- Joined
- Jul 21, 2025
- Messages
- 544
- Thread Author
- #1
அத்தியாயம் 12
அதிகாலை வேளையில் யாரோ அனத்துவது போல் முனகல் சத்தம் கேட்க, ஆழ்ந்த உறக்கத்திலிருந்து கண்களை திறக்க முடியாமல் கண்விழித்த கிருஷ்ணா,
என்ன சத்தம், எங்க இருந்து வருது ...
என தனக்குள்ளே பேசியபடி, தன் படுக்கையை விட்டு இறங்கி, பக்கவாட்டில் இருந்த மர திரைக்குப் பின்னால் எட்டி பார்க்க,
ராதா தன் வயிற்றில் கையை வைத்துக் கொண்டு புரண்டு புரண்டு படுத்து முனகிக்கொண்டிருந்தாள்.
அவளை அப்படி கண்டதும் பதறியபடி அருகே சென்று,
" ஹேய் ராதா... என்ன ஆச்சு ..."
என்றவனின் குரலில் தன்னுணர்வு பெற்றவள், வெகு அருகில் அவனை கண்டதும் , கையிலிருந்த போர்வையை வாரி சுருட்டி இறுக்கி அணைத்தபடி எழுந்தமர,
" சொல்லு ராதா ...என்ன ஆச்சு .." என்றான் மீண்டும் கவலையோடு.
" ஸ்டமக் பெயின் .." என்றாள் மெல்லிய குரலில்.
" நேத்து நைட் சாப்ட்டது டைஜஷன் ஆகாம ஸ்டமக் பெயின் வந்துடுச்சா ..." என்றவனின் கேள்விக்கு பதிலளிக்காமல் தலைகுனிந்தபடி மூன்று விரல்களை அவள் உயர்த்திக் காட்ட, முதலில் புரியாமல் அவள் முகத்தை உற்று பார்த்தவன், அவள் முகம் நாணத்தால் சிவப்பதை கண்டு, ஓரளவு யூகித்தவனாய்
" ஓ....பெயின் அதிகமா இருக்கா ..இப்ப மணி அஞ்சு ஆகுது ..ஒன்பது மணிக்கு தான் ஹாஸ்பிடல் திறப்பாங்க ...முதல்ல பெயின் கில்லர் போட்டுக்கிட்டு தூங்கி எழுந்திரு..வா அந்த கட்டில்ல வந்து படுத்துக்கோ உன்னால இங்க சரியா தூங்க முடியாது ..."
என்றவனிடம் எப்படி மறுப்பது என தெரியாமல், அவன் கொடுத்த வலி நிவாரணியை விழுங்கிவிட்டு, தன்னுடைய தலையணை, போர்வையை எடுத்துக்கொண்டு அவனுடைய கட்டிலின் ஒரு ஓரத்தில் சென்று ஒருக்களித்து படுத்துக்கொண்டவளின் செய்கை ஒருபுறம் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தாலும் ,அவளது வெளிறிய முகமும் தளர்ந்த நடையும் மனதுருகவே செய்தன.
அவளுக்கு விழிப்பு வந்து கடிகாரத்தை பார்க்க, அது மணி ஒன்பதை காட்ட,
இவ்ளோ நேரமாவா தூங்கி இருக்கேன் ...
என்றபடி அவள் படுக்கையை விட்டு எழ முயல, அப்போது குளியலறை கதவை திறந்து கொண்டு, இடுப்பில் வெறும் துண்டுடன் வெளியே வந்தவனை கண்டதும் அவள் விழிகளை தாழ்த்திக் கொள்ள, அவையெல்லாம் அவனுக்கு விந்தையாக இருந்தது.
அவன் படித்ததெல்லாம் ஆங்கிலோ-இந்திய பள்ளியில்தான். அங்கு ஆண் பெண் பேதம் கிடையாது.மேலும் இந்தியை இரண்டாவது மொழியாகவும் மராத்தியை உள்ளூர் மொழியாகவும் பயின்றதனால்,தமிழ் மொழி, தமிழ் பெண்கள், கலாச்சாரம், பண்பாடு பற்றி ஏதும் தெரியாது.
