கொண்டு சென்றால் சித்தார்த்தும் பர்வதமும் சூழ்ந்து கொள்வார்கள் என்றெண்ணி சமையலறையிலேயே பருகிவிட்டு கூடத்திற்கு செல்ல, அப்பொழுது ரேஷ்மி அவளது உதட்டை துடைத்தபடி, வெட்கப்பட்டு தலைகுனிந்தவாறே படியிறங்கி வருவதைப் பார்த்ததும்,அவ்வளவு நேரமாக அவள் பிடித்துவைத்திருந்த பொறுமை காற்றில் பறக்கதான் செய்தது.
கீழே இறங்கியவள் ராதாவை பாராதது போல், பர்வதம் மற்றும் சித்தார்த்திடம் தலைகுனிந்தபடி
"பை ஆன்ட்டி "என சென்று விட, ராதாவிற்கு வீடு வந்து பத்து நிமிடங்களே ஆன நிலையில், பல யுகங்கள் போல் தோன்றின.
இப்பொழுது கிருஷ்ணாவை எப்படி எதிர்நோக்க போகிறோம் என்றெண்ணியபடி தண்ணீரை அதிகமாக பருகி, தன் மனதை சமன் செய்து கொண்டு எந்தவிதத்திலும் தன் மன உணர்வுகளை பிரதிபலித்து விட கூடாது என தனக்குள்ளே உரு போட்டபடி அறையினுள் பிரவேசித்தாள்.
என்றுமில்லா புன்சிரிப்போடு வரவேற்றவனை ஏற இறங்க பார்த்தவளுக்கு, அவன் குளித்து முடித்து பளிச்சென்று இரவு உடையில் இருப்பதும், அவனுடைய படுக்கை கசங்கி இருப்பதோடு மட்டுமல்லாமல் அவன் மேல் சட்டையின் காலர் பகுதியில் தாமரை பூ நிறத்தில் உதட்டுச்சாய கறை படிந்திருப்பதும் ஒருங்கே கண்ணில் பட,
கிருஷ்ணா அவளுடைய பார்வையை வேறுமாதிரியாக புரிந்து கொண்டான்.
மிகுந்த களைப்புடன் சோர்ந்து காணப்படுகிறாள் என்றெண்ணியவன், ஏற்கனவே ஒரு முறை ரேஷ்மியின் செய்கையை பார்த்து கண்ணீர் வடித்ததை எண்ணி,இவளிடம் ரேஷ்மி வந்து போனதை கூற வேண்டாம் என நினைத்து,
" ராதா இப்பதான் ஆபீஸ்ல இருந்து வரியா.... "
அதற்கு "ஆம்"என்பது போல அவள் தலையசைத்ததும் அவனுள் நிம்மதி பரவிய, அடுத்த நொடி அவள் விஷாலுடன் பேசி சிரித்ததை அவன் மனம் நினைவு கூற, உடனே அவன் முகத்தில் கடுமை பரவியது.
இவ சிரிக்கும் போது செடி நடற அளவுக்கு கன்னத்துல குழி விழுங்குங்கிறது கூட , விஷாலோட சிரிக்கும் போது தான் தெரிஞ்சுக்க முடிஞ்சது ...
எல்லாரோடையும் பேசுவா என்கிட்ட மட்டும் பேசாமடந்தையா இருப்பா, இல்ல ஒன்னு ரெண்டு வார்த்தைக்கு மேல பேச மாட்டா... என மனதினுள் குமுறியபடி அவள் முகத்தை பார்த்தவனுக்கு, சோகமாகவும் சோர்வாகவும் அவள் காட்சியளிப்பதைக் கண்டு பாவமாகவும் தோன்றியது.
ரேஷ்மியின் வரவினால் கிருஷ்ணா சற்று தடுமாறித்தான் போயிருந்தான்.
அவனுக்கும் சிலவற்றை யோசிக்க வேண்டி இருந்ததால், அதற்குமேல் பேச்சைத் தொடர விரும்பாமல்
"குட்நைட்" எனக் கூறிவிட்டு தன் படுக்கையை நோக்கி சென்றவனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே தன் திவானுக்கு சென்று படுத்துக் கொண்டாள் ராதா.
நாளை நடைபெறப் போகும் விபரீதம் அறியாமல் இருவரும் ஒருவரையொருவர் பற்றிய சந்தேகத்துடன் உறங்கிப் போயினர்.
கண்ணனைத் தேடி