- Joined
- Jul 21, 2025
- Messages
- 544
- Thread Author
- #1
முகப்புரை:
(கதை இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் துவங்குகிறது. இரட்டை கோபுர தாக்குதல், வொய்2கே(Y2K) கணினி பிரச்சனை,கார்கில் போர்,அப்போதுள்ள கைப்பேசி (நோக்கியா 1100) என அக்காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை கதையின் ஓட்டத்தில் காணலாம்).

அத்தியாயம் 1
விடிந்தும் விடியாத காலை நேரம்.
ராதா,தூக்கம் விலகாத கண்களோடு தன் அருகில் இருந்த அலாரத்தை பார்த்தாள்.
அது அலற இன்னும் பத்து நிமிடம் இருந்தது.
ராதாவிற்கு இது ஓன்றும் புதிதல்ல. எவ்வளவு நேரம் கழித்து உறங்கினாலும் அதிகாலையிலேயே விழிக்கும் பழக்கம் கொண்டவள் .
இது ஒன்றும் கொள்கை அல்ல ... அவளது வாழ்க்கை சூழல் அப்படி.
இதோ ராதாவின் குடும்பம் பற்றி...
ராதாவின் பெற்றோர் காதல் திருமணம் புரிந்தவர்கள்.
திருமணத்தற்கு பிறகு பெரிதாக புரிதல் இல்லை என்றாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சில பிரச்சனைகளோடு வாழ்க்கை ஒடின.
ராதாவின் தாயார் சுந்தரி , பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்.
கோயமுத்தூர்க்கு அருகே உள்ள பொள்ளாச்சியில் பிறந்து வளர்ந்தவர் . அழகானவர், குணசாலியும் கூட.
அவளது தந்தை சுந்தரம், அந்த ஊரின் தாசில்தாரராக பணி புரியும் போது ஒரு முறை ராதாவின் தாயார் சுந்தரி படிக்கும் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கபட்டிருந்தார்.
சுந்தரிக்கு கவிதை, இலக்கியம் என்றால் மிகவும் பிடிக்கும். ராதாவின் தந்தை சுந்தரத்தின் இலக்கிய நடை மற்றும் தமிழ் புலமையின் பால் முதல் பார்வையிலேயே பெரிதும் ஈர்க்கபட்டார் சுந்தரி.
தமிழ்ப்புலமை மட்டுமல்ல, அவரின் நடை உடை பாவனையாலும் பெரிதும் வசீகரிக்கப்பட்டார்.
பிறகு காதல் பிறப்பதற்கு காரணமா வேண்டும், சுந்தரி , சுந்தரத்தின் இலக்கிய திறமையைப் பாராட்டி பேச, பெயர் பொருத்தமும் சேர ,சந்திப்புகள் தொடர ஆரம்பித்து, கடைசியில் வீட்டை எதிர்த்துக்கொண்டு திருமணம் செய்யும் நிலை வந்தது.
திருமணத்திற்கு பிறகு, கோயமுத்தூரில் வாழ்க்கையை தொடங்கினர்.
சுந்தரம் அடிப்படையிலேயே முன்கோபக்காரர் என்றாலும் தொழில்முறையில் மிகவும் நேர்மையானவர்.
திருமணமான ஒரு வருடத்திலேயே ராதா பிறக்க , மூன்று வருடம் கழித்து பிறந்தவள் தான் சுதா.
ராதா தாயைப் போன்ற அழகும், குணமும் பெற்றிருக்க , சுதாவோ அனைத்திலும் தந்தையை கொண்டிருந்தாள். அவள் கல்லூரியிலேயே படிப்பிலும், உயரத்திலும் முதல் மாணவியாக திகழ்ந்தாள் தந்தையைப் போல முன்கோபியாகவும் இருந்தாள்.
ராதா, சுந்தரியை போன்றே அழகான மஞ்சள் மேனியையும் , சற்று குறைவான உயரத்தையும், பூசினாற் போன்ற உடல்வாகும் உடையவள்.
சுதா மாநிறமாக இருந்தாலும், கவர்ச்சியான முகமும், மெல்லிய உடல்வாகும் கொண்டவள்.
ராதா 85 விழுக்காடு எடுத்தால், சுதா 95 விழுக்காட்டிற்கு குறைய மாட்டாள். சுதா ராதாவை போன்று இலக்கியம், நாடகம் போன்றவற்றில் விருப்பமில்லாமல் சதா படிப்பே கதியாக இருப்பவள்.
ராதாவிற்கு தாய் ,தந்தை, தங்கை என்றால் உயிர், சுதாவிற்கு குடும்பத்தின் மேல் பிரியம் இருந்தாலும், தந்தையைப் போன்றே அதனை அதிகம் வெளிப்படுத்திக் கொள்ள மாட்டாள்.
அரசாங்க சம்பளமும், ஓரளவு வங்கி கையிருப்பும், சிறிய சொந்த வீடுமாய் வாழ்க்கை நிம்மதியாய் சுழன்று கொண்டிருந்தது, சுந்தரி நோயில் விழும் வரை.