ராஜேஸ்வரி மற்றும் ராம் குடும்பத்தினருடன் பழகியதால் தமிழை நன்றாக புரிந்து கொண்டு பேசுவான். ஆனால் எழுதப்படிக்கத் தெரியாது. வீட்டில் ராஜேஸ்வரி, மகி ஆகியோர் பயன்படுத்தும் தமிழ் வார்த்தைகளை சரளமாக பயன்படுத்தி பேசினாலும்,புதிதான தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் திணறுவான்.
அவன் பார்த்த குட்டை பாவாடை பெண்கள், உரசிப் பேசும் பெண்கள் பட்டியலில் ராதாவிற்கு நிச்சயம் இடமில்லை.
சுவாதியும் ஆண் பெண் பேதமின்றி மிக சகஜமாக பழகக் கூடியவள் என்பதால் ராதா அவனுக்கு மிகப் புதுமையாகவே தெரிந்தாள்.
" ராதா, உன்னோட டிபன் இங்க டேபிள் மேல இருக்கு, நீ குளிச்சிட்டு வந்து
சாப்பிட்டதுக்கு அப்புறம் ஹாஸ்பிட்டலுக்கு போலாம் ...
ரெண்டு நாள் கழிச்சு அம்மாவுக்கு ஆபரேஷன், நடக்கப் போறதால,
இன்னைக்கு மதியம் 2 மணிக்கு அவங்கள ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி ஆகணும் ...அதனால இப்ப நாம கிளம்பினா சரியா இருக்கும் ..."
என கூறிவிட்டு அவளது பதிலை எதிர்பார்க்காமல்,தன்னுடைய உடையை அலமாரியில் அவன் தேட ஆரம்பிக்க ராதா குளியல் அறைக்குள் புகுந்தாள்.
இருவரும் அந்தப் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவமனையில் முதல் ஆளாக, தங்களது வருகையை பதிவு செய்துவிட்டு காத்திருக்க, சிறிது நேரத்திற்கெல்லாம், செவிலியர் ஒருவர் நோயாளியின் பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண்,மருத்துவரை பார்ப்பதற்கான காரணம் என அனைத்தையும் கேட்டு அறிந்து கொண்டு செல்ல, பிறகு மருத்துவரிடமிருந்து அழைப்பு வந்ததும் இருவரும் மருத்துவரை சந்தித்தனர்.
மருத்துவர் பிரச்சனை என்ன, என்பது போல் ராதாவின் முகத்தை பார்க்க, அவள் ஆங்கிலத்தில் தன்னுடைய மாதவிடாய் வயிற்று வலி மற்றும் அதிகமான உதிரப் போக்கை பற்றிக் கூற,
" மேரேஜ் ஆகி எவ்ளோ நாள் ஆகுதும்மா ..." என்ற மருத்துவரிடம்
" த்ரீ டேஸ் ..." என்றாள்.
பொதுவாக உங்கள்
மாதவிடாய் சுழற்சி எவ்வாறு இருக்கும் ... கடந்த மாதம் எப்பொழுது முடிந்தது ? போன்ற மருத்துவரின் வழக்கமான கேள்விக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி என்றும் கடந்த மாதத்தைக் காட்டிலும், இந்த மாதம் சீக்கிரமே வந்து விட்டது என்றும் அவள் தெரிவிக்க, அவர்கள் பேச்சில் குறுக்கிடாமல் பொறுமையாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.
சில பெண்களுக்கு மாதவிடாய் திருமணமானவுடன் சீக்கிரமே வந்து விடுவதென்பது இயல்பான ஒன்று தான் எனக் கூறிவிட்டு கிருஷ்ணாவை சற்று நேரம் வெளியே இருக்குமாறு பணித்துவிட்டு, ராதாவிடம் சில அந்தரங்கமான கேள்விகளை முன் வைத்தார்.
