- Joined
- Jul 21, 2025
- Messages
- 544
- Thread Author
- #1
அத்தியாயம் 11
அதிகாலையில் சித்தார்த்துக்கு விழிப்பு வந்ததும், நேற்று நடந்த பிரச்சனையின் சாராம்சத்தை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்று யோசித்துபடி குறுக்கும் மறுக்குமாக அவன் நடந்து கொண்டிருந்த வேளையில்,
குளித்து முடித்து ஆரஞ்சு நிறத்தில் சிறு கருப்பு நிற பூக்கள் போட்ட சுடிதார் மற்றும் கருப்பு நிற துப்பட்டா அணிந்து, படியிறங்கி வந்த ராதாவை கண்டதும்
அந்த அதிகாலை வேளையிலும் அவனுக்கு குப்பென்று வியர்த்துக் கொட்டியது.
எப்பொழுதுமே மகி அதிகாலையில் வீட்டு வாசலில் பெரிய கோலமிடுவது வழக்கம். ஆனால் அன்று வாசலில் கோலம் இல்லை.
"என்னவா இருக்கும் ஏன் மகியக்கா இன்னும் கோலம் போடல" என்று தனக்குள்ளேயே பேசியபடி, ராதா பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போட ஆரம்பிக்க,
அதுதான் தருணம் என, சித்தார்த் அவளிடம் பேச்சுக் கொடுப்பது போல் , அவளை கண்களால் மொய்த்துக் கொண்டிருக்க, ஏற்கனவே ரங்கோலி வரைந்து பழக்கம் இருந்ததால், அழகான ஒரு பெரிய மயிலை நிற பொடிகளால் வரைய ஆரம்பித்தாள்.
அப்போது ஜாகிங் சென்றிருந்த கிருஷ்ணா வீடு திரும்ப,
அவன் வந்த நாளிலிருந்து புடவையில் காட்சி அளித்தவள் அன்று முதன் முறையாக சுடிதாரில் இன்னும் சிறு பெண் போல் காட்சி அளிக்க, உடன் சித்தார்த்தை கண்டதும் அவன் கோபம் ராக்கெட் வேகத்தில் தலைக்கேறி
" என்ன ராதா, என்ன செஞ்சுகிட்டு இருக்க இங்க ..." என வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.
" கோலம் போட்டு கிட்டு இருக்கேன் ..." என்றவளின் எதார்த்த பதிலில் கடுப்பானவன்
" இது கோலம் போடற இடமா ..” எனக் கோபத்துடன் உறும, ஏன் இப்படிக் கேட்கிறான் என புரியாமல் விழித்தவள் மெல்லிய குரலில்
" ஆமா ..." என்றாள் யோசனையாக.
மேற்கொண்டு என்ன பேசுவது எனத் தெரியாமல் அவன் திணறிக்கொண்டிருக்கும் போது
" மேல போய் அண்ணாவோட துணியை மடிச்சு வை ராதா..." என நமுட்டுச்சிரிப்புடன் சித்தார்த் கூற, பொங்கி வந்த சிரிப்பை அடக்க சிரமப்பட்டுக்கொண்டு, தோட்டத்துக்கு விரைந்தாள் ராதா.
கோபத்தில் முட்டாள்தனமான கேள்வியை கேட்டு விட்டோமே என்றெண்ணியபடி
"உனக்கென்னடா இங்க வேலை...எப்ப சித்தி, சித்தப்பா வராங்க..." என கேள்விகளை கேட்டு, நிலைமையை திசை திருப்பியவன்,
அதற்கு சித்தார்த் மொழிந்த பதிலை காதில் வாங்காமல், இவளுக்கு தெரியாத வேலையே இல்லையோ ,என மனதிற்குள் ராதாவை மெச்சியபடியே படியில் ஏறி தன் அறைக்குச் சென்றான் .
சற்று நேரத்திற்கெல்லாம் காரில், முருகனுடன் பர்வதம்,அவளுடைய கணவன் தியாகராஜன் மற்றும் 3 பெட்டிகள் வந்திறங்கின.
மகி அவர்களை வரவேற்று ராஜேஸ்வரியின் அறைக்கு அழைத்துச் செல்ல, சித்தார்த்தும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.
ராஜேஸ்வரியும் பர்வதமும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டிருந்த போது, மகி ராதாவை அழைத்து வர, அவளை தன் மருமகள் என ராஜேஸ்வரி அறிமுகப்படுத்த,
ராதாவை கண்டதும் பர்வதம் , அவள் கணவன் தியாகராஜனின் முகம் போன போக்கை ராஜேஸ்வரியால் கூட பார்க்க முடியவில்லை.