அவருக்கு வந்த கர்ப்பப்பை புற்றுநோயால், சுந்தரத்திற்கு பதவி ஓய்வு கிடைத்து போது வந்த பணி ஓய்வு தொகை மற்றும் வங்கியிருப்பு வெகுவாக கரைந்ததோடு, சொந்த வீடும் அடமானத்திற்கு சென்றுவிட்டது.
என்னதான் சுதா உபகாரச் சம்பளம் பெற்று மூன்றாம் ஆண்டு மருத்துவ இளநிலை படித்துக் கொண்டிருந்தாலும், அவளது கடைசி இரண்டு ஆண்டு படிப்பிற்காக 30 ஆயிரம் ரூபாய் மட்டும் வங்கி இருப்பாக இருந்தது.
பணம் செலவு செய்தும், சுந்தரி இறந்தது சுந்தரத்தை மனதளவில் வெகுவாக பாதித்தது.
ராதா தனது இறுதியாண்டு எம்சிஏ படிப்பை முடித்து வேலைக்காக காத்திருந்த சமயத்தில் தான் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் ஏற்பட்டு அனைத்து தகவல் தொழில்நுட்பத் துறையும் பெரும் சரிவை சந்திக்க,
வேறுவழியில்லாமல், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி அமையாமல், அந்த ஊரின் தலை சிறந்த கல்லூரியில் விரிவுரையாளராக தன் பணியினை தொடங்கினாள்.
அவளது புத்திகூர்மையும், பாடம் நடத்தும் விதமும், மாணவர்களை அணுகும் முறையும், குறைந்த காலத்திலேயே அவளை உடன் பணிபுரியும் ஆசிரியைகள் முதல் கல்லூரி முதல்வர் வரை அனைவரின் நன்மதிப்பையும் பெற்று சிறந்த ஆசிரியையாக அடையாளம் காட்டின.
ராதாவின் தாயார் சுந்தரி இறந்து, ஆறுமாதம் ஆன நிலையிலும், சுந்தரம் தன்னை எந்நிகழ்விலும் ஈடுபடுத்திக் கொள்ளாமல், வாழ்க்கையை வெறுத்து நாட்களை நகர்த்திக் கொண்டிருக்க,
இந்நிலையில்,
குடும்பத்தின் மொத்த சுமையும் ராதாவின் தலையில் விழ, அவளது சம்பளம் குறைவு தான் என்றாலும், தந்தையின் ஒய்வூதியத்தோடு அது குடும்பம் நடத்துவதற்கு போதுமானதாகவே இருந்தது.
அவள் தந்தை சுந்தரம் அசைவம் சாப்பிடும் பழக்கம் கொண்டிருந்தாலும் , தாய் சுந்தரி சைவம் என்பதால் வீட்டில் சைவ உணவுகளையே பின்பற்றினர்.
சுந்தரிக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். அதுவும் அந்த கார்மேகக் கண்ணன் என்றால் சொல்லவே வேண்டாம்.
நாள்தோறும் அவனைப் பற்றி பாசுரங்கள் பாடி, பூஜைகளை முடித்த பின்புதான் மற்ற வேலைகளையே செய்வார்.
ராதாவும் தாயைப் போலவே ,பாசுரங்களை பாடி பூஜைகளை முடித்த பின்பு அன்றைய காலை மற்றும் மதிய வேளைக்கான உணவினை தயார் செய்து வைத்து விட்டு தனக்குத் தேவையான உணவினையும் எடுத்துக்கொண்டு கல்லூரிக்கு புறப்படுவதை வழக்கமாக்கி கொண்டிருந்தாள்.
எப்பொழுதையும் விட வழக்கத்துக்கு மாறாக, அன்று கல்லூரிக்கு பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தாள் .
அவளது கல்லூரியில், தகவல் தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் செயல்முறை விளக்கத்தை முதன்முறையாக அவள் தலைமையேற்று நடத்துவதால் வந்த பதற்றம் அது.
உலர்ந்த நீளமான தலைமுடியை, தளர பின்னி, இளநீல நிற காட்டன் புடவையை அணிந்து, சிறிது ஒப்பனை செய்து, நிலைக்கண்ணாடியை பார்த்து திருப்தி அடைந்தவளாய் கல்லூரிக்கு தயாரானவள்
" அப்பா, பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச் ரெண்டும் ஹாட் பேக்ல இருக்கு.. சுதா எழுந்ததும் நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க... " என்று கூறிவிட்டு வாயிற்படியை அடையும் போது
" அப்பா, இன்னிக்கு வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகும் " என்றபடி சுந்தரத்தின் பதிலுக்கு காத்திராமல், பேருந்து நிலையத்தை நோக்கி நடை போட்டாள் .
சிறியவள் படிப்பை முடிப்பதற்காக, பெரியவளை பணயம் வைக்கிறேனே, என்ற குற்ற உணர்வுடன் சுந்தரம் அமைதியாக தலையை அசைத்தார்.
கண்ணனை தேடி....