அவள் அளித்த பதில்கள் அவருக்கு ஆச்சரியம் ஊட்ட, சற்று நேரத்திற்கு பிறகு கிருஷ்ணாவை அழைத்து,
மன உளைச்சல் காரணமாக மாதவிடாய் இம்முறை சீக்கிரமாக வந்திருக்கிறது என்றும், சில பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி பிரச்சனை திருமணத்திற்கு பின்பான உறவின் மூலம் பெருமளவு குறையும் என்றும் இலைமறை காயாக அறிவுரை கூறி மருந்தினை எழுதி கொடுத்தார்.
பணம் செலுத்தும் இடத்தில், அந்த பெண் காசாளர் கூறிய தொகையை, தன் கைப்பையிலிருந்து எடுத்து
" சார், நான் கொடுக்கிறேன் ..." என கூறியபடி அவள் கிருஷ்ணாவை முந்த, அதை கேட்டதும் அந்தப் பெண் காசாளர், அவர்கள் இருவரையும் ஒரு மாதிரி பார்த்து வைக்க, அவள் முந்துவதற்கு முன் பணத்தை கொடுத்து ரசீதையும் பெற்றுக் கொண்டு, மிகுந்த கோபத்துடன் அவளை திரும்பிக்கூட பார்க்காமல் நடக்க ஆரம்பித்தவன்,
ஓரிடத்தில் நின்று திரும்பிப் பார்த்து, மருந்து சீட்டு மற்றும் சில நூறு ரூபாய் தாள்களை அவள் கையில் திணித்து,
" டாக்டர் எழுதிக் கொடுத்த மெடிசின்ஸ், உனக்கு தேவையானது எல்லாத்தையும் வாங்கிகிட்டு , கார் பார்கிங்கு வந்து சேரு ..."
என கூறிவிட்டு அவள் பதிலுக்காக காத்திருக்காமல் அந்த இடத்தை விட்டு வேகமாக வெளியேறினான்.
இப்படி தன்மானச் சிங்கமா இருக்கிறவ எப்படி என் அம்மாகிட்ட பணத்தைப் வாங்கினா...? இதனைப் பத்தி தெரிஞ்சிக்கணும் என மனதில் குறித்துக் கொண்டு ,காரில் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவன்
வண்டியை வீட்டுக்கு செலுத்த,
காலையில் காட்டிய கனிவு தற்பொழுது காணாமல் போனதை, எண்ணி மனம் வருந்தி போனாள் ராதா.
இவர்கள் இருவரும் ஜோடியாக வந்து இறங்குவதை, பார்த்து சித்தார்த் மற்றும் பர்வதத்தின் கண்கள் காந்த, பர்வதம் முந்திக்கொண்டு
" இரண்டு பேரும் எங்க போயிட்டு வர்றீங்க ..."
எனக் கேட்க, அதற்கு ராதா பதிலளிக்கும் முன் கிருஷ்ணா
"வெளில சின்ன வேலை", என்றபடி தன் அறையை நோக்கி நடந்தவனைப்
பின்தொடர்ந்தவள் குளியலறைக்கு சென்று வரும் வரை காத்திருந்துவிட்டு
" சார்ன்னு கூப்பிடறதை முதல்ல நிறுத்தறியா..." என்றான் அடக்கமாட்டாத கோபத்துடன்.
" நீங்க பெரியவங்க அதனால ..."
" என்ன.... உன்னை விட அறுவது வயசு பெரியவனா இருப்பேனா ..."
" இல்ல.... உங்கள எப்படி கூப்பிடறதுன்னு எனக்கு தெரியல ..." என்றாள் தயங்கியபடி .
" என் அம்மா, மகி அக்கா கூப்பிடற மாதிரி கூப்பிட வேண்டியது தானே ..." என்றான் கோபத்துடன்.