பர்வதத்தின் கண்ணில் பொறாமை தலை விரித்து தாண்டவமாட , ராதா ஆசீர்வாதத்திற்காக பர்வதம் மற்றும் தியாகராஜனின் பாதம் பணிய, வேண்டாவெறுப்பாக
" நல்லா இரு"என ஈன ஸ்வரத்தில் வாழ்த்தினார் பர்வதம்.
அப்போது கிருஷ்ணா அதனை பார்த்தபடி ராஜேஸ்வரியின் அறைக்குள் நுழைய, அவனைக் கண்டதும் ஏற்பட்ட பொறாமை தீயால் அவனை மட்டம் தட்ட நினைத்து
பர்வதம், ராதாவை பார்த்து
" இத்தனை நாளா தனியா இருந்து கஷ்டப்பட்டா ராஜி....நீ வந்ததுக்கு அப்புறம் தான் அவ நிம்மதியா இருக்கிறதா அடிக்கடி போன்ல சொல்லுவா...அதுவும் நீ உன் அப்பாவோட ஆபரேஷனுக்காக ஊருக்குப் போனதும் ரொம்ப கஷ்டப்பட்டு போய்ட்டா..." என பெருமையாக கூறுவது போல் கூறியவர், பிறகு
" ஊர்ல யார் இருக்காங்க உங்க அப்பாவை பார்த்துக்க..." எனக் கேள்வி எழுப்ப
" என் தங்கை டாக்டருக்கு படிச்சுக்கிட்டு இருக்கா... அவ தான் அப்பாவை பார்த்துட்டு இருக்கா ..." என்றாள் ராதா வெள்ளந்தியாக.
" ஓ அப்படியா ... உன் ஃபேமிலி மிடில் கிளாஸ்...உன் தங்கை வேற இப்பதான் டாக்டருக்கு படிச்சுக்கிட்டு இருக்கா ... உன் அப்பாவோட ஹார்ட் ஆபரேஷனுக்கு நிறைய பணம் செலவாகி இருக்குமே எப்படி சமாளிச்ச...." என சுற்றிவளைத்து முக்கியமான மூக்கை உடைக்கும் கேள்விக்கு பர்வதம் வந்து நிற்க,
தான் செய்த உயிர் காக்கும் உதவியை சொந்த தங்கையிடம் கூட, பகிராமல் இருந்த ராஜேஸ்வரியை எண்ணி 'மேன்மக்கள் மேன்மக்களே' என நினைத்தவளுக்கு,
ராஜேஸ்வரி இரண்டு லட்ச ரூபாயை தனி கடனாக கொடுத்திருந்தாலும் அவற்றுக்கு வட்டி கிடையாது, மேலும் இக்கடனைப் பெற குறைந்தது ஒரு வருடமாவது, அந்நிறுவனத்தில் பணிபுரிந்திருக்க வேண்டுமென்ற விதிகளை எல்லாம் தளர்த்தி தன்னுடைய சொந்த ஜாமீனில் அக்கடனை அளித்திருந்தார் .
அவற்றையெல்லாம் மனதில் நிறுத்தி
" அத்தை தான் சரியான நேரத்துல ஹெல்ப் பண்ணாங்க ..."
என மொட்டையாக அவள் பதில் கூற, பர்வதத்திற்கு தேவையான பதில் கிடைத்து விட்டதால், "ம்ம்" என்ற பெருமூச்சுடன்,
" ராஜி அடிப்படைல ரொம்ப நல்லவ, உன் நிலைமை தெரிஞ்சு உனக்கு ஹெல்ப் பண்ணினதோட, கிருஷ்ணாவையும் உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கா...உனக்கு தெரியுமா கிருஷ்ணாவுக்கு எவ்ளோ பெரிய பணக்கார சம்பந்தம் எல்லாம் வந்ததுன்னு..." என ராதாவின் பொருளாதார நிலையை குத்தி காண்பித்ததோடு மட்டுமல்லாமல் கிருஷ்ணாவின் மனதையும் குழம்பிய குட்டை ஆக்கினார் பர்வதம்.
கிருஷ்ணாவிற்கு ராதாவின் பதிலைத் தவிர வேறு ஏதும் காதில் ஏறவில்லை. தான் யூகித்தது சரியாகிவிட்டதோ என எண்ணத் தொடங்கினான்.
அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தாலும் அவன் காதில் வேறு எந்த உரையாடல்களும் ஏறவில்லை. நான் நினைத்தது போல் என் தாய் கொடுத்த பணத்திற்காகத்தான் என்னை திருமணம் செய்து கொண்டிருக்கிறாள்.
ஆதலால் தான் நான் விவாகரத்து கோரியதும் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல்,விருப்பமில்லாத திருமணம் என்பதால் பொறுமையாக சம்மதம் தெரிவித்தாள் போலும் என எண்ண தொடங்கிய நிலையில், அப்போது ஏன் ரேஷ்மியின் செய்கையை பார்த்து நேற்று கண்ணீர் வடித்தாள் என அவனது மனம் கேள்வி கேட்டு மேலும் குழப்பியது.
ஆனால் ராதாவின் மனதில், வேறொரு புயல் அடித்துக் கொண்டிருந்தது.
பர்வதம் கூறியது அனைத்தும் உண்மையே என்றாலும் ஒரு பேச்சுக்காவது, கிருஷ்ணா மறுப்பு தெரிவித்திருக்கலாம் அல்லது பேச்சை திசை திருப்பியிருக்கலாம்.
ஆனால் எதுவுமே செய்யாமல் மௌனமாக நின்று அமைதி காத்தது,பர்வதம் கூறியது அனைத்தையும் ஆமோதிக்கிறான் என்றே பொருள்படுகிறது.
அவர் எங்கே நான் எங்கே, எத்தனை ஏணிகள் வைத்தாலும் அவருடைய பொருளாதார நிலையை என்னால் நெருங்க கூட முடியாது, அதனால்தான் என்னிடம் விவாகரத்து கோரினாரோ...?சுவாதியின் மரணத்திற்குப் பிறகு அவர் மனதளவில் திருமணத்திற்கு தயாராகி விட்டார் என்பதனை ரேஷ்மி உடனான திருமண பேச்சு காட்டுகிறது.
ரேஷ்மி போட்ட நிபந்தனைகள் தான் அவருக்கு பிடிக்கவில்லையே ஒழிய,அவளையும் அவளது பொருளாதார நிலையையும் அவருக்கு பிடித்துதான் இருக்கிறது.
ஆதலால்தான் நேற்று அவள் அவரை முத்தமிடும்போது கூட, வெகு இயல்பாக ஆமோதித்தார்..
மேலும் அவர் திருமணம் முடியும் வரையில் என்னை புகைப்படத்தில் கூட பார்த்ததில்லை , அன்று ராமண்ணாவிடம் கூறியது போல் பொருளாதார தர நிலையை எண்ணித்தான் இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லாமல் இருந்திருக்கிறார்….
ஆதலால் தான் விவாகரத்தும் கோரி இருக்கிறார் என இப்போது தெள்ளத் தெளிவாகிறது ..
ஆதலால் இனிமேல் வேறு எதையும் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல்
நான் விரும்பும் கிருஷ்ணாவின் மனம் நோகாமல் அவர் விரும்பியதை கொடுக்க வேண்டும் என ராதா முடிவு கட்டிய நேரத்தில்
ராஜேஸ்வரி, கிருஷ்ணா கூறியது போல் பர்வதத்தை திருமண வரவேற்புக்கு அழைக்காமல் இருந்திருக்கலாமோ என எண்ணத் தொடங்கியிருந்தார்.
பர்வதம் குடும்பத்திற்காக, கீழ்தளத்தில் ஒதுக்கப்பட்டிருந்த அறையில் சித்தார்த், அவன் தந்தை தியாகராஜன் முன்னிலையில் பெருமை பொங்க பர்வதத்தை பாராட்டிக்கொண்டிருந்தான்.
" அம்மா, வந்ததும் கொளுத்தி போட்டுட்டியே ....சூப்பர்மா நீ..."
" இது என்னடா பிரமாதம் ...ரெண்டு பேர் முகத்துலயும் புதுசா கல்யாணம் ஆன களையே இல்லையே...அதான் என்னால முடிஞ்சது ..."
என தோள் தட்டியவள்,
" ஏன்டா மகனே, இந்த ராதா பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லையா, இல்ல இந்த கிருஷ்ணாவுக்கு விருப்பம் இல்லையா.." என்ற பர்வதத்தின் கேள்வியில் யோசித்தபடி
" எனக்கு ஒண்ணுமே புரியல மா... குழப்பமா இருக்கு .... அந்த கிருஷ்ணா என்னை ராதா கூட பேசவே விட்றதில்ல... அவளை பொத்தி பொத்தி பாதுகாக்கிறான் ...அவளும் அவனைத் தவிர வேற யாரையும் பொருட்டாவே நினைக்கிறதில்ல ... அதே சமயத்துல அவங்க ரெண்டு பேர் கிட்டேயும் ஒரு வித விலகல் தெரியுது... அதான் இவங்களுக்குள்ள என்ன பிரச்சனைனு என்னால புரிஞ்சுக்கவே முடியல..." என்றான் மைந்தன்.
" என்னோட இவ்ளோ வருஷ திட்டமும் வீணா போயிடுமோன்னு பயமா இருக்கு டா....
அந்தச் சுவாதி பொண்ணு இறந்ததும், இனிமே இந்த கிருஷ்ணா கல்யாணமே பண்ணிக்க மாட்டான்....
வாரிசு இல்லாத சொத்தை ஆட்டைய போட்டுடலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன்....