" 'தம்பி' ன்னா" என்றாள் அவன் கண்களை தயக்கத்துடன் பார்த்தபடி.
அதனைக் கேட்டு ஆஹா ஹா என பல்வரிசை தெரிய அழகாக , தன்னை மறந்து சிரித்தவன்,
" அது சரி உனக்கு நான் தம்பியா ..." என்றபடி தொடர்ந்து சிரித்துவிட்டு
"உன் அம்மா உன் அப்பாவை எப்படி கூப்பிடுவாங்க ..."
என கண்களில் குறும்பு மின்ன, அவளை நோக்கி இரண்டடி எடுத்து வைத்து மிக நெருக்கமாக நின்றவாறு அவன் கேட்க மிரட்சியுடன் கலந்த நாணத்தால்,
" 'ராதாப்பா' இங்க வாங்கன்னு கூப்பிடுவாங்க ..." என்றாள் மென்மையாக.
"அப்படி நீ குழந்தை பேரை சொல்லி என்னை கூப்பிடறதுக்கு குறைஞ்சது உனக்கு ஒரு வருஷமாவது ஆகும் ..." என ஒற்றைக் கண் சிமிட்டியவன்
" சரி கல்யாணமான புதுசுல எப்படி கூப்பிட்டாங்களாம் ..."
" அத்தான்னு நினைக்கிறேன் ..." என்றாள் தன் கீழுதட்டை கடித்தபடி.
" அது நல்லா இருக்கே... நீயும் என்னை அப்படி கூப்பிடலாமே..."
என அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே ஒருகளித்த கதவை யாரோ திறப்பது போன்ற சத்தம் கேட்டு, இருவரும் அங்கே பார்க்க, பர்வதம் வன்மத்துடன், கோணலான சிரிப்பில்,
" உன் மாமியார இன்னிக்கு மதியம் ரெண்டு மணிக்கு ஹாஸ்பிடல்ல சேர்க்க போறாங்க .... ஆனா நீ காலையில இருந்து அவளைப் பார்க்க கீழ வரவே இல்லையே.." என தன்னுடைய நாடகத்தை செவ்வனே அவர் அரங்கேற்ற
" அவ வருவா நீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க சித்தி ..." என பதவிசாக பதில் அளித்து பர்வதத்தை வெளியேற்றியவன்,
" நீ கீழ வர வேண்டிய அவசியம் இல்ல நான் அம்மாகிட்ட சொல்லிக்கிறேன்... நீ நல்லா தூங்கி ரெஸ்ட் எடு... டாக்டர் கொடுத்த மெடிசன்ஸ்ஸ டைம்ல எடுத்துக்கோ ..."
எனக் கூறிவிட்டு அவளையே ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தவனை, அவளும் பார்க்க,ஏதோ கூற வந்தவன், தன் பேச்சை மறைத்து, "டேக் ரெஸ்ட் "எனக் கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.
கிருஷ்ணா சொல்ல வந்ததை சொல்லியிருந்தால், எதிர்காலத்தில் நிகழவிருக்கும் பெரும் பிரச்சனையை தடுத்திருக்கலாம்.
அங்குதான் விதி தன்னுடைய விசித்திர விளையாட்டை விளையாட தொடங்கியது .
கிருஷ்ணா மகியை அழைத்து ,
" ராதாவுக்கு உடம்பு சரியில்ல அவளுக்கு ஏதாவது வேணும்னா உங்கிட்ட இன்டர்காம் மூலமா பேசுவா .. மத்தபடி அவ ரெஸ்ட் எடுக்கட்டும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க அக்கா..."
எனக் கூறிவிட்டு ராமுடன் ராஜேஸ்வரியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு பயணமானான்.
ராதா விழிக்கும் பொழுது நேரம் பிற்பகல் இரண்டை தொட்டிருந்தது.