ஆனா விதி வேறு மாதிரி இல்ல இருக்கு ... உனக்கு பொண்ணு தேடி தேடி நான் களைச்சு போயிட்டேன்... எங்க தேடியும் உனக்கு புடிச்ச மாதிரி பொண்ணு கிடைக்க மாட்டேங்குது...ஆனா அவனுக்கு கல்யாணமே முடிஞ்சு போச்சு...
என் அக்கா ராஜி லவ் மேரேஜ் பண்ணிகிட்ட போதும் , எங்க அப்பா சொத்தை சரி பாதியா பிரிச்சு , அவளுக்கும் ஒரு பங்கு கொடுத்ததை இப்ப வரைக்கும் என்னால ஏத்துக்கவே முடியல ....
நான் படிக்கிற காலத்துல கூட வெளியூர்ல போய் படிக்காம குன்னூர் எஸ்டேட்டை பூதம் காக்கிற மாதிரி காத்துக்கிட்டு இருந்தேன் ...
ம்ஹூம்....என்ன செஞ்சு என்ன ... இப்ப நம்ம குன்னூர் எஸ்டேட்ல பாதி அவ பேர்ல இல்ல இருக்கு ...." என்று பர்வதம் குமுற
" அம்மா, பொய் தான சொல்ற... உனக்கு பெரியம்மா மாதிரி படிப்பு ஏறல… அதனால குன்னூர்லயே குப்பை கொட்டின..."
என சமயம் பார்த்து சித்தார்த் வார, அதனை பொறுக்கமாட்டாமல் பர்வதம் ஓங்கி அவன் தலையில் கொட்டிவிட்டு
" ரெண்டு நாளைக்கு முன்னாடியே இங்க வந்து எதுவுமே செய்யாம வெறுமனே தின்னு தின்னு தூங்கிகிட்டு இருந்திருக்க ...
அவங்க ரெண்டு பேரோட பிரச்சனை என்னன்னு கூட உன்னால கண்டுபிடிக்க முடியல ...
நீ கல்யாணத்துக்கு மட்டுமில்ல வேற எதுக்குமே லாயக்கில்லை ..." என சித்தார்த்தை திட்டித் தீர்த்தார்.
" பெரியம்மா கிருஷ்ணாவுக்கு பார்த்த மாதிரி அழகான பெண்ணை நீ பார்த்து வச்சிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்... நீயும் பார்த்தியே பவழமலை எஸ்டேட் பொண்ணு... சகிக்கல ... பொண்ணா அது... பேய் மாதிரி இருந்தது..."
என பதிலுக்கு தன் காட்டத்தை சித்தார்த் தெரிவிக்க,
" ராதாவை போல அழகா இருந்தா போதுமா அந்தஸ்து வேணாமா .... ஒரு பரதேசிய இல்ல என் அக்கா கிருஷ்ணாவுக்கு கட்டி வச்சிருக்கா..."
என கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றபடி தன் கருத்தை பர்வதம் தூக்கிப் பிடித்துவிட்டு
" அந்த ரேஷ்மி அழகா இருக்கா, பணக்காரின்னு வேற போன்ல சொன்ன...அவளையே நீ கட்டிக்கிட்டா என்னடா ..."
என பர்வதம் கேட்ட மாத்திரத்தில் சித்தார்த்துக்கு கோபம் தலைக்கேறி
" அவ ஒரு அடங்காப்பிடாரி என் எதிர்லயே கிருஷ்ணாவை கட்டிப்புடிச்சு ரெண்டு தடவை முத்தம் கொடுத்திருக்கா... " என படபடத்தவனிடம்
" அப்ப அவளை வச்சே , கிருஷ்ணாவோட கல்யாணத்த உடைச்சு காட்டறேன் பாரு..." என தொடை தட்டாத குறையாக சவால் விட்டார் பர்வதம்.
"அம்மா நீ கூனியும் சகுனியும் கலந்த காம்பினேஷன் ... கலக்கு " என்றான் சித்தார்த் மிகுந்த மகிழ்ச்சியோடு.
இவ்விருவர்கிடையே நடைபெற்ற உரையாடலை கண்டு கொள்ளாமல் ,மூன்று தட்டு காராசேவையும் ரெண்டு தட்டு முறுக்கையும் காலி செய்து கொண்டிருந்தார் தியாகராஜன்.
அவருக்கு வாய் இருப்பதே சாப்பிடுவதற்கும் கொட்டாவி விடுவதற்கும் தான்.
பர்வதம் எதைக் கூறினாலும் பூம்பூம்மாடு போல் தலையாட்டுவார் அதனால் அவருக்கும் சேர்த்தே பர்வதம் பேசிவிடுவார்.
மறுநாள் நடக்கவிருக்கும் தன் திருமண வரவேற்பிற்காக, மெஹந்தியை முழங்கை வரை இரு கைகளிலும் வரைய காண்பித்துக் கொண்டிருந்த ராதா, மெல்ல மகியிடம்,
" அக்கா, நேத்து ரேஷ்மி கடைசியா கிளம்பும் போது மராட்டில கிருஷ்ணா கிட்ட ஏதோ சொன்னா ...அதுக்கு அவரும் என்னை காட்டி ஏதோ மராட்டில பதில் சொன்னாரே...என்னக்கா ரெண்டு பேரும் பேசிக்கிட்டாங்க ..."
என ஆவலோடு கேட்டவளை அதே ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டே,
" ரேஷ்மி கிருஷ்ணா கிட்ட, ஒரு வேளை நீங்க ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவு செஞ்சீங்கன்னா முதல்ல என் ஞாபகம் தான் உங்களுக்கு வரணும்னு சொன்னா ...அதுக்கு கிருஷ்ணா தம்பி, என் வைஃப்வோட கலந்து பேசாம எந்த முடிவும் நான் எடுக்கறது இல்ல.... அப்படி ஒரு எண்ணம் வந்தா அவளோட கலந்து பேசிட்டு முடிவு சொல்றேன்னு சொல்லிச்சு.." என்றதை கேட்டதும் ராதாவின் கண்ணில் காதல் மின்ன ,
"நிஜமாவா அக்கா " எனக் கேட்க, ஆமாம் என்பது போல் புன்னகை பூத்தாள் மகி.
மனம் நிறைய காதலுடன் மெஹந்தியை போட்டுக்கொண்டு, அவள் அறையை அடையும் பொழுது, மணி பதினொன்றை தொட்டிருக்க, கிருஷ்ணா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
ஒரு நிமிடம் நின்று, வளர்ந்த குழந்தை அயர்ந்து தூங்குவது போல் தூங்கிக்கொண்டிருந்தவனை ரசித்து பார்த்து விட்டு உறங்குவதற்காக தன் திவானுக்கு சென்றாள்.
மறுநாள் அதிகாலையில், ராதாவும் கிருஷ்ணாவும் குடும்பத்திலுள்ள அனைவருடன் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு , சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை முறையாக பதிவு செய்தனர்.
ராதா வாடாமல்லி நிற பட்டுப்புடவையில் அச்சில் வார்த்த தங்கம் போல் மிளிர, கிருஷ்ணா பட்டு வேட்டி சட்டையில் கம்பீரத்துடன் காணப்பட்டான்.
இவ்விருவரையும் இரண்டு ஜோடிக் கண்கள் பொறாமையாக பார்த்துக் கொண்டிருந்தது.
வேறு யார் சித்தார்த்தும் பர்வதமும் தான்.
மாலையில் வெகு சிறப்பாக நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நடக்க, அதில் கிருஷ்ணாவின் நண்பர்கள், உடன் பணிபுரிவோர், ராஜேஸ்வரியின் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் சண்முகம் குடும்பத்தினர் என அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
சிறு ஒப்பனையிலேயே மிளிரும் ராதா, அன்று அழகுக்கலை நிபுணர்களின் கைவண்ணத்தால் விண்ணுலக தேவதை போல் காட்சி அளித்தாள்.
கண்களை உறுத்தாத அழகிய லவண்டர் நிறப் புடவையை, குஜராத்தி பெண்கள் உடுத்துவது போல் உடுத்தியிருக்க, அவளருகில் அவளுக்கு பொருத்தமாக அதே மெல்லிய நிறத்தில் கோட் சூட் அணிந்து ஆண்மையின் மறு உருவமாக காட்சியளித்தான் கிருஷ்ணா.
ராதாவின் காதுபடவே, கிருஷ்ணாவிடம் அவனது நண்பர்கள் அவனை அதிர்ஷ்டசாலி என புகழ, சந்தோஷப் பட வேண்டிய நாயகனும் நாயகியும் எதையும் ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் தங்கள் உலகிலேயே பயணித்து கொண்டிருந்தனர்.
" உன் அப்பா, தங்கச்சி இங்க இல்லையேன்னு உனக்கு வருத்தமாவே இல்லையா ...
நீ இவ்ளோ நகைகளை ஒண்ணா பார்க்குறது , இதானே முதல் தடவை..."
என்பன போன்ற அரிய வசனங்களை அவள் மனம் நோகும் படியாக அவ்வப்பொழுது பர்வதம் பேசிக் கொண்டுதான் இருந்தார்.
இவ்விழாவில் தன்னுடைய தங்கையும் தந்தையும் இல்லையே, என அவள் வருந்தினாலும், எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை எண்ணிப்பார்த்து, அவர்கள் இல்லாமல் இருப்பதே நல்லது என்ற முடிவுக்கும் வந்திருந்தாள் .