அவளுக்கு பசி வயிற்றைக் கிள்ள, மகியை உள் தொலைபேசி வழியாக தொடர்புகொள்ள முயன்றும், தொலைபேசி எடுக்கப்படாததால் வேறுவழியின்றி, அவளை சிரமப்படுத்த வேண்டாம் என்றெண்ணி கீழ்த்தளத்திற்கு வந்தவளை கண்டதும்,
அவளுக்காகவே காத்திருந்தது போல் சித்தார்த்தும் பர்வதமும் சூழ்ந்துக்கொள்ள, அவளுக்கு பர்வதத்தின் மேல் நல்ல அபிப்பிராயம் இல்லை என்றாலும் ராஜேஸ்வரியின் தங்கை என்ற ஒரே காரணத்திற்காக அவரிடம் பேச வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தாள்.
பர்வதம் ராதாவை பார்த்து,
"உடம்பு சரி இல்லையா "
ராதா "ம்ம்" என்று பதிலளிக்க,
மேலும் விடாமல் "இப்ப பரவாயில்லையா "
"பரவாயில்ல" என்று அவர் முகத்தை பாராமல் ஒற்றை பதிலளித்தவள்
மகியை தேட, அதனை அறிந்து கொண்ட பர்வதம்
" மகியை தேடறியா... இப்பதான் முருகன் கூட மளிகை சாமான் வாங்க வெளிய போய் இருக்கா ... உனக்கு சாப்பிட ஏதாவது வேணுமா ..."
"நானே பார்த்துகிறேன்" என பர்வதத்திடம் கூறிவிட்டு தனக்கு தேவையானவற்றை தட்டில் போட்டு எடுத்துக்கொண்டு உணவு மேஜையில் வந்தமர்ந்தாள் .
அவள் அமர்ந்ததும் சித்தார்த்தும் அவள் அருகில் மிக நெருக்கமாக, நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர, அப்போது தான் முதன்முறையாக கீழே இறங்கி வந்ததை தவறு என உணர ஆரம்பித்தாள் .
அவள் அனுமதி பெறாமல், அவள் அருகில் உணவு மேஜையின் மேல் இருந்த அவளுடைய கைபேசியை எடுத்து ,தன்னுடைய கைப்பேசிக்கு ஒரு விடுபட்ட அழைப்பை கொடுத்து அதனை ராதாவின் பெயரில் சேமித்துக் கொண்டவன், மேலும் அவளிடம் தன்னுடைய எண்ணை அவளுடைய கைபேசியில் சேமித்து வைப்பதாக கூற , எல்லை மீறிய கோபத்துடன் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவளின் அமைதியை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டபடி மேலும் அவளிடம் நெருங்கி,
" ராதா, நான் வந்த அன்னிக்கே கேட்கணும்னு நினைச்சேன் ...நீ எலுமிச்சம்பழ நிறம்... கிருஷ்ணா மாநிறத்தை விட கம்மி .. எப்படி நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிட்ட..., நான் மட்டும் உன்னை பத்து நாளுக்கு முன்னாடி பார்த்து இருந்தேனா, உன்னை நானே கல்யாணம் பண்ணிக்கிட்டு இருந்திருப்பேன்.. இப்ப கூட ஒண்ணும் கெட்டுப் போகல ..." என்றவனின் பேச்சை அவசரமாக இடைவெட்டி
கிருஷ்ணா முன்னிலையில் அவரை 'அண்ணா' என்று விளிக்கும் சித்தார்த், அவர் இல்லாத போது பெயரிட்டு அழைப்பதோடு, அவளிடம் நடந்து கொள்ளும் முறையும் அவன் நரித்தனத்தை காட்ட,
"அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம், அது மட்டும் இல்ல நீங்க அவரை அவன் இவன்னு பேர சொல்லி கூப்பிடுறது, என்கிட்டயும் இந்த மாதிரி பேசறதெல்லாம் இதோட நிறுத்திக்கோங்க..."
என்றவள் வெடுக்கென தன் கைபேசியை அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டு கிருஷ்ணாவின் அறைக்குள் ஓட்டமும் நடையுமாக சென்றமர்ந்தாள்.
பர்வதம், சித்தார்த்தை தவிர வீட்டில் யாரும் இல்லை.
வேறு யாரும் வீட்டில் இல்லாத காரணத்தினால் சித்தார்த் கிருஷ்ணாவின் அறைக்குள் நுழையக் கூட தயங்க மாட்டான் என அவள் மனம் படபடக்க, உள் தாழ்ப்பாள் போடுவது தான் பாதுகாப்பு என்றெண்ணி, கதவை அடைத்து தாழிட்டவள் நன்கு உறங்கி எழுந்ததால், உறக்கம் வராமல் போக, எதை எதையோ அசைபோட்டு பார்க்க ஆரம்பித்தாள்.
நான் இங்க இருக்க போறது, மிஞ்சி போனா இன்னும் ஒரு மாச காலம் தான்... அதனால சித்தார்த்தோட நடவடிக்கையை பத்தி கிருஷ்ணாகிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்ல ...
எனக்குத்தான் அவரோட மனைவிங்கிற உறவு நிலைக்கபோறதில்ல... அவருக்காவது எல்லா உறவும் நிலைக்கட்டுமே...
கிருஷ்ணா அடிப்படைல ரொம்ப நல்லவர் , ஆனா அவருக்கு என்னை பிடிக்காததால இந்த கல்யாணத்துல துளிக்கூட இஷ்டமில்ல...
திருமண பந்தத்தை முறிச்சிக்கலாம்னு சொன்னவர் கிட்டயே போயி,
இன்னொருத்தன் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றான்னு சொன்னா அவரோட பதில் என்னவாயிருக்கும் ...
ஒரு வேளை உனக்குப் பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோங்கிற பதில கூட அவர் சொல்லலாம் ...
அப்படி ஒரு பதில அவர்கிட்ட கேட்கிறத விட நான் செத்தே போகலாம்....
என்னை டிவோர்ஸ் பண்ணனும்னு நினைக்கிறவர்க்கு என்னை பத்தின அக்கறை இருக்க வாய்ப்பே இல்ல....
நான் தான் அவரோட மனைவியா மானசீகமாக வாழ்ந்துகிட்டு இருக்கேன் ... அவர் மனசுல இன்னும் சுவாதி தான் இருக்கா... இந்த சூழ்நிலையில என்னை நான் தான் காப்பாத்திக்கணுமே ஒழிய அவர்கிட்ட போய் முறையிடறது சுத்த முட்டாள்தனம் ....
அது மட்டும் இல்ல, அவர் கூட இருந்த இந்த நாலு நாள்ல, கிட்டத்தட்ட மூணு தடவையாது 'சார்'ன்னு கூப்பிட்டிருப்பேன் ..
அப்ப எல்லாம் வராத கோவம், ஹாஸ்பிடல்ல அந்த சூழ்நிலைல, மத்தவங்க முன்னாடி
கூப்பிடும் போது தான் அவருக்கு வந்திருக்கு ...
மத்தவங்க முன்னாடி அப்படி கூப்பிடுறது தான் அவருக்கு பிடிக்கல போல இருக்கு ..
அதனால தான் வேற வழி இல்லாம, 'அத்தான்னு' கூப்பிட சொல்லி இருக்காரு… அவருக்கு உண்மையிலயே என்னைப் பிடிச்சிருந்து என்னோட வாழனும்னு ஆசைப்பட்டிருந்தா, டிவோர்ஸ் பத்தின அவரோட பேச்சுக்கு மறுப்பு தெரிவிச்சிருப்பாரே ... அதை செய்யல... செய்யவும் அவருக்கு விருப்பமில்ல..
அதனால அவர் இப்ப பேசின அனுசரனையான பேச்செல்லாம் முழுக்க முழுக்க சாதாரண, நட்பு ரீதியிலான பேச்சுன்னு எடுத்துக்கலாம் அவ்ளோ தான்...
வேற மாதிரியான எந்த எண்ணத்துக்கும் மனசுல இடம் தரக்கூடாது....
என தனக்குத்தானே அறிவுறுத்தி கொண்டவளின் மனம் அறியவில்லையா அல்லது அவளது மன முதிர்ச்சியின்மையா, இந்த இரண்டில் எதுவானாலும்,
தோழமையாக நினைப்பவன், அத்தான் என்று அவனை அழைக்கச் சொல்ல வேண்டிய அவசியமில்ல... வேறு வழியில் அவனை அழைக்கச் சொல்லி இருக்கலாம் ... அதோடு அழைப்பை பற்றி பேசிய போது அவன் காட்டிய இணக்கமெல்லாம் அவளுக்கு புரியாமல் போனது தான் விதியின் விளையாட்டு.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க, யாராக இருக்கும் என்று எண்ணியவாறே,
கடவுளே, சித்தார்த்தா இருக்கக் கூடாது... என நினைத்தபடி கதவைத் திறந்தால், கிருஷ்ணா நின்றுகொண்டிருந்தான்.
அவள் முகத்தை ஆராய்ச்சியுடன் பார்த்தவாறே உள்ளே நுழைத்தவன்,
" ஏன் கதவை லாக் பண்ணி இருக்க..." என்றவனின் கேள்விக்கு அவள்
அமைதி காக்க
" யாராவது வந்தாங்களா ..." என்றான் அவளை உற்று நோக்கியபடி.
" இல்ல... சும்மாதான் லாக் பண்ணினேன் ..."
என்றவளின் பதிலில் சமாதானம் அடையாவிட்டாலும், இதற்கு மேல் இதை பற்றி பேச வேண்டாம் என்று அமைதியானவன் அவளை நெருங்கி அவள் கண்களுக்குள் பார்த்துக்கொண்டே,
" இப்ப பெயின் எப்படி இருக்கு... குறைஞ்சிருக்கா..."
என்றவனின் கண்களில் தெரிந்த கரிசனம் அவளை நிலைகுலையச் செய்ய, அவன் மார்பில் சாய்ந்துக்கொள்ள துடித்த மனதை வெகு சிரமப்பட்டு அடக்கி,
அவன் காட்டும் அக்கறை என்றாவது ஒரு நாள், தன்னை தன்னிலை மறக்க செய்யும் என பயந்தபடி சுதாரித்துக் கொண்டு,
" இப்ப பரவாயில்ல .... மேம் எப்படி இருக்காங்க ..." என சரியான வார்த்தையை தேர்ந்தெடுத்து கேட்டாள்.
அத்தை எப்படி இருக்காங்கன்னு அவள் கேட்டால், அவர்களுடைய திருமணத்தை அவள் உறுதிப்படுத்த பார்க்கிறாள் என்றாகிவிடும் என்பதால் அப்படிக் கேட்க, அவனும் அவளுடைய கேள்வியை வேறுவிதமாகப் புரிந்துக் கொண்டான்.
அன்று பர்வதத்திடம் "அத்தை" என்று விளித்தவள்,இன்று தன்னிடம் " மேம்" என்று விளிக்கிறாள் என்பதை மனதில் குறித்துக் கொண்டு,
"நல்லா இருக்காங்க .... நாளன்னைக்கு நடக்கிற ஆபரேஷனுக்காக பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் , ஈசிஜின்னு எல்லா டெஸ்டும் பண்ணியிருக்காங்க... ரிசல்ட்டும் நார்மலா வந்திருக்கு..." என பதில் கூறியவாறே குளியலறைக்குள் நுழைந்தவன், முகம் கழுவிக்கொண்டு வெளியே வந்து
" சாய்(Chai) சாப்பிட்டியா ..." என கேட்க
"இல்லை" என்பது போல் அவள் தலையை அசைக்க,
" சரி, மகி அக்கா கிட்ட சொல்லி மேல அனுப்பறேன் ..."
" இல்ல நானும் உங்க கூடவே கீழ வந்து சாப்பிடறேனே.. ..."
என்றவளை வித்தியாசமாக பார்த்தான் கிருஷ்ணா.
தனக்கு இந்த வீட்டில் பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பு தர வேண்டிய கணவனோ பற்றற்று இருக்கிறான்.
அதே சமயத்தில் தன் பெண்மையை காப்பாற்றிக்கொள்ள அவரை விட்டால் வேறு வழியும் இல்லை.
அவருக்கு என்னை பிடிக்காது என்பது எனக்கு மட்டும் தானே தெரியும்.
மற்றவர்களுக்கு குறிப்பாக பர்வதம், சித்தார்த்துக்கு தெரியாதல்லவா... அவருடன் ஜோடியாக சென்றால் இயல்பான கணவன் மனைவி போல் அவர் எனக்கு பாதுகாப்பாக இருப்பதாக தோன்றும்... மீதம் இருக்கும் ஒரு மாதத்தை மானத்தோடு கழிக்க அது பயன்படும் என்றவள் எண்ணும் போதே
ஏனோ கண்கள் கரித்துக்கொண்டு வர,
அதை தன்னவனுக்கு காட்டாமல் தலைகுனிந்து மறைத்தவள்
அவனுடன் கீழே இறங்கி செல்ல , அதை பார்த்து மனம் கொதித்து போனான் சித்தார்த்.
"அண்ணா ,பெரியம்மா எப்படி இருக்காங்க" என எதார்த்த குரலில் கேட்டவனை பார்த்து,
"ச்சே" என உள்ளம் குமுறினாள் ராதா.
கிருஷ்ணா அவனுக்கு பதில் அளித்த படியே, எப்பொழுதும் அமரும் உணவு மேஜையின் பக்கவாட்டிலுள்ள நாற்காலியில் அமர, அவன் மடி மேல் உட்காராத குறையாக அவனை உரசியவாறு நாற்காலியை நெருக்கமாக இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள் ராதா.
ரூம்ல பக்கத்துல வந்தாலே பதறுவா... இப்ப என்ன இவ்ளோ நெருக்கமா உட்கார்றா... என்னவா இருக்கும்... என அவன் அவளை பார்க்க, அவளோ பர்வதத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சித்திக்காக இந்த நடிப்பா...சரி ஏன் சித்தியை பார்த்து இவ நடிக்கணும்.. ஒன்னுமே புரியலையே ... என்று நினைத்துக் கொண்டிருந்தவனை பர்வதம், சித்தார்த் இருவரும் பொறாமை தாண்டவமாட பார்த்துக் கொண்டே இருக்க, ராதாவின் அருகாமையில்
கிருஷ்ணா ஜிவ்வென்று வானில் சிறகடித்து கொண்டுதான் இருந்தான்.
உண்மையான அன்னியோன்ய தம்பதிகளாக இருந்தால், ராதா கிருஷ்ணாவின் கரத்தை பற்றி இருக்க வேண்டும், அதனை விடுத்து அவனை தொட்டும் தொடாமல், பட்டும் படாமல் உரசியவாறு அமர்ந்திருந்ததை ,சூது நிறைந்த சித்தார்த்தின் கழுகு கண்கள் கண்டுபிடித்தன.
அவர்களுக்கிடையே ஏதோ ஒரு கண்ணாடி திரை இருப்பதை அறிந்துகொண்டவன் அதனைப் பயன்படுத்தி இருவரையும் பிரிக்க வேண்டும் என்று திட்டம் தீட்ட ஆரம்பித்தான்.
கண்ணனைத் தேடி .....