இரவு திருமண வரவேற்பு முடிந்த நிலையில் , ராதா ராஜேஸ்வரியின் உடல் நலம் விசாரித்துவிட்டு, கிருஷ்ணாவின் அறைக்குள் நுழையும் பொழுது தான், அவன் கையிலிருக்கும் பொருளை பார்த்துவிட்டு ஒரு நிமிடம் அப்படியே உறைந்து நின்று விட்டாள்.
அவள் வருவதற்கு பத்து நிமிடத்திற்கு முன் அறைக்கு வந்தவன், அவனுடைய மேல் சட்டையை கழற்றி விட்டு , அலமாரியில் வேறு ஏதோ தேடும் பொழுது, சுவாதியுடன் அவன் எடுத்துக்கொண்ட புகைப்படம் கீழே விழுந்து நொறுங்க, நொறுங்கிய புகைப்படத்தை கையில் ஏந்தியபடி ஏதோ நினைவாக அன்றைய தேதியை காலண்டரில் பார்த்தவனுக்கு மனம் படபடத்து போனது.
சுவாதியின் நினைவு தினம் அன்று.
சுவாதியை முதன்முதலா சந்தித்த நாள் ,
பிறகு ஓரிரு தருணங்களில் அவர்களுக்கிடையே நிகழ்ந்த மோதல்கள், வேறு சில சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட புரிதல்கள், பின் அவனே அவளுக்கு
பயிற்சித் தலைமையாய் வரும் போது ஏற்பட்ட காதல்....
அதன் பின் தொடர் சந்திப்புகள் ...
பிறகு இரு குடும்பத்தினரின் சம்மதத்தோடு கோலாகலமாக நடைபெற்ற நிச்சயதார்த்தம் ... என
படிப்படியாய் ஒவ்வொரு நிகழ்வுகளும் அவன் மனதில் மையம் கொள்ள தொடங்கின.
சுவாதிக்கு ஒரு தமக்கை உண்டு. அவளுக்கு சொந்த அத்தை மகனையே திருமணத்திற்காக பேசி நிச்சயம் முடித்திருந்தனர்.
அவனும் இந்திய பாதுகாப்பு படையில் பணி புரிந்தான். அவன் போருக்கான பிரத்தியேக பயிற்சியில் ஈடுபட்டிருந்தான். அது முடிய 4 மாத காலங்கள் ஆகும் என்பதால் அதன் பிறகு அவர்களுடைய
திருமணத் தேதியை குறித்திருந்தனர்.
அந்நிலையில் சுவாதியின் காதலும் வீட்டுக்கு தெரியவர, தற்பொழுது நிச்சயதார்த்தத்தை முடித்துக்கொண்டு
அவளது தமக்கையின் திருமணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு வார இடைவெளியில் சுவாதி- கிருஷ்ணா திருமண தேதியை வைத்துக்கொள்ளலாம்
என அவர்கள் குடும்பத்தினர் கூற,
ராஜேஸ்வரியும் திருமணநாள் குறிப்பதற்காக கிருஷ்ணா , சுவாதியின் ஜாதகங்களை ஜோசியரிடம் பொருத்தம் பார்க்க எடுத்துச் சென்றார்.
கிருஷ்ணாவிற்கு இரு தார தோஷம் இருப்பதால், ஒரு நான்கு மாதம்
திருமணத்தை தள்ளிப் போடுவது நல்லது , மேலும் இந்தப் பெண்ணிற்கும் (சுவாதி) ஒரு வித ஆயுள் கண்டம் உள்ளதால், நான்கு மாதத்திற்கு பிறகு திருமணம் நடத்துவதுதான் சிறப்பு
என்று ஜோசியர் கணித்ததோடு, திருமணத்திற்கு முன்பு ஒரு முறை தம்பதிகள் ஹரித்துவாரில் இருக்கும் பார்வதி தேவியை தரிசித்து வருவது பரிகாரமாக இருக்கும் என முடித்தார்.
அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதால், நான்கு மாதத்திற்கு பிறகு சுவாதி கிருஷ்ணா திருமணத்திற்கு நாள் குறித்தனர்.
திருமண நிச்சயத்திற்கு பிறகு, இருவருக்கும் எதேச்சையாக பணிச்சுமை கூட, ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள இயல்பான தருணங்களை கூட ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அது இருவருக்குமே ஒருவித கடினத்தை கொடுத்திருந்தாலும் கிருஷ்ணாவுக்கு ஒருவித பாதுகாப்பு தன்மையை கொடுத்தது என்றே சொல்லலாம்.
நிச்சயம் நடந்த பிறகு, அவன் மனம் அதிகம் அலைப்பாய ஆரம்பித்திருந்தது.
இருவருமே சமூகத்தில் முக்கிய பணியில் இருப்பவர்கள். அவர்களது பாதுகாப்பு குழுவிலும் அவர்களுக்கென்று ஒருவித மரியாதை இருக்கவே செய்தது.
இரு குடும்பத்திற்கும் இடையே பரஸ்பர மரியாதையும் நட்பும் நிலவியிருந்த நிலையில், தனிமையான சந்திப்புகள் இருவரின் கண்ணியத்திற்கும்
கரும்புள்ளியை ஏற்படுத்திவிடும் என்பதால் திருமணத்திற்கு முன்னர்
சந்திக்காமல் இருப்பது நல்லது
என்ற நிலையில்தான் இருந்தான் கிருஷ்ணா.
முதல் இரண்டு மாதம் அவன் திட்டப்படி அனைத்தும் சரியாகச் சென்றது. அதன் பின் ஒரு இரண்டு நாள் விடுப்பு இருவருக்குமே கிடைக்க, சுவாதி
அவனை தொடர்பு கொண்டு
திருமணத்திற்கு முன்பு ஒரு முறையேனும் ஹரித்வாரில் இருக்கும் சண்டி தேவியை தரிசனம் செய்துவிட்டு வந்துவிடலாம் என வருந்தி அழைக்க,
தெய்வ பக்தியை விட தேசபக்தி தான் சிறந்தது என்ற நம்பிக்கை உள்ளவன் என்றாலும் ஏதோ ஒரு சக்தி உந்த,
வேறு வழியில்லாமல் காதலியின் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்து அவளுடன் ஹரித்வாருக்கு பயணமானான்.
பனி சூழ்ந்த இமயமலைத் தொடரில்,
சிவலிக் குன்றில் பார்வதி தேவியின் மறு பெயரான சண்டி தேவி வீற்றிருந்தாள்.
அந்த அன்னையின் முகத்தை காணக்கிடைக்காத பொக்கிஷமாய் கண்டு, மனம் முழுவதும் நிரப்பிக் கொண்டவளுக்கு பக்தி பெருக்கெடுத்து ஓட, அர்ச்சகர் அவர்களுக்கான பரிகார பூஜையை முடித்து ஆழ்ந்த சிவப்பு நிற குங்குமத்தை பிரசாதமாக தரும் பொழுது திடீரென்று ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்த
" க்ரிஷ்.... இந்த சிந்தூர என் நெத்தி உச்சில வச்சு விடுங்களேன் ..." என
கண்களில் காதல் வழிய அவன் நாயகி கேட்க, ஒருகணம் தடுமாறித்தான் போனான்.
அவனுக்கு ஜோசியம் ஜாதகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றாலும், இரு தார தோஷம் இருப்பதால் இந்த நான்கு மாதத்திற்குள் தன்னை மணந்து கொள்ளும் பெண்ணிற்குப் ஆயுள் இருக்காது என்று அவன் அன்னையின் வாயிலாக ஜோசியர் கூறியது தெரிய வந்ததிலிருந்து ஒருவிதத் தடுமாற்றம் அவனிடம் இருக்கவே செய்ய
அதை நினைவு கூற அவன் முயலும் போதே,
" ப்ளீஸ் க்ரிஷ் , ஏனோ இந்த மாதிரி ஒரு மொமன்ட் திரும்பவும் வராதுன்னு தோணுது ..." என்றவளின் குரல் உணர்ச்சிப் பெருக்கில் தழுதழுக்க,
அதற்கு மேல் சற்றும் தாமதிக்காமல் தமிழக இந்துக்களின் திருமண சடங்குகளில் மணமகன் மணமகளுக்கு தாலி அணிவிப்பது தான் திருமணத்தின் உச்ச நிலை என்பது போல் பஞ்சாபி திருமணத்தில் மணமகன் மணமகள் உச்சிப் நெற்றியில் சிவப்பு நிற குங்குமத்தை வைப்பதுதான் சிந்தூர் தான் (Sindhoor dhaan) ,எனப்படும்
உச்ச நிலையாகும்.
சிவப்பு குங்குமத்தை அவள் வகுட்டில் இட்டு, அவள் சுடிதார் துப்பட்டாவை தலையில் போர்த்தி
பஞ்சாபி முறைப்படி, அங்கிருந்த பார்வதிதேவியை மட்டும் சாட்சியாக வைத்து தன் காதலியை தன் சரிபாதி ஆக்கிக் கொண்டான்.
அன்றைய இரவு அவர்களுக்கு சோபன இரவாக அமைந்தது .
பனிப்பொழியும் காலநிலை காரணமா அல்லது அவர்களுக்கிடையே நடந்த கந்தர்வ திருமணம் காரணமா...
ஏதோ ஒன்று ஏற்படுத்திய பிணைப்பு,
இருவரையும் இணைத்து வைத்தது.
அதன் பிறகு இருவருக்கும் மீண்டும் பணிச்சுமை கூடி போக,
தொலைபேசியில் மட்டுமே உரையாடிக் கொண்டனர்.
கடைசி தினம் அவள் ஜெட் விமானத்தில் பயணிப்பதற்கு முன்பு
"கிருஷ்... இன்னிக்கு தான் நான் ஜெட்ல கடைசியா ட்ராவல் பண்ண போறேன் ... ஏன் கடைசின்னு சொல்றேன்னு நினைக்கிறீங்களா...
வந்து சொல்றேன்.... வெரி குட் நியூஸ்... நீங்க கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவீங்க... பை பை ..." என அவன் பதிலுக்கு காத்திராமல் அவன் சுவாதி பேசிவிட்டு சென்றது, அப்போது பேசியது போல் தெளிவாக அவன் காதுகளில் ஒலிக்க,
அதை எண்ணி துடித்து அழுதான்.
அவள் சொல்லாமல் விட்டு சென்ற அந்த சந்தோஷமான செய்தி, ஜெட் விமானம் வெடித்துச் சிதறிய போது, கடைசியாக கிடைத்த அவள் உடல் பாகங்களை உடற்கூறாய்வு செய்யும் போது கிடைத்தது.
அவள் கிட்டத்தட்ட 50 நாள் கர்ப்பம் என்ற செய்தியே அது ... அவளையும், முகமறியா அவன் குழந்தையையும் இழந்த நாள் அல்லவா இன்று ...
" எப்படி மறந்து போனேன் ...
என மனம் நொந்த படி அவள் புகைப்படத்தை கையில் வைத்து வருந்திக் கொண்டிருக்கும் போது, ராதா அதனைப் பார்த்துவிட்டு அப்படியே சிலையாய் நின்றுவிட்டாள்.
இந்த மாதிரி பாதில போயிடுவோம்னு தெரிஞ்சுதான்,
திடீர் கல்யாணம், ஒரு நாள் வாழ்வுன்னு அதிரடியா வாழ்ந்துட்டு போய்டியா .... ஆனா நான் இங்க தினம் தினம் செத்துகிட்டு இருக்கேன்டி..."
என அவளது ஒவ்வொரு நினைவு நாளிலும் அவன் நினைப்பதுண்டு.
அன்று முழுவதும் சுவாதியே அவன் மனதில் நிரம்பி வழிவாள். எந்த வித இனிப்பையும் புசிக்க மாட்டான். மனம் அவளுடன் வாழ்ந்த ஒவ்வொரு நொடியையும் அசை போட்டு பார்க்கும். அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்த அந்த ஓர் இரவின் ஒவ்வொரு நொடியும் மனக்கண்முன் வந்து போகும் ..
அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவனுக்கு வேதம்,மனப்பாடம்.
சுவாதியின் தாய்மொழி பஞ்சாபி என்றாலும் அவர்களிருவரும் அதிகமாக உரையாடியது ஹிந்தியில் தான். அவள் பாடிய ஹிந்தி பாடல், அவர்கள் இருவரும் பேசி மகிழ்ந்த தருணங்கள் என அனைத்தும் அவன் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கும்.
ஆனால் இந்த நினைவு நாள்,
அனைத்தையும் மாற்றி இருந்தது.
இன்று காலையிலிருந்து அவனுடைய நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தது, விருந்து உண்டது என அனைத்தையும் நினைத்து பார்த்து அவன் மனம் ஏகத்துக்கு வருத்தம் கொண்டது.
ஒரு வேளை ராதாவால் சுவாதியை மறந்தேனா என தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டவனுக்கு பதில் கிடைக்கவில்லை ஆனால் ராதாவை நிச்சயம் வெறுக்கவில்லை என்பதை மட்டும் அவன் ஆழ் மனம் அடித்துக் கூறியது.
ராதா அறையினுள் வந்தது ,குளியலறைக்குச் சென்று உடை மாற்றியது, போன்ற எந்த நிகழ்வும் அவன் புறக்கண்களுக்கு எட்டவில்லை. அவன் சுவாதியுடன் வாழ்ந்த நாட்களை மனதில் அசை போட்டு பார்த்துவிட்டு
"மேகம் மாதிரி வந்துட்டு .... உடனே கலைஞ்சு போயிட்டியே டி ..."
என மன உளைச்சலில் மருகியவன் கடைசியில் ஒரு வழியாக உறக்கத்தைத் தழுவினான்.
நேற்று தான் இவர் சுவாதியை மறந்து விட்டார் என எண்ணினோம்,ஆனால் அவள் இன்னமும் இவர்
மனதில் சம்மணம் போட்டு அல்லவா அமர்ந்திருக்கிறாள்.
சுவாதி கொடுத்து வைத்தவள், இப் பூவுலகில் இல்லை என்றாலும் அவர் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள், ஆனால் நானோ அவர் மனைவியாகி அருகில் இருந்தும் வாழாமல் இருக்கிறேன். 'நான் வாங்கி வந்த வரம் அது ' என விதியை நொந்தவாறு உறங்கிப்போனாள் ராதா.
கண்ணனைத் தேடி